இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் நிரப்பப்பட்டுள்ளது ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கையில் தான் உள்ளது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். மாணவர்களின் கனவு நாயகன். சாதாரண குடும்பத்தில் பிறந்த தலை சிறந்த விஞ்ஞானி அவரின் மறைவு மாணவர்களின் மத்தியில் விஞ்ஞான உலகிலும் நெருடமாகவே உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
அப்துல் கலாம் இளம்பருவம்
இவர் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள் ஜெய்னுலாப்தீனுக்கும் ஆஷியம்மாவுக்கும் மகனாக பாபர் தீவில் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான ராமேஸ்வரத்தில் பிறந்தார். ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் இவர் படிப்பு தொடர்ந்தார் தமிழ் வழி கல்வி பயின்றவர் மிக எளிமையான குடும்பம் என்பதால் தன் மருவு வருமானத்திற்கு பங்களிக்கும் வகையில் செய்தித்தாள்களை விநியோகிக்கும் வேலைக்கு சென்றவர் அவர் சிறுவனை சிறியவனாக இருக்கும் போது தன்னால் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று படிக்க முடியுமா என்ற கேள்வி தன்னுள் எழுந்துள்ளது.
இதை அவர் ஒரு முறை பள்ளியில் உரையாற்றும் போது அவரே கூறியிருக்கிறார். சிவசுப்பிரமணியம் என்னும் அவரது ஆசிரியர் வழிகாட்டுதலின் பெயரில் உயர் கல்வியை முடித்தார். தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த காலம் திருச்சிராப்பள்ளியிலும் சென் ஜோசப் கல்லூரியிலும் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார். ஆனால் அவர் படிப்பை முடித்த பிறகு அந்த பட்டத்தை பெறவில்லை அப்படியே விட்டுவிட்டார் ஆனால் 48 ஆண்டுகள் கழித்து அதைக் கேட்டு பெற்றுக் கொண்டார். அவருக்கு இயற்பியலில் அவ்வளவாக ஈடுபாடு ஏற்படாததால் 1955 ஆம் ஆண்டு சென்னை எம் ஐ டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்த விண்வெளி பொறியியல் படிப்பு சேர்ந்து படித்தார்.
அப்போது அவருக்கு தான் விமானியாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்காகவே தேர்வையும் எழுதினார். அந்த தேர்வில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்தார் இருந்தும் அவருக்கு விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை 1960 ஆம் ஆண்டு மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைப்பின் பெயரில் டி ஆர் டி ஓ விஞ்ஞானி ஆக தன்னுடைய ஆராய்ச்சியை தொடங்கினார்.
அப்துல் கலாமின் முதல் படைப்பு
அப்போது அவருக்கு மாத சம்பளம் 250 ரூபாய் கிடைக்கப்பெற்றது இந்திய ராணுவத்திற்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்து கொடுத்தார். இந்தியாவின் ஆராய்ச்சி கூடமான இஸ்ரோவில் தன்னுடைய ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்தார் துணைக்கோள் ஏவுகணை பிரிவில் எஸ்எல்வி செயற்கைக்கோளில் ஏவுவதற்கான முக்கிய பங்கு ஆற்றினார் அங்கு 1980 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட எஸ்எல்வி மூன்று செயற்கைக்கோள் ஏவுகளில் முக்கிய பங்காற்றினார் இதன் மூலம் இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார் இத்தகைய வியக்க செயல்பாட்டை பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய பிரதான பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
அதைத்தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இஸ்ரோவின் சிறப்பாக பணியாற்றினார் 1999 ஆம் ஆண்டு ப்ரோக்ராம் அணு ஆயுத சோதனையின் தந்து தன்னுடைய முக்கிய பங்கு அர்ப்பணித்தார். அக்னி ப்ரீத்தி ஆகாஷ் உட்பட ஐந்து ஏவுகணை திட்டத்தில் முக்கிய பங்காற்றினார் அதில் அக்னி ஏவுகணை இந்தியாவினால் உருவாக்கப்பட்ட கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணை வகை விமானப்படை உதவி என்று கொந்தளிப்பை உண்டாக்கும் வகை அதாவது வேறுபட்ட போர்வெடிகளை தாங்கிப் பாய்ந்து செல்லும். தூரம் என்பது 250 கிலோ மீட்டர் ஆகும். ஆகாஷ் ஏவுகணை என்பது தல பீடம் இருந்து வானத்தில் தாங்கும் இடைத்தூரா ஏவுகணை இதன் சிறப்பை பொருத்தவரையில் 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய வேகத்தில் போகக் கூடியது இந்த சாதனைகளால் அவரை கௌரவப்படுத்த 1997 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது அது மட்டும் இல்லாமல் அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படையின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசு தலைவராக கலாமின் பணி
மாணவர்களுடன் உரையாடுவது பாடம் கற்பிப்பதில் ஆர்வமாக இருந்ததால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றினார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்பவர் உடன் ஆங்கிலம் கற்று தேர்ந்தார் மாணவர்கள் மத்தியில் அதிக அளவில் ஆங்கிலத்தில் உரையாற்றவர் அதன் பின் 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25ஆம் நாள் 2002ல் பதவியேற்றார். மேலும் பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.
2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார் 2007 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம் பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார். ஆனால் கலாம் ஓய்வாக ஒரு நிமிடம் கூட அமரவில்லை நாடு முழுவதும் பயணம் செய்து அத்தனை மாணவர்களையும் சந்தித்து இந்தியா வல்லரசாக வேண்டும் என தனது ஆசையை மக்கள் மனதில் பதிய வைத்தார்.
கலாமின் இலட்சியம்
கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் ஒரு கோடிக்கு மேல் மாணவர்களை சந்தித்து உரையாற்றியுள்ளார். அறிவார்ந்த இளைஞர்கள் தங்களது நேரம் அறிவு ஆற்றலை பயன்படுத்தி 2020க்குள் அனைத்து துறையிலும் நாட்டு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும் மனதில் உறுதி இருந்தால் நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்பதை மாணவர்களின் உள்ளங்களில் பதிய வைத்தவர் அப்துல் கலாம் கலாம் எப்போது உரையாற்று செல்லும்போது மாணவர்களை கேள்விகளுக்கு பதில் அளிப்பார். அந்த வகையில் ஒருமுறை ஒரு மாணவரின் சந்திப்பின்போது ஒரு மாணவி நல்ல நாள் கெட்ட நாள் எது என்று கேட்க அதற்கு கலாம் பூமி மீது சூரிய ஒளி பட்டால் அது பகல் இல்லாவிட்டால் அது இரவு என்று பதில் அளித்தார் அவரைப் போன்ற பணிவான மனிதர்களை காண்பது அறிவு என்று உலக தலைவர்களே பலர் வியந்து பாராட்டியுள்ளனர்.
கலாமின் பணிவு
ஒருமுறை அவர் வெளிநாடு சென்றபோது விமான நிலைய அதிகாரிகள் அவர அணிந்திருந்த கால் சுவை அகற்றி அவரை பரிசோதனை செய்தனர் அப்போதும் அவர் அதற்காக முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். கலாம் சிறு வயதாக இருக்கும் போது அருகில் இருந்த கிணற்றுக்கு எல்லாம் கல்லை தூக்கி போட்டார் அதிலிருந்து குமிழ் குமிழாக வந்தத அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார் அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இதுதான்.
கலாம் மிகுந்த இசைஞானம் கொண்டவர். வீணை இசை அவர் அதிகம் விரும்பும் ஒன்று அப்துல் கலாம் பழமையான வீணை ஒன்றே வைத்திருப்பார். அவருக்கு நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பார் சைவ உணவில் அலாதி பிரியம் கொண்டவர் அப்துல் கலாம் இளைஞர்களுக்காக பல வாழ்க்கை சிந்தனைகளை கூறியுள்ளார் அதில் எப்போதும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்றால் அழகைப் பற்றி கனவு காணாதீர்கள் அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும் கடமையை கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் என்றார். நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்று திருமணம் செய்து கொள்ளாமல் தமது முழு பணியையும் நாட்டுக்காகவே அர்ப்பணித்தார்.
மருத்துவத்திலும் இவர் பங்கு மிகையாகாது போலியோ நோய்களுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோய்களுக்கான எடை குறைந்த ஸ்டாண்ட் கருவி ஆகியவை இவர் கண்டுபிடித்த கருவியாகும் அதனால் இந்த ஸ்டாண்டுக்கு கலாம் ஸ்டாண்ட் என்ற பெயர் சூட்டப்பட்டது. இவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட அந்த மாத சம்பளத்தை வாங்கி அதன் ஒரு பகுதியை குடும்பத்திற்காக அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தார் அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு நட்பு வட்டாரத்தை கொண்டவர். ஆனால் தன்னுடைய அதிகாரத்தை தவறாக ஒருபோதும் அவர் பயன்படுத்தியதே இல்லை அவர் யார் ஒருவருக்கும் எதற்காகவும் சிபாரிசு செய்ததும் இல்லை அப்துல் கலாமை நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர்.
இந்திய பாதுகாப்பு துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன அவற்றை திறந்து விட்டு முழுக்க முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார் தான் இஸ்லாம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தினமும் திருக்குர்ஆன் படிக்க தவறியது இல்லை அதில் அவருக்கு பிடித்த வரிகள் இறைவா உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் இவ்வாறாக அமைந்திருக்கும் அந்த வரிகள். வரிகள் என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரைசேர வைத்த வரிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கலாமின் புத்தகம்
நாட்டில் நலனையும் மாணவர்களின் முன்னேற்றத்தையும் மட்டுமே கண்களாய் பாதித்த அவற்றிற்காகவே தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்த கலாம் அக்னி சிறகுகள் இந்தியா 2020 திட்டம் இந்தியா உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். அது மட்டும் இல்லாமல் கலாம் இருக்க தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். அதனால் அவர் அனைத்து தமிழ் இலக்கியங்களையும் சுவைத்துள்ளார் கலாமிற்கு பிடித்த நூல்களில் ஒன்று என்றால் அது திருக்குறள். கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் அவர் எழுதிய எனது பயணம் என்ற நூல் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது புத்தகங்கள் படிப்பதில் அவர் அதிக ஆர்வம் கொண்டவர் 1950 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆம்பூர் மார்க்கெட்டில் தி லைட் பிரேம் மினி லென்ஸ் என்ற புத்தகத்தை வாங்கினார் அதைப் பல நாட்களாக பொக்கிஷமாக வைத்திருந்தார்.
ஒன் பெஸ்ட் புக் இஸ் ஈக்குவல் டு ஏ 100 குட் பிரெண்ட்ஸ். பட் ஒன் குட் பிரண்ட்ஸ் இஸ் ஈக்குவல் டு எ லைப்ரரி போன்ற கவிதைகள் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவையாக என்றும் திகழ்கின்றன இளைஞர்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர் இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்கும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனும் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் ராணுவ பயிற்சி பெற வேண்டும் என்று கூறியவர் நெருக்கடியான சமயங்களை சமாளிக்க மக்களுக்காக அப்துல் கலாம் கூறியது கஷ்டம் வரும்போது கண்களை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம் என்று கூறி இருக்கிறார் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைச்சுவையை வெளிப்படுத்த தயங்குவதில்லை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 30 பல்கலைக்கழகங்கள் அப்துல் கலாமின் அறிவியல் சாதனைகளை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது இந்தியாவில் இத்தனை பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் என்ற விஞ்ஞானி அப்துல் கலாம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கலாம் வாங்கிய விருதுகள்
இதேபோல் அமெரிக்கா இங்கிலாந்து சிங்கப்பூர் பெல்ஜிய நாடுகளும் பார்த்திருக்க மேற்பட்ட விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது அப்துல் கலாம் ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்றவர் டாக்டர் பயிரன்யாய் விண்வெளி விருது தேசிய வடிவமைப்பு விருது மத்திய பிரதேச அரசு விருது ஓம் பிரகாஷ் பாசின் விருது 1969 ஆம் ஆண்டு நாயுடு அம்மாள் நினைவு தங்கப் பதக்க விருது அறிவியல் தொடர்பான தேசிய அளவிலான மோடி விருது விஞ்ஞான தொழில்நுட்பத் திறனுக்கான தேசிய விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை அப்துல் கலாமின் சேவையை பாராட்டி மத்திய அரசு 1981 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 1990 இல் பத்ம விபூஷன் விருதும் வழங்கி கௌரவித்தது இதனைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது அப்துல் கலாம் அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார் கலாமின் எளிமையான வாழ்க்கையையும் அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் அது வியப்பதற்கு இல்லை எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று அவர் சொன்னபடியே அனைவரும் கனவு காணுங்கள். அதேபோல் கனவை நிறைவேற்றுங்கள்