கருந்துளை பற்றிய உண்மைகள் (what is black hole)
இந்த பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கபட்ட மிகப்பெரிய இரகசியம் என்னவென்றால் அது கருந்துளை என்றுதான் சொல்ல வேண்டும். இது இவ்வளவு இரகசியமாக கருதப்பட காரணம் இது இயற்பியலுக்கு அப்பாற்பட்டு செயல்படக்கூடியது. தற்போது இருக்கூடிய எந்த இயற்பியல் விதிகளும் இந்த கருந்துளைக்கு பொருந்தாது.அப்படிபட்ட கருந்துளை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
கருந்துளை என்றால் என்ன?
கருந்துளை(BLACK HOLE) என்பது மிகபெரிய அண்ட வெளியில் மற்றும் வின்வெளியில் காணப்படும் சக்தி வாய்ந்த கண்ணுக்கு தெரியாத வெற்றிடமாகும். இந்த கருந்துளை அதிக ஈர்ப்பு விசை கொண்டது எந்த அளவுக்கு என்றால் இதனை கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைகூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் அளவிற்கு சக்திவாய்ந்தது. இது ஒரு சூரியனையே தனக்குள் ஈர்த்து கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த கருந்துளையானது அதனுள் சென்ற சிறிய ஒளியை கூட வெளிய வர விடாது அந்த அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்தது. நமது பால்வெளியின் அருகில் உள்ள ஒரு கருந்துளை நமது சூரியனை விட 40 லட்ச மடங்கு பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கருந்துளை ஒவ்வொரு பால்வெளி அண்டத்திலும் காணப்படும். இந்த கருந்துளை பற்றிய அனைத்து கருத்துகளும் அதனை சுற்றியுள்ள பொருள்களை வைத்தே வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை கருந்துளைக்குள் எவரும் சென்றதில்லை.
BLACK HOLE உருவான விதம்
நாம் அண்டத்தை பற்றி 1 % மட்டுமே அறிந்திருக்கின்றோம் மீதமுள்ளவற்றை நாம் இன்னும் அறிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. இதற்கு சிறந்த எடுத்துகாட்டு DARK ENERGY. நமது அண்டத்தில் 10 கோடி லட்சத்திற்கும் மேற்பட்ட நட்சதிரங்கள் உள்ளன , அதுபோல் நிறைய கருந்துளைகளும் உள்ளன. இந்த கருந்துளை மற்ற கிரகங்கள் போன்று சுழலும் தன்மை கொண்டது. இது ஒளியின் வேகத்தில் 30% அளவிற்கு வேகமாக சுழல்கிறது. மிகவும் பிரம்மாண்டமான ஒளிவீசும் நட்சத்திரம் தனது ஒளியை இழந்து பிறகு அப்படியே அதே நிறையில் சுருங்கும்,இப்படி மிகச்சிறியதாக சுருங்கி அதிக நிறையுள்ள ஒரு கருந்துளையாக மாறும். இந்த கருந்துளை எந்த ஒரு இயற்பியல் விதிகளுக்கும் உட்படாது.
கருந்துளையின் பண்புகள்
இந்த கருந்துளைகளை வெறும் கண்களால் பார்க்க முடியாது. இந்த கருந்துளை சுற்றி சில நேரங்களில் ஒளி, தூசிகள் காணப்படும் இவை என்னவென்றால் உருக்குலைக்கப்பட்ட கிரகங்களின் பாகங்கள் இதனை சுற்றி வருகின்றன அதாவது கருந்துளைகளால் முழுங்கபட்ட கிரகங்களின் பாகங்கள் ஆகும் . கருந்துளை நடுவிலும் என்ன இருக்கின்றது என்பதும் தெரியவில்லை ஏனெனில் இதுவரை யாரும் அதற்குள் சென்று பார்த்ததும் இல்லை இந்த கருந்துளையின் மையத்தில் அதிகப்படியான அழுத்தம் இருக்கும் என அறிவியல் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது .
நாம் இந்த கருந்துளையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் ஒளியை விட அதிக வேகத்தில் செல்ல வேண்டும். ஆனால் ஐன்ஸ்டீன் கோட்பாடு படி எந்த ஒரு பொருளும் ஒளியை விட அதிக வேகத்தில் செல்ல முடியாது. இந்த காரணத்தினாலேயே கருந்துளை பற்றி படிக்க கடினமாக உள்ளது இந்த கருந்துளை பற்றி அறிந்துகொள்ள அதனை சுற்றி வரும் பொருள்களை வைத்தே கண்டறிகின்றனர். இந்த கருந்துளைஅனைத்தையும் தன்னுள் ஈர்த்துகொள்ளும் என்று சொல்லமுடியாது ஏனென்றால் இந்த கருந்துளைகள் தன்னை நோக்கி வரக்கூடிய ஒளி மற்றும் கிரகங்களை ஈர்த்துகொள்ளும். ஆனால் இதுவே தானாக சென்று எந்த கிரகத்தையும் தன்னுள் ஈர்க்காது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
கருந்துளை ஒளிவளையம்
இந்த கருந்துளை அருகிலேயே ஒளி வளையம் சுற்றி வருகிறது. இந்த ஒளியை தாண்டி எந்த ஒரு பொருளும் உள்ளே செல்லாது அவ்வாறு உள்ளே சென்று விட்டாலும் அதனால் வெளியே வரமுடியாது. இந்த ஒளி என்னவென்றால் பாறைகள் ,உருக்குலைக்கப்பட்ட கிரகங்கள் போன்றவை கருந்துளையை வேகமாக சுற்றி வருகிறது இதனை அக்ரீசியன் டிஸ்க் என்று அழைக்கப்படுகிறது. இது பார்க்க சனி கிரகம் போன்று ஒரே வளையத்தில் இருக்குமாம் . இந்த டிஸ்க் வேகமாக சுற்றுவதால் இதன் வெப்பநிலை பல மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் .
கருந்துளை அமைப்பு
இந்த கருந்துளை சனி போன்று பிரம்மாண்டமாக இருக்கும். இந்த கருந்துளை மேற்பரப்பு மற்றும் கீழ்பரப்பு என்ற இரு பக்கங்களிளும் ஒளியை வளைப்பதால் இரு வளையங்கள் இருப்பதுபோல் நம் கண்ணுக்கு தெரியும். ஆனால் ஒரு வளையம் மட்டுமே இருக்கும்.
இந்த கருந்துள்ளையின் ஒரு பக்கம் வெளிச்சமாகவும் மற்றொரு பக்கம் இருளாகவும் தெரியும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கடைசியாக எடுக்கப்பட்ட புகைபடத்தில் கூட அப்படிதான் இருந்தது. கருந்துளைக்கு வெளியே இருப்பது பற்றி தான் தற்போது தெரியவந்ததுள்ளது . கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதை கண்டறிய பல காலங்கள் ஆகலாம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் படிக்க ; தேஜாவு என்றால் என்ன?
கருந்துளை உள்ளே சென்றால் என்னவாகும்
ஒருவர் கருந்துளை உள்ளே சென்றுவிட்டார் என்றால் அவர் உடனே இறந்துவிடுவர். அந்த கருந்துளை அருகே செல்ல செல்ல நேரமானது குறைந்து கொண்டே செல்லுமாம் தற்சமயம் அவர் உயிரோடு இருந்தாலும் அவரால் காலபயணம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் இவை ஒரு கற்பனையாக கூறப்படுகிறது. நிஜ வாழ்வில் கருந்துளை உள்ளே சென்ற உடன் நூடுல்ஸ் போல ஆகிவிடுவோமாம்
இவ்வாறு கருந்துளை உள்ளே செல்லும் ஒருவர் ஈவன் ஹரிசான் என்ற வளையை தாண்டி சென்றாலும் வெளியே இருந்து பார்க்கும் நமக்கு அவரை நாம் பார்க்கும் போது அந்த இடத்திலேயே உறைந்து நிற்பது போல இருக்கும் . ஆனால் அவர் கருந்துளை உள்ள சென்றுவிடுவர். உள்ளே செல்லும் நபருக்கு நேரம் மெதுவாக செலுவது போலும் வெளியிலிருந்து அவருடைய நேரத்தை பார்க்கும் போது வேகமாக ஓடுவது போல் இருக்கும். இதன் வழியாக இந்த கருந்துளையில் காலமும் ஸ்பேசும் ஒன்று என்று கூறப்படுகிறது.
இவ்வாறு கருந்துளை உள்ளே சென்ற நபர் வெளியிலிருந்து பார்க்கும் போது சிவப்பு நிறமாக மாறுவது போல் தோன்றும் பிறகு மறைவது போல் தெரியும் வெளியிலிருந்து பார்க்கும் போது பிறகு கருந்துளை உள்ளே சென்றவருக்கு என்ன நடக்கும் என்புது தெரியாது. இவ்வாறு கற்பனையான ஒரு தியரி கூறப்படுகிறது. மேலும் கருந்துளை உள்ளே ஒரு warm hole இருந்தால் வேறொரு கிரகத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது . இவை அனைத்தும் ஒரு நொடியில் பார்த்துவிடலாம் என்று கூறப்படுகிறது, ஏனெனில் நேரம் என்பது வேகமாக செல்லும்.
கருந்துளை பற்றிய கருத்துக்கள்
இந்த கருந்துளைக்கு முடிவு இருக்கா என்று கேட்டால் அதற்கு ஸ்டீபன் ஹாக்கின் வழங்கிய ஹாக்கிங் ரேடியேசன் என்னும் theory கருந்துளையின் முடிவாக இருக்கலாம். நமது பால்வெளி அண்டத்தில் உள்ள ஒரு கருந்துளை நமக்கு உதவி செய்கிறது எப்படி என்றால் நமது பால்வெளி அண்டத்தை நிலையாக செயல்பட உதவுகிறது.
ஐன்ஸ்டீன் கோட்பாடு படி விண்வெளி உள்ள அனைத்தும் செயல்படுகிறது அதாவது நகர்கிறது ,இயங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது . இந்த கருந்துளையின் நிறை அதிகம் என்பதால் அதிக அளவு ஈர்ப்பு விசை கொண்டது.நிறை எவ்வாறு அதிகமானது என்றால் ஒரு நட்சதிரம் தான் பிற்காலத்தில் மிகச்சிறியதாக சுருங்கி ஒரு கருந்துளையாக மாறுகிறது.
நமது சூரியனில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் இந்த காரணத்தால் அதிக அழுத்தம் ஏற்பட்டு சூரியன் நடுவில் அதிக ஈர்ப்பு விசையை தள்ளும். இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் இது நடக்காமல் போனால் தான் கருந்துளை என்ற ஒன்று உருவாகும். சூரியன் வெடிக்கும் போது இருக்கும் நிறை 20 மடங்கு விட அதிகமாக இருந்தால் கருந்நுளை உருவாகும். 20 மடங்கு குறைவாக இருந்தால் அது கர்ருந்துளையாக மாறாது. இவ்வாறாக கருந்துளை உருவாகிறது.
கருந்துளை கருப்பாக தெரிய காரணம் அது எந்த ஒளியையும் வெளிவிடுவதில்லை அனைத்தையும் தனக்குள் ஈர்த்துகொள்ளும் ஆனால் வெளிவருவதில்லை இந்த கருந்துளை மையம் அனைத்து இயற்பியல் விதிகளையும் முறியடிக்கிறது என்பதுதான் உண்மை.
மேலும்படிக்க; பெருவெடிப்பகொள்ளகை bigbang theory பற்றிய உண்மைகள்