இந்த உலகத்துல பிறந்த எல்லாருக்கும் ஒவ்வொரு குணம் பண்பு இருக்கும் அத நம்ப கண்டுபிடிக்க ஒரு சில வழிகள் இருக்கு அதுல முக்கியமான ஒரு வழிதான் இந்த blood group ஆமா guys உங்களோட blood group மூலமாவே நீங்க நீங்க யாரு உங்களோட character என்ன அப்டின்ற விஷயத்த ஓரளவுக்கு சொல்லிட முடியும் இந்த அற்புத விஷயத்தை ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் பேராசிரியர் டோகேஜி ஃபுருகவா (Tokeji Furukawa) என்பவர்தான் ஆய்வு செய்து வெளியிட்டார். இதற்கு அவர் Ketsueki-gata என்று பெயர் வைத்தார். அவரின் ஆய்வுப்படி நீங்கள் எந்தவகை குணம் கொண்டவர் என்று பதிவுல பாக்க போறோம்.
A வகை ரத்தம் கொண்டவர்கள் : இவர்கள் இலகுவான குணம் கொண்டவர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். பொறுமையானவர்கள். அன்பானவர்கள். தான் எந்த ஒரு விஷயம் செய்தாலும் நன்கு யோசித்து தீர்க்கமான முடிவாக எடுப்பார்கள். சுத்தம், சுகாதாரம் ஒழுக்கம் இவைதான் இவர்களின் மூச்சு. இவர்களை எளிதில் காயப்படுத்திவிட முடியும். யாரிடமும் அதிகம் பேச மாட்டார்கள். தனிமை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
B வகை ரத்தம் கொண்டவர்கள் : கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்கள். எதையும் சட்டென முடிவெடுத்து செய்வார்கள். அந்த முடிவில் உறுதியாகவும் இருப்பார்கள். எதற்கும் துணியும் சாகசங்களை விரும்பும் நபர். சுருசுருப்பாக இருப்பார்கள். வாழ்க்கையில் மற்றவர்களால் நிறைய வேதனைகளை அனுபவித்திருப்பார்கள். சுயநலம் , பொறுப்பின்மை, ஒத்துழைக்காத குணங்களால் மற்றவர்களிடம் வெறுப்பை சம்பாதிப்பார்கள்.
AB வகை ரத்தம் கொண்டவர்கள் : இவர்கள் A மற்றும் B வகை குணங்களைக் கலந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போது எப்படி இருப்பார்கள் என்பதை கண்டறிவதே சிக்கல். இவர்களை எளிதில் புரிந்துகொள்ளவே முடியாது. அவர்களுடன் நீண்ட காலம் வாழ்ந்து முழுமையாக பழகினாலே அவர்களின் குணத்தை புரிந்துகொள்ள முடியும். வெளி நபர்களுக்கு அவர்களை புரிந்துகொள்வது கடினம். அதேபோல் இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் உலக அளவில் மிகக் குறைவு. எளிதில் நட்பு வட்டத்தை உருவாக்குவார்கள். எப்போதும் கூலாக , அக்கறையாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் கவலைகளால் சோர்ந்து இருக்க மாட்டார்கள். அதேசமயம் பொருப்பில்லாமல் இருப்பார்கள், மறதி , மன்னிக்காத குணம் அதிகம் இருக்கும்.
O வகை ரத்தம் கொண்டவர்கள் : இவர்கள் அதிக நம்பிக்கை குணம் கொண்டவர்கள். தலைமைப் பண்பு, ஆளுமை திறன், நேர்மை அதிகம் இருக்கும். இதனால் மற்றவர்களுக்கு சுயநலம் கொண்டவர்களாகத் தெரிவார்கள். குறிப்பாக A வகை ரத்தம் கொண்டவர்களுக்குத் சுயநலமாகத் தெரிவார்கள். அதிக அன்பு, இலகிய மனம் கொண்டவர்கள். எதையும் சட்டென புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள். எதையும் பெரிதாக குழப்பிக்கொள்ளாமல் சாதாரணமாகக் கடந்து செல்வார்கள். எப்போதும் பாசிடிவான தோற்றம் கொண்டவர்கள். சுதந்திரமானவர்கள், தன்னிச்சையாக முடிவெடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேசமயம் இவர்களுக்கு பொறாமை குணமும் கொஞ்சம் அதிகம்.
A+ இரத்த வகை:
A இரத்த வகையில் உள்ள அனைத்து குணங்களும் A+ இரத்த வகைக்கு உண்டு என்றாலும். A இரத்த வகையை விட A+ இரத்த வகையின் ஆற்றலானது இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கும். அனைத்து விஷயங்களை மிக எளிதாக செய்து முடிப்பார்கள்.
A- இரத்த வகை:
A- இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் உள்ள நம்பிக்கையே அவர்களுக்கு குறைவாக இருக்கும். இவர்களிடம் கூச்சசுபாவம் அதிகமாகவே நிறைந்து காணப்படும்.
இருப்பினும் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிக சிறப்பாக செய்து முடிப்பார்கள். இவர்கள் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தமாட்டார்கள்.
B இரத்த வகை:
B இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் அனைத்து விஷயங்களையும் மிக தெளிவாக முடிவு எடுக்கக்கூடியவர்கள். குறிப்பிக்க அனைத்து விஷயங்களிலும் சமுதாயத்தில் இவர்கள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களது மனம் மிகவும் இளகிய மனமாக இருக்கும். இவர்கள் குறிப்பக யாரிடமும் சுயநலகமாக இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் உண்மையானவர்களாக இருப்பார்கள்.
B+ இரத்த வகை:
B+ இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் மிகவும் எதிர்பார்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது மன உணர்ச்சிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். இவர்கள் செயல்படுத்தும் எந்த வேலையாக இருந்தாலும் சரி அவற்றை நேர்மையாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களது காதல், தொழில், கற்பனை, செயல்கள் இவை அனைத்துமே மிக பெரிதாகவே இருக்கும்.
B- இரத்த வகை:
B- இரத்த வகையை சேர்ந்தவர்கள் மிகவும் சுயநலவாதியாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்கமாட்டார்கள், இவர்களுக்கு என்ன தொனிக்கிறது அவற்றை தான் செய்வார்கள். இருப்பினும் இவர்களை சுற்றி இருக்கும் அனைவரையும் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இருப்பினும் உறவு முறை என்று வரும்பொழுது இவர்களிடம் கோவம் அதிகமாக இருக்கும். பொறுமையை இழந்துவிடுவார்கள்.
AB இரத்த வகை:
AB Blood Group பிரிவை சேர்ந்தவர்கள் குணம் எப்படி இருக்குன்னா.. A இரத்த வகை, B இரத்த வகை ஆகிய இரண்டின் கலவையாக தான் இருக்கும். தனித்துவமாக யோசிக்கும் திறன் இவர்களிடம் இருக்கும். இவர்களை புரிந்துகொள்வது என்பது மிகவும் கஷ்டம் அப்படினும் சொல்லலாம். இருப்பினும் இவர்கள் ஒரு விஷயத்திற்கு முடிவு எடுப்பதில் மிகவும் குழப்பம் அடைவார்கள். அனைவரிடமும் எளிதாக பழகிவிடுவார்கள் என்றாலும் நெருங்கிய நண்பர்கள் என்று இவர்களுக்கு அதிகம் இருக்க மாட்டார்கள். இவர்களும் எளிதாக கோவம் கொள்வார்கள், உணர்ச்சிவசப்படுவார்கள்.
AB+ இரத்த வகை:
இந்த பிரிவினை சேர்ந்தவர்கள் எப்பொழுதுமே ஜாலி டைப் என்று சொல்லலாம். இவர்களிடம் ஜாகைச்சுவை திறன் அதிகமாகவே காணப்படும். அனைவரையும் மகிழ்ச்சியக வைத்திருப்பார்கள். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோயம்படமாட்டார்கள். இவர்கள் புதிய புதிய விஷயங்களை செய்ய விரும்புவார்கள். மார்டனாக இருக்க விரும்புவார்கள். உடல் நலத்தில் அதிகம் அக்கறை செலுத்தும் நபராக இருப்பார்கள். அனைவரிடமும் நண்பர்களை போல் பழகுவார்கள்.
AB- இரத்த வகை:
இந்த பிரிவை சேர்ந்தவர்கள் யாராவது தவறு செய்துவிட்டார்கள் என்றால் அந்த தவறை எளிதில் மன்னிக்கவே மாட்டார்கள். இவர்களுக்கு லாபம் தரும் செயல்களை மட்டுமே செய்வார்கள். குற்ப்பிக்க இவர்கள் நண்பர்களிடம் மட்டும் தான் நெருங்கி பழகுவார்கள். இவர்களது உறவுகளை எப்பொழுது மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வார்கள்.
O+ இரத்த வகை:
இந்த O+ இரத்த வகையை சேர்ந்தவர்களிடம் நேர்மை கோணம் அதிகம் நிறைந்து காணப்படும். இவர்கள் குறிப்பாக பொய் சொல்வதை விரும்ப மாட்டார்கள். அதேபோல் பொய் சொல்றவங்களையும் சுத்தமாக பிடிக்காது. உதவி என்று கேட்பவர்களுக்குமு உடனே உதவி செய்யும் குணம் இவர்களிடம் இருக்கும்.
O- இரத்த வகை:
இவர்கள் மிகவும் ஸ்மார்டாக இருப்பார்கள், அதிக உறுதியக இருப்பார்கள். குறிப்பாக யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள். யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பழகிடமாட்டார்கள். இவர்கள் புதிது புதிதாக எதாவது வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களது காலத்தால் வாழ்க்கையில் அன்பை அவ்வளவு எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள்.
O+ மற்றும் O- ரத்த வகை கொண்டவர்களின் ஆளுமை தன்மைகள் பற்றியதாக சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன, குறிப்பாக ஆசிய மற்றும் ஜப்பானிய கலாச்சாரங்களில். இதை அறிவியல் அடிப்படையில் உறுதியாக நிரூபிக்கவில்லை என்றாலும், சில பொதுவான கூறுகள் உள்ளன.
O+ ரத்த வகை: O+ ரத்தம் உலகின் மிக அதிக அளவிலான ரத்த வகைகளில் ஒன்றாகும், மற்றும் O+ குணாதிசயங்கள் உடையவர்கள் பொதுவாக திறம்பட செயலாற்றுபவர்கள், நம்பகமானவர்கள், உற்சாகம் மிகுந்தவர்கள் என்றும் கூறப்படுகிறார்கள். அவர்களுக்கு தீவிர உழைப்பும், தலைமைத்துவப் பண்புகளும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன், நெருக்கமான உறவுகளை மதிக்கின்றனர், நேர்மையான அணுகுமுறையைக் கொண்டவர்கள் எனவும் கருதப்படுகின்றனர்.
O- ரத்த வகை: O- ரத்த வகையினருக்கு “யுனிவர்சல் டோனர்” என்ற சிறப்பு உண்டு, காரணம் அவர்களின் ரத்தம் எல்லா ரத்த வகைவர்களுக்கும் தகுந்ததாகும். எனவே, இந்த ரத்த வகையினருக்கு மற்றவர்களை உதவவேண்டும் எனும் மனப்பாங்கு அல்லது சமுதாய நலன் பற்றிய பிரியம் அதிகமாக இருக்கலாம். அவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதாகவும், சுயாதீனமாகச் செயல்பட விரும்புவதாகவும் நம்பப்படுகிறது. பொதுவாக எதிலும் உழைப்பதும், நிபந்தனையின்றி உதவிசெய்வதும், தன்னம்பிக்கை கொண்ட மனநிலையுடன் தன்னையே சார்ந்த நிலைப்பாடுகளை கொண்டவர்களாகவும் இருக்கலாம்.
இவ்வாறு ரத்த வகைகளின் அடிப்படையில் ஆளுமை கூறல் ஒரு கலாச்சார நம்பிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது; இது அறிவியல் ஆதாரமற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.