why ocean water is salty

அண்டார்டிகாவில் ஓடும் இரத்த ஆறு blood falls antartica in tamil

                அண்டார்டிகாவின் இரத்த ஆறு

blood falls
 
இதுவரை  ஆறு என்றாலே ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் மட்டும்தான் இருக்கும் என்று நாம்  நினைத்திருப்போம் ஆனால் அது பொய் என நிரூபிக்கும் வகையில் உள்ள ஒரு ஆறுதான் அண்டார்காவில் உள்ள இந்த இரத்த(blood falls) ஆறு, இந்த ஆறு உண்மையில் இரத்த ஆறுதானா,இதற்கு பின்னால் இருக்கும் இரகசியம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
 

இரத்த ஆற்றின் பிண்ணனி-blood falls explanation

antartica
 
 
இந்த இரத்த ஆறானது 1911-ஆம் ஆண்டு தாமஸ்  கிரிஃபித் டெய்லர் என்பவரால் கண்டுபிடிக்கபட்டது அன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் இந்த ஆறு  கண்டுபிடிக்கபட்டதால் இந்த சிகப்பு நிறத்திற்கான காரணத்தை கண்டறிய பல காலங்கள் ஆகின.
 
அதுவரை இந்த சிகப்பு நிறத்திற்கான காரணம் நீரில் இருக்கூடிய சிகப்பு பாசிகள் என நம்பபட்டது. இந்த ஆறுக்கான முக்கிய காரணமாக குறிப்பிடுவது பனிக்கு அடியில் 2 மில்லியன் ஆண்டுகளாக ஒரு ஓடையாக இருந்துள்ளது.
 
அப்பொழுது இந்த ஓடையில் மட்டும் கிட்டதட்ட 17 வகையான நுண்ணுயிர்கள் இருந்துள்ளன இவை அனைத்தம் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர்வாழக்கூடியது  என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
அப்படி பனிக்கு அடியில் உயிர்வாழ்ந்த நுண்ணுயிர்களில் இருந்து சல்பர் மற்றும் இரும்பு போன்றவை வெளிவந்துள்ளது. இந்த இரும்பு மற்றும் சல்பர் பனிக்கு அடியில் இருந்து மேலே வரும்போது ஆக்ஸிஜனுடன் வேதிவினைக்கு உள்ளாக்கபட்டு சிகப்பு நிறமாக மாறி இரத்த ஆறாக நம் கண்களுக்கு தோற்றமளிக்கிறது.எனவே இந்த உலகில் நடக்கும் அனைத்து விசயங்களுக்கு பின்னாலும் அறிவியல் உள்ளது ஒரு சிலவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருசிலவற்றை நம்மால் புரிந்துகொள்ளமுடியாமல் உள்ளோம் இதுதான் இயற்கையின் சிறப்பு. 
 
 
                                                                                    நன்றி!