கருப்பு கவுனி அரிசியை பற்றி பார்க்கலாம். பெரிய பெரிய குடும்பத்தில் பயன்படுத்தி வந்த இந்த அரிசியை சாதாரண மக்களும் பல நன்மைகள் இருக்கிறது என்று நினைத்து பயன்படுத்த தொடங்கிய பின் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவே சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடாது என்று தடைச்சட்டம் ஏற்பட்ட வரலாறும் இந்த அரிசி ண்டு இதன் காரணமாகத்தான் இது தடை செய்யப்பட்ட அரிசி என்று அழைக்கிறாங்க இந்த அரிசியில் புரதம் நார்ச்சத்து இரும்பு சத்து வைட்டமின் ரிபோப்ளோவின் நியாஸ் இன் லுடின் கால்சியம் மெக்னீசியம் என நிறைய சத்துக்கள் உள்ளது
. கருப்பு கவுனி அரிசியில் ஆண்டி ஆக்சிடென்ட் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும் குறிப்பாக உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இருதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது
ஆண்டோசைனின் என்ற நிறமே அதிகம் இருப்பதால் கருப்பு கலரில் உள்ளது. புற்றுநோய் ஏற்படும் காரணிகளை கட்டுப்படுத்துகிறது பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு. 100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் நார் சத்து அடங்கியிருக்கிறது இது மற்ற அரசிகளை விட நான்கு மடங்கு அதிகம்.
நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணம் ஆவதற்கு நார்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்று செரிமானம் சார்ந்த பிரச்சினைகளான வைரோபிசம் வைரஸல் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை அடிக்கடி அவதிப்படுகிறவர்கள் இந்த கருப்பு கவுனி அரசி சாப்பிட்டு வர மிகவும் நல்லது. உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தை சீராக இயற்றி ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவி செய்யும். அரிசி வகைகளிலேயே மிக குறைந்த அளவு கார்போ ஹைட்ரேட் மிக அதிக அளவிலான நார் சத்து கொண்ட அரிசி கருப்பு கவுனி அரிசி இது ஒரு லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் அரிசி. அதனால் எந்த ஒரு பயமும் இல்லாமல் சாப்பிட்டு வரலாம் ஏனென்றால் இது மெதுவாக சர்க்கரையின் அளவை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது.
ஆதலால் சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படும். உடலில் புதிய சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமான சத்து இரும்பு சத்து கருப்பு கவுனி அரிசியில் மிக அதிக அளவிலான இரும்பு சத்து அடங்கியுள்ளது 100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 2.2 கிராம் இரும்பு சத்து அடங்கியிருக்கிறது. அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டு வர மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் கொழுப்பையும் கரைத்து வெளியேற்றும் இதன் மூலமாக உடல் எடையும் வேகமாக குறையும்.
மூளையில் இருக்கக்கூடிய கார்ட்டிசால் என்ற ஸ்ட்ரஸ் ஹார்மோன் கட்டுப்படுத்தும் இதன் மூலமாக மன அழுத்தமும் குறையும். அதிகமான அழுத்தம் மனசோர்வு ஆன்சைட்டி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறவர்கள் கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வர மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சி உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு தேவையான புரதம் இரும்பு சத்து என பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்த அரிசி கருப்பு கவுனி அரிசி இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி செய்யும் இதன் மூலமாக பல்வேறு நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்க கூடியது இந்த அரிசி. தோலில் எரிச்சல் புண்கள் என அலர்ஜி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறவர்களுக்கு மிக சிறந்த உணவு இந்த அரிசி. உடலில் உள்ள இரசாயனக் கழிவுகளின் மாற்றமே உடலின் பல்வேறு விதமான அலர்ஜி உண்டாவதற்கு காரணம் ரசாயன மாற்றங்களை கட்டுப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும் . குளூட்டன் அலர்ஜியினால் அவதிப்படுகிறவர்கள் தாராளமாக கருப்பு கவுனி அரிசி எடுத்துக் கொள்ளலாம்.
Related: Ginger Benefits in tamil