நாட்டின் தொழில் துறையில் சத்தம் இல்லாமல் சாதனை நடத்திக் கொண்டிருப்பவர் தான் கௌதம் அதானி. அதானி கால் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்துறையின் ராஜாவாக வலம் வருகிறார் அதானி.நாட்டின் தொழில் துறை ஜாம்பவான்களான டாடா பிர்லா முதல் முகேஷ் அம்பானி வரை பெரும்பாலானவர்கள் தங்களுடைய முந்தைய தலைமுறையினருக்கு வகுத்துக் கொடுத்த பாதையிலேயே தொழிலை முன்னேறி பணக்காரராக பணக்காரப் பட்டியலில் இடம் பிடித்தனர் ஆனால் நடப்பாண்டில் உலக பணக்காரர் பட்டியலில் ஒன்பதாவது இடம் பிடித்து ஒரு தொழில் முனைவோராக தனது பயணத்தை தொடங்கி குறுகிய காலத்திலேயே நாட்டின் முதல் நிலை பணக்காரனார்.
அதானி வாழ்க்கை வரலாறு
இந்திய தொழில் துறையில் மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை எட்டி இருக்கிறார் கௌதம் அதானி. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த அதானி 1962 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி ஜெயின் சமூகத்தை சேர்ந்த சாங்கிலால் அதானி, சாந்தி அதானி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சாங்கிலால், கௌதம் அதானியுடன் சேர்த்து 8 பிள்ளைகள் சாங்கிலால் அதானி துணி வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.பெரும்பாலான ஜெயின் சமூகத்தினரைப் போலவே சிறுவயதிலேயே வியாபார நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே அங்குள்ள ஷேட் சிமன்லால் நாகின்தாஸ் வித்யாலயா பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகம் படித்தார் ஆனால் அதானிக்கு வியாபாரத்தில் நாட்டம் அதிகரித்ததால் கல்லூரி படிப்பை இரண்டாம் ஆண்டுடன் கைவிட நேர்ந்தது. அடுத்த கட்டத்தை நோக்கி மும்பைக்கு சென்றார் அங்கு மகேந்திர நிறுவனத்தின் வைரங்களை தரம் பிரிக்கும் வேலை கிடைத்தது சரியாக 10 ஆண்டுகள் வைர வியாபாரத்தில் நிபுணத்துவம் பெற்ற அதானி தனது அண்ணன் மகாசஷுப் தனது பிளாஸ்டிக் ஆலையை நிர்வகிக்க வருமாறு கடிதம் எழுதி இருக்கிறார்.
மீண்டும் ஹைதராபாத்திற்கு திரும்பினார் அண்ணனின் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தில் சிறு குறு நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் பைப்புகள் இறக்குமதி செய்யும் நிறுவனத்தை தொடங்கி தொழில் முனைவோராக தடம் பதித்தார். அந்த நிறுவனத்தின் பெயர் அதானி எக்ஸ்போர்ட் 90களுக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தில் தாராளமயமாயத்தை பின்பற்ற தொடங்கி சென்னை பெங்களூர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் பன்னாட்டு வருகையால் ஏற்பட்ட வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிந்தது குறிப்பாக வானுயர் கட்டிடங்கள் கனரக தொழிற்சாலைகள் சிறப்பு பொருளாதார மண்டல தொழில் துறை மேம்பட்டது இந்த தாராள மையத்தின் பழமையை அதானியும் அனுபவித்தார்.
ஆனால் அலைகள் ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலோரத்தின் குஜராத் துறைமுகங்களில் இருந்து தான் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள அதானி என்னும் பில்லியனரின் கதை தொடங்கியது அதானி எக்ஸ்போர்ட்ஸ் எனும் பெயரில் சிறுகுறு நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் பைப்புகளை இறக்குமதி செய்து வந்த அதானி குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் எப்போதும் ஒரே திசை நோக்கி தன்னுடைய தொழிலை பயணிக்கவில்லை மாறாக தொழில்துறையில் சாதிக்க வேண்டும் என்ற மாபெரும் கனவுடன் ஒவ்வொரு நுணுக்கத்தையும் கற்றுக்கொண்டு அதன்படி பயணிக்க ஆர்வம் கொண்டிருந்தார் அதேநேரம் வளர்ச்சிக்கு நடுவே சில இடங்களில் வழுக்கி விழவும் நேர்ந்தது.
அரசியல் பின்புலம்
இதன் பிறகு தான் தன்னுடைய லட்சியத்தை அடைய பெரும் தொழில் தந்திரம் மட்டும் போதாது அரசியல் பின்புலமும் தேவை என்பதை உணர ஆரம்பித்தார். இப்போதும் கூட அதானி என்னும் தொழில்துறை ஜாம்பவான்களின் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதாக தகவல் கூறப்படுகிறது ஆனால் அவரது தொடக்ககால தொழில் வளர்ச்சியில் மோடி என்பவரை அவர் சந்தித்தது கூட கிடையாது என்பதான் ஆச்சரியமூட்டும் உண்மை குஜராத் தொழில்துறையில் கத்துக்குட்டியாக இருந்து தானே முதலில் கை தூக்கி விட்டவர் என்றால் அது பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக இருந்த ராஷ்டிரிய ஜனதா கட்சியை சேர்ந்த ஷிமான்பாய் பட்டேல் தான்.
இதன் பிறகு தான் அரசியல் தலைவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை ஏற்படுத்தினார். ஷீமான் பாய் பட்டேலும் தன்னால் முடிந்ததை செய்து வந்தார். இந்த நிலையில்தான் 1995 தேர்தலில் முதல் முறை கேஷோவ் பாய் பட்டேல் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது கேஷோபாய் பட்டேலுடன் இணக்கமான உறவை பின்பற்றினார்.
இவர் ஆட்சியில் தான் குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தை தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுக்கும் முறை கொண்டுவரப்பட்டது இந்த ஒப்பந்தம் முறை யாருக்கு பலனளித்ததோ இல்லையோ அதானுக்கு ஜாக்பாட் என்று சொல்லலாம். கேஷோபாய் பட்டேலுடன் அதானிக்கு இருந்த நட்புணர்வு காரணமாக முந்த்ரா துறைமுகத்தில் பெரும்பகுதி நிலம் அதானிக்கு ஒதுக்கப்பட்டது. துறைமுகத்தை நிர்வகிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது.
அரசு அமைப்புடன் அதானிக்கு இருந்த உறவால் அவர் காட்டில் பணமழை பொழிய தொடங்கியது. ஆனால் அன்றைய சூழலில் தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு எடுக்கப்பட்டு கெஷோபாய் ஆட்சியை இழந்தார். அவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மோடிக்கு அதானியுடன் பெரிய நெருக்கம் இல்லை மேலும் கேஷோபாயுடன் நெருக்கம் காட்டியதால் அதானி தள்ளியே வைத்திருந்தார்.மோடி மற்றும் அதானி உடனான தொடர்பு இவையெல்லாம் 2000-க்கு பிறகு தான் தொடங்கியது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறை சம்பவம் காரணமாக குஜராத் கலவர பூமியாக தாக்கப்பட்டது இதனால் அம்மாநிலத்தில் தொழில் தொடங்க தொழில் முனைவோர்கள் ஆர்வம் காட்டவில்லை இதன் வெளிப்பாடாகவே ராகுல் பஜான் ஜாக்சீட் முத்திரை ஆகியோர் தலைமையில் இயங்கிய இந்திய தொழில் கூட்டமைப்பான பொதுக்குழுவில் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது சிஐஏ யின் கண்டனத்திற்கு எதிராகவும் அப்போது முதலமைச்சராக இருந்த மோடிக்கு ஆதரவாகவும், குஜராத் முதலாளிகள் சிலர் ஒன்று கூடினார் டோரண்ட் கேஸ், நிர்மா, கேடில்லா ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு தான் அதாணி நிறுவனத்தின் பெயர் குஜராத் அரசுக்கு ஆதரவு தெரிவித்த நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தது .
குஜராத் கலவர பூமியின் அடையாளத்தை அளிக்க நினைத்த மோடி தன்னுடைய முதலாவது ஆட்சியை குஜராத்தில் தொழில் தொடங்குவதற்காக சர்வதேச தொழில் முனைவோரின் மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி மோடியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப நினைத்த அதானி.தன்னுடைய நிறுவனம் சார்பில் 15,000 கோடி முதலீட்டை குஜராத்திற்கு கொண்டுவர முடியும் என அறிவித்தார் இந்த அறிவிப்பு எவர் கவனத்தை ஈர்க்கும் என்று முனைப்பில் நினைத்தாரோ அவர் கவனத்தை ஈர்த்தது.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு தான் மோடி அதானி நட்பு தொடங்கியது இதன் பிறகு அதானியின் தொழில் வளர்ச்சி குஜராத்தில் ஆலமரத்தின் விழுதுகளை போல் ஒவ்வொரு துறையிலும் நுழையத் தொடங்கியது. அதானிக்கு தெரியாமல் அம்மாநிலத்தில் எந்த தொழிலும் புதிதாக தொடங்கவோ அல்லது நுழையவோ முடியாது என்கிற நிலை உருவானது.
ஆதானி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை
இதனால் குஜராத் தொழில் சாம்ராஜ்யத்தில் அசைக்க முடியாத சாம்ராட் ஆக சிம்மாசனமிட்டு உட்கார்ந்தார் அதானி.1994 ஆம் ஆண்டு இந்திய பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பட்டியலை வெளியிட்டார். அப்போது அந்த நிறுவனத்தின் பங்குகள் வெறும் 150 ரூபாய்க்கு தான் விற்பனையானது ஆனால் கடந்த 27 ஆண்டுகளில் அதானி எண்டர்பிரைசஸின் பங்குகள் பல மடங்கு உயர்ந்து 2000 க்கு மேல் ஒரு விற்பனை செய்யப்படுகிறது 2000 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள அதானியின் முந்த்ரா துறைமுகம் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்நிறுவனம் மத்திய மாநில அரசுகளுக்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை அதனின் முந்த்தரா துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகங்களில் ஒன்றாக திகழ்கிறது இதேபோல் நாட்டில் 75% சரக்குகளை அதானி இந்நிறுவனமே கையாளுகிறது. மேலும் உலக அளவில் சரக்கை அதிவேகமாக கையாளும் நிறுவனங்களில் அதானி நிறுவனமும் ஒன்று. 2014 ஆம் ஆண்டு எல்லா அனுமதிகளையும் பெற்றன.
தொழில் வளர்ச்சி
இன்றைய சூழ்நிலையில் அதானியின் துறைமுகங்கள் மூலம் நாட்டின் மொத்த சரக்கு இயக்கத்தில் ஒரு பங்கு கையாளப்படுகின்றன இப்படிப்பட்ட சூழலில் தான் குஜராத்தின் தொழில் ஜாம்பவானாக வளர்ந்து வந்தார் அதானி.1997 ஆம் ஆண்டு இறுதியில் மர்ம நபர்கள் சிலர் அகமதாபாத்தில் கடத்தி சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது. துப்பாக்கி முனையில் அதானி கடத்தப்பட்டது அவருடைய தந்தையும் சேர்த்து கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது ஒரு நாள் வரை மர்ம நபரின் பிடியில் அதானி உள்ளிட்டோர் இருந்ததாகவும் இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் தன் தொழிலில் தான்தான் ஜாம்பவான் என்று நிரூபிப்பது அதானிக்கு வேலையாக இருந்தது நாட்டிலேயே மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனம் அதானி உடையது தான் நாட்டில் ஏழு கடல் சார் மாநிலங்களில் 11 உள்நாட்டு துறைமுகங்கள் மூலம் நாட்டின் 74% துறைமுக பணிகளை அதானி குடும்பம் செய்கிறது குஜராத்தில் அதானியின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் நிலக்கரியால் இயங்கும் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் ரயில் பாதைகள் அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் விமான நிலையமும் இருக்கின்றது நாட்டிலேயே 300 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் பாதைகளை கொண்டிருக்கும் ஒரே தனியார் நிறுவனம் அதானியுடையதுதான் .
பிரிட்டிஷ் ஆட்சியில் சரக்குகளை கையாள நாட்டின் கடலோர பகுதிகளில் ரயில் பாதை துறைமுகம் கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவை தொடங்கப்பட்டது அதேபோன்று மூன்றாவது துறைமுகம் ஒப்பந்தம் கிடைக்கப்பட்ட பிறகு நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக முனைப்பு ஏற்படுத்தினார்.
2000 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் சேர்ந்து சமையல் எண்ணெய் விற்பனையை ஆரம்பித்தார். இன்று நாட்டில் அதிகமாக விற்பனையாகும் ஃபார்ச்சூன் எண்ணெய் அதானி மட்டும் மற்றும் வில்மர் நிறுவனம் தயாரிக்கும் எண்ணெய்தான்.
25 ஆம் ஆண்டில் இந்திய உணவுக் கழகத்துடன் இணைந்து அதானி அக்ரி லார்ஜஸ்டிக் லிமிடெட் என பெயரில் நாட்டில் பெரிய தானிய சேமிப்பு கிடங்குகளை அமைக்க தொடங்கியது அதானி குழுமம் ஆரம்பத்தில் 20 ஆண்டுகால ஒப்பந்தத்தின் கீழ் தானிய சேமிப்பு நிலையங்களை அமைத்தது தானியங்களை சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வசதிகளாக ரயில் பாதை பயன்படுத்தப்படுகிறது.
மின்சார உற்பத்தி இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், ரியல் எஸ்டேட் நிதி சேவைகள் வீட்டு கடன் சேவைகள் விமான நிலைய நிர்வாகம் மெட்ரோ ரயில் சேவை என கிடைத்த வியாபாரங்களில் எல்லாம் கால் பதித்தார் அதானி 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஹோட்டலில் தீவிரவாதிகள் நுழைந்த போது தொழிலதிபர்களுடன் இரவு உணவு விருந்திலிருந்த அதானியை அங்கிருந்த ஊழியர்கள் ஹோட்டலின் பேஸ்மென்ட் பகுதிக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர் ஒரு நாள் முழுவதும் அங்கிருந்தார்.
அடுத்த நாள் காலை ராணுவ வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டார் அப்பொழுது மரணத்தை 15 அடி தொலைவில் இருந்து பார்த்தேன் என அதிர்ச்சியுடன் தெரிவித்தார் இப்படி இரு வேறு சம்பவங்களில் தப்பிப்பித்தார். அதானி இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் அனல் மின் நிலையத்தை கட்டி அமைத்தார் குஜராத் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா சத்தீஸ்கர் என பல மாநிலங்களில் அதானியின் பவர் லிமிடெட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இதன் மூலம் 12,450 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது.
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதானியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. வியாபாரத்திலும் தொழிலிலும் இவ்வளவு உயரத்தை எட்டிய கௌதம் அதானி தன் சக போட்டியாளர் முகேஷ் அம்பானி போல் தொழில் சார் கூட்டங்களை பொதுவெளியில் பகிரங்கமாக நடத்தி கவனத்தை ஈர்க்கக் கூடியவர் அல்ல தான் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்து மக்களிடம் நேரடியாக உரையாட கூடியவரும் அல்ல தன்னுடைய கடின உழைப்பால் 2020 ஆம் ஆண்டு 8.9 மில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் 89 பில்லியன் டாலராக உயர்ந்தது குறிப்பாக 2021 ஆம் ஆண்டில் அதானின் ஒரு நாள் வருமானம் மட்டும் ஆயிரம் கோடியாக இருந்தது இன்றைக்கு உலகம் முழுவதும் தன்னுடைய கிழைகளை பரப்பியுள்ளார் தானிய நிறுவனம் ஒட்டுமொத்தத்தில் 50 சதவீதத்தை கடனில் தான் இயக்கி வருகிறது ஆனால் இவ்வளவு கடனும் அதானிக்கு இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மூலம் தான் வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே இலட்சக்கணக்கான கோடியில் தொழிலை விஸ்தரிக்க கடன் வாங்கி விஜய் மல்லையா, நீரவ் மோடி வெளிநாடு தப்பி சென்ற தொழில் ஜாம்பவான்கள் மத்தியில் 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் கடனில் இருக்கும் அதானிக்கு ஒவ்வொரு நகர்வும் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடலாம் வீழ்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கலாம் என்பதே கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று.
தொடர்புடயவை: அம்பானியின் வாழ்க்கை வாரலாறு