ஜப்பான் பற்றிய உண்மைகள்-japan facts
நம் பூமியில் பல நாடுகள் இருப்பினும் ஜப்பான் ஒரு சிறந்த நாடாகவே விளங்குகிறது.இந்த ஜப்பான் ஆசிய கண்டத்தில் பல தீவுகளால் ஆனது.ஜப்பான் பசிபிக் பெருங்கடலின் மேற்குபகுதியில் உள்ளது.இந்த ஜப்பான் 6852 தீவுகளை உள்ளடக்கியது.இதன் மக்கட் தொகை 12.6 கோடி ஆகும்.ஜப்பான் பொருளாதாரத்தில் 4 ம் இடத்தை பிடித்துள்ளது.வளர்ந்த நாடுகளில் ஒன்று இந்த ஜப்பான் நாடு . இவ்வாறு ஒரு சிறந்த நாடாக பேசப்படுகிறது.இதன் தலைநகரம் டோக்கியா ஆகும்.ஜப்பான் சிறிய நாடாக இருப்பினும் அதன் மக்கள் தொகை அதிகம்.உலகின் மக்கள் தொகை அளவில் 10 ஆவது இடத்தில் உள்ளது ..ஜப்பான் ஒரு தீவு கூட்டம் என்றே அழைக்கப்படுகிறது.ஜப்பான் என்ற பெபெயருக்கு சூரியன் எழும் நாடு என்று பொருள்.
ஜப்பானின் இயற்கை அழிவு
வளர்ந்த நாடுகள் என்று கூறினால் ஒரு சில நாடுகளே .அந்த ஒரு சில நாடுகளில் ஜப்பானும் ஒன்று . ஜப்பான் அதிக அளவு இயற்கை சீற்றத்தை அனுபவுக்கும் நாடாகும் ஏனெனில் இந்த நாட்டில் ஓரு வருடத்திற்கு 1500 நில நடுக்கும் ஏற்படுகிறது .இந்த நில நடுக்கம் ஜப்பானில் எதாவது ஒரு இடத்தில் வந்து கொண்டே இருக்கும் .அதுமட்டுமின்றி அதிக அளவு எரிமலைகள் உள்ளன .அதாவது 145 எரிமலைகள் உள்ளன. அதில் சில எரிமலைகள் திடீரென வெடிக்கும் நிலையில் உள்ளன.இவ்வாறு இருப்பினும் அந்த இடத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . இவ்வளவு ஆபத்து இருந்தும் எரிமலை பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்கள். இவ்வளவு ஆபத்திலும் ஜப்பானிய மக்கள் வாழ்ந்துதான் வருகிறார்கள். இயற்கை இவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது
ஹரோசிமா நாகசாகி
ஜப்பானில் உலகையே அதிர வைத்த மிகப்பெரிய சம்பவமான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது .இந்த நிகழ்விற்கு பிறகு ஜப்பானே நிலைகுழைந்தது. இந்த நாட்டில் பிறந்தவர்கள் தவிர அடுத்து பிறக்கப்போகும் குழந்தைகள் கூட தண்டனை அனுபவிக்கின்றனர் இந்த குண்டுவெடிப்பினால் .உலகை திருப்பிப்போட்ட இரண்டாம் உலகப்போரின் கொடூட சம்பவமான 1945 ல் நடைபெற்ற ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பே காரணமாகும் . அமெரிக்கா ஜப்பான் மீது வைத்திருந்த கோபத்தை அணுகுண்டு செலுத்தி தீர்த்துக்கொண்டது. இந்த அமெரிக்காவின் சக்தி வாய்ந்த அணுஆயுத சக்தி மிகவும் சேதத்தை ஜப்பானுக்கு ஏற்படுத்தியது. இந்த சேதத்தினால் ஜப்பானில் ஒரு சிறு செடி கொடி கூட வளராத அளவிற்கு அந்த அணுக்குண்டு பாதிப்பை ஏற்படுத்தியது.இந்த குண்டு வெடிப்பினால் இன்றளவும் மரபணு மாற்றத்தால் குழந்தைகள் ஊணமுடன் பிறக்கின்றன.இந்த மாபெரும் குண்டுவெடிப்பு அங்குள்ள செடிகள்,மனிதர்கள்,மரங்கள் அனைத்திலும் பாதிப்பை ஏற்பபடுத்தியது.
ஜப்பானின் தர்பூசணி
ஜப்பானில் தர்பூசணிகள் கட்டமாக வளர்கின்றன மற்ற இடங்களில் வளரும் தர்பூசணிகள் வட்டமாக இருக்கும்.ஆனால் ஜப்பானில் விளையும் தர்பூசணிகள் கட்டமாக வளர்கின்றன..இவை ஏன் கட்டமாக வளர்கிறது என்று கேட்டால் அவைகள் கட்டமான ஒரு மரப்பெட்டியில் ஆரம்பத்திலே வைத்து வளர்ப்பதால் அந்த தர்பூசணிகள் கட்டமாக வளர்கின்றன.இதனுடைய ஒரு தர்பூசணியின் விலை 8000 ரூபாய் வரை இருக்கும் . இது உலகின் விலை உயர்ந்த பழமாகவும் கருதப்படுகிறது.
தென்கொரியா பற்றிய ஆச்சரியமூட்டும் 10 தகவல்கள் 10 facts about south korea
ஜப்பானின் மிதிவண்டி
ஜப்பானில் அதிக அளவு மிதிவண்டி(சைக்கிள்) ஒட்டுகின்றனர். ஏன் ஜப்பானிய மக்கள் அதிக அளவு மிதிவண்டியை ஓட்டுகிறார்கள் என்றால் அவர்களின் மக்கள் தொகை அதிக அளவு இருப்பதால் அதிக அளவு சாலையில் வாகன நெருக்கடி ஏற்படுகிறது இதன் காரணமாக அவர்கள் அதிக அளவு மிதிவண்டியை பயன்படுத்துகின்றனர்.இந்த மிதிவண்டியை ஓட்டுவதற்காக அவர்கள் தனித்தனி ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் மிதிவண்டிக்கு அடையாள எண்ணை கொண்டிருக்க வேண்டும்.நம் ஊரில் பயன்படுத்தும் மிதிவண்டி போல கண்ட இடங்களில் மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு கண்ட இடங்களில் நிறுத்துவது போல ஜப்பானில் நிறுத்தக்கூடாது.ஜப்பானில் மிதுவண்டி வாங்கிய உடனே அதனை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.இதுமட்டுமின்றி ஜப்பானில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மிதிவண்டி ஓட்டினால் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும்.ஜப்பானில் எல்லா இடத்திலும் மிதிவண்டியை ஓட்டி செல்ல முடியாது. மிதி ஓட்டுவதற்கென்று தனி இடம் ஒதுக்கி வைத்திருப்பர் அதில் மட்டுமே ஓட்ட வேண்டும் ஜப்பானிய அரசு கூறியுள்ளது.இந்த மிதிவண்டி ஓட்டுவதற்கு பல விதிமுறைகள் வைத்துள்ளன.கைபேசி கொண்டோ அல்லது குடையை பிடித்துக்கொண்டோ மிதிவண்டியை ஓட்டக்கூடாது.ஒரு மிதிவண்டியில் இருவர் செல்லக் கூடாது ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.
ஜப்பானின் சில தகவல்கள்
ஜப்பானில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது.இதனால் ஜப்பான் மக்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் மிக மோசமாக மாறிவிடக்கூடும் என்பதனால் ஜப்பானிய அரசு எந்த பெண்மணி குழந்தையை பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களின் குழந்தைக்கான முழு செலவையும் ஜப்பானிய அரசு ஏற்றுக்கொள்ளுமாம்.குழந்தை பெற்ற பெண்மணிக்கு 2 லட்சம் வரை பரிசு தருகிறார்கள்.
நம் கைகளில் சாப்பிடுவதுபோல் ஜப்பானியர்கள் சாப்ஸ்டிக் என்றழைக்கப்படும் குச்சிகளில் சாப்பிடுகிறார்கள். இந்த குச்சியில் சாப்பிடுவதால் ஓரு வருடத்திற்கு 8 மில்லியனுக்கு மேலான குச்சிகள் தேவைப்படுகிறது.இந்த குச்சிகளை தாயாரிப்பதற்காக ஒரு வருடத்திற்கு 3 மில்லியனுக்கும் மேலான மரங்களை வெட்டுகிறார்களாம்
ஜப்பானில் அதிக அளவு ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். ஜப்பானில் உள்ள ரயில்கள் எப்பொழுதும் தாமதமாகவ வராது இந்த ரயில்கள் சரியான மணி நேரத்தில் வந்துவிடுமாம். இந்த ரயில்கள் குறைந்தது 10 நிமிடம் மட்டுமே தாமதமாக வரம்.இந்த ரயில்கள் அதிக தாமதமாக வந்தால் இவர்கள் ஒரு சான்றிதல் அளித்து விடுகிறார்கள் இது எதற்காக என்றால் இந்த ரயிலினால் தாமதமாக சென்ற பள்ளி மாணவர்களோ அல்லது வேலையில் இருப்பவர்களோ அவர்கள் இந்த ரயிலினால் தான் தாமதமாக வந்துள்ளனர் என்று சான்றிதழ் அளிப்பர்.
ஜப்பானில் உலகிலேயே அதிக வயதானவர்கள் உள்ள நாடாகும். அதாவது உலகிலேயே அதிக வயதானவர்கள் 100 வயதிற்கும் மேலான நபர்கள் அதிகம் வாழ்கின்றனர் .ஜப்பானில் அதிக அளவு வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பர் இந்த வளர்ப்பு பிராணிகள் ஜப்பானிய குழந்தைகளைவிட அதிகமாம் இந்த வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதற்காக இதற்கு உரிமம் வாங்க வேண்டுமாம் .இந்த ஒரு வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் வாங்குவதற்காக ஆகும் செலவு 2000 ம் மேல் ஆகுமாம்.ஜப்பானில் தத்து எடுக்கும் நபர்கள் 20 வயதிலிருந்து 30 வயதினரையே தத்து எடுக்கின்றனர்.