இந்த உலகத்தில் ஏலியன்ஸ் இருப்பத்து உண்மையா இல்லையா(alien facts) என்ற கேள்வி அனைவருக்குமே உள்ளது. அதாவது ஏலியன்கள் எங்க உள்ளது இவைகள் எப்படி இருக்கும் என்பது புதிராக உள்ளது. இவைகளை பற்றிய உண்மையை இந்த பதிவில் காண்போம் . ஏலியன் என்ற ஒன்று தற்போதய வாழ்வில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகவே உள்ளது.
ஏலியன்ஸ் என்பதற்கு வேற்றுகிரக வாசி என்று பொருள் . அதாவது வேற்றுகிரகத்தில் வாழும் ஒரு சிறிய உயிரினம் கூட வேற்றுகிரக வாசிகள் என்றே கூறுவர். அதாவது நம் பூமியை தவிர வேறு எந்த கிரகத்தில் வாழும் ஒரு சிறு பூச்சியோ ,தாவரமோ அல்லது ஒரு சின்ன ஒரு செல் உயிரியாய் இருந்தாலும் அதனை வேற்றுகிரக வாசிகள் என்றே அழைப்பர் .
ஏலியன் தோற்றம்
ஏலியன்கள் பார்பதற்கு நம்மை போலும் இருக்கலாம் என்று அவசியம் இல்லை அவைகள் மனிதர்களை விட அழகாகவும் இருக்கலாம் .இவைகள் நாம் புகைபடத்தில் பார்ப்பது போல பெரிய கண்களுடணும் ஒல்லியாகவும் நச்சலுமாகவும் இருப்பது போல இருக்கும் என்று எண்ணினால் அது தவறு அவைகள் நாம் நினைப்பதற்கு மாறாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . ஏலியன்கள் மனிதர்களை விட புத்திசாலியாகவும் இருக்கலாம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இதனுடைய தோற்றம் கற்பனை பிம்பமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ரோஸ்வெல் சம்பவம்
அமெரிக்காவில் ரோஸ்வெல் என்ற இடத்தில் முதன் முதலாக பறக்கும் தட்டை காண்கிறார்கள் .அதாவது பறக்கும் தட்டு என்றால் ஏலியன்கள் பூமிக்கு வந்து செல்ல பயன்படுத்தும் ஒரு விமானம் என்று அழைக்கிறார்கள். இந்த பறக்கும் தட்டை அடிக்கடி ரோஸ்வெல் இடத்தில் மக்கள் கண்டதாக கூறுகிறார்கள் . இதன் பிறகே ஏலியன்கள் இருப்பதாக நினைக்கிறார்கள் .இந்த பறக்கும் தட்டை கண்ட விஞ்ஞானிகள் ஏலியன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறுகிறார்கள் .
LOSANGELS சம்பவம்
அதாவது LOSANGELS என்ற இடத்தில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலக்கட்டத்தில் ஒரு பறக்கும் தட்டை கண்டதாக அமெரிக்க அரசு கூறுகிறது இது அமெரிக்க இராணுவத்தின் அதிகாரபூர்வ இதழிலும் குறிப்பிட பட்டுள்ளது.அமெரிக்காவில் இருக்கும் LOSANGELS இடத்தில் இரண்டாம் உலகப் போரின் போது ஒரு பறக்கும் தட்டு வானில் தோன்றுகிறது இதனை கண்ட அமெரிக்க படையினர் இதனை எதிரி நாட்டு விமானம் என்று நினைத்து உடனே இதனை சுட்டுதள்ளினர் ஆனால் அந்த விமானம் எந்த ஒரு பதில் தாக்குதலும் இல்லாமல் அங்கிருந்து உடனே மறைந்தது இதனை ஒரு ஏலியனின்பறக்கும் தட்டு என்று கூறுகின்றனர் ஆனால் இன்றுவரை இந்த சம்பவம் விடைதெரியாத மர்மமாகவே உள்ளது. உண்மையில் அவர்கள் எதை சுட்டிருப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்
AREA 51
AREA 51 என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு மர்மமான இடமாகும். இந்த இடம் அமெரிக்க விமானப்படை அமைந்திருக்கும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் ஏலியன்களை வைத்து ஆராய்ச்சி செய்வதாக அனைத்து நாட்டினரும் கூறுக்கின்றனர் . ஆனால் அங்கு இன்று வரை இங்குஎன்ன நடக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. அந்த இடம் ஒரு மர்மமான இடமாக இன்றுவரை உள்ளது .அந்த இடத்திற்கு எந்த மக்களும் செல்லக்கூடாது என அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. அதுபோல இந்த இடத்திற்கு எந்த மக்களும் சென்றதில்லை .இந்த இடத்தில் ஏலியன் வைத்து ஆராய்ச்சி செய்கிறார்களா அல்லது வேறு ஏதாவது செய்கிறார்களா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்த இடம் செயற்கைகோள்களால் கூட பார்க்க முடியதாத இடமாக உள்ளது. ஏனெனில் இவை பூமுக்கு அடியில் உள்ளது .
பிரமிடுகள் ரகசியம்
நாம் எகிப்தில் காணும்பிரமிடு யார் கட்டினார்கள் என்பதை இன்று வரை விஞ்ஞானிகளால் கூட சரியான பதிலை கண்டறிய முடியவில்லை . ஏனெனில் பிரமீடுகளின் கட்டமைப்பு மிகவும் துல்லியமானவை . எனவே எகிப்து பிரமிடை கட்டியது ஏலியன்கள் என்றே நினைக்கின்றனர் .இந்த பிரமிடுகளை கட்டியது ஏலியன் ஆதலாலே இன்று வரை பிரமிடுகளை நம்மால் கட்ட முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் இதனால்தான் பிரமிடுகளை ஏலியன்கள் கட்டின என்று நினைக்கின்றனர்.இதுவும் இன்றளவும் மர்மமாகவே உள்ளது
ஏலியன்கள் நாம் கண்களால் பார்க்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு இடத்தில் வாழ்ந்து வருக்கின்றது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த உலகத்தில் மிகப்பெரிய பிரபஞ்சத்தில் எண்ண முடியாத அளவிற்கு எண்ணற்ற கிரகங்கள் உள்ளன .அதில் ஒரு கிரகத்தில் கூட ஏலியன்கள் இருக்க மாட்டார்களா ? என்பதுதான் என்னுடைய கள்வி எனவே ஏலியன் இருப்பது உண்மையா என்பதை நீங்களே கூறுங்கள்
ஸ்டீபன் ஹாக்கின்ஸின் கூற்றின் படி ஏலியன்கள் இருந்தாலும் அவைகள் நம்மை ஒரு பொருட்டாக எடுக்காமல் இந்த உலகில் வாழ்ந்து வருகிறது என்றே கூறுகிறார் . ஏன் இவர் இவ்வாறு கூறுகிறார் என்று கேட்டால் இந்த ஏலியன்கள் மனிதர்களை சிறிய பூச்சியாக நினைக்கின்றனர் அதாவது ஏலியன்கள் மனிதர்களை மண் புழுக்களை போல என்னுகின்றனர் அவைகள் தங்கள் தொழில்நுட்பத்தால் அதிக அளவு வளர்ச்சி அடைந்திருப்பதால் மனிதர்களை பற்றிய தகவல்கள் தேவையில்லை என்று ஸ்டீபன் விஞ்ஞானி கூறுகிறார் .எனவே ஏலியன் இருந்தும் நாம் பார்க்காமல் இருக்கலாம்.