பச்சை பயறு பயன்கள்

பொதுவாக பயறு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பயறு வகைகளை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். பயறு என்றவுடன் நினைவுக்கு வருவது பச்சை பயறு தான். இது பச்சை பயறு, பாசி பயறு என்று அழைக்கப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள்

202 கிராம் வேகவைத்த பச்சைப்பயிறில்,

கலோரிகள் – 212

கொழுப்பு – 0.8 கிராம்

புரதசத்து – 14.2 கிராம்

கார்போஹைட்ரேட் – 38.7 கிராம்

நார்ச்சத்து – 15.4 கிராம்

ஃபோலேட் (B9) – 80% (தினசரி உட்கொள்ள வேண்டிய அளவில்)

மாங்கனீசு – 30%

மெக்னீசியம் – 24%

வைட்டமின் பி 1 – 22%

பாஸ்பரஸ் – 20%

இரும்பு சத்து – 16%

தாமிரம் – 16%

பொட்டாசியம் – 15%

துத்தநாகம் – 11%

வைட்டமின்கள் பி 2, பி 3, பி 5, பி 6 மற்றும் செலினியம் உள்ளது. அவை ஃபெனிலலனைன், லியூசின், ஐசோலூசின், வாலின், லைசின், அர்ஜினைன் மற்றும் பல அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்தவை.

பச்சை பயறு நன்மைகள்:

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்:

பாசி பயறில் பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பாசி பயறு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அன்றாடம் பாசி பயறை உணவில் சேர்த்து வரலாம்.

இதய ஆரோக்கியம்:

பாசி பயறில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடை செய்கிறது. பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுவதற்கு கெட்ட கொழுப்புகளின் செயல்பாடுகள் முக்கிய காரணமாகும். இரத்த குழாய்களில் உண்டாகும் காயங்களைச் சரிசெய்வதோடு வீக்கத்தையும் குறைக்கிறது. மேலும் பாசி பயறு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே பாசி பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

சரும பொலிவு:

பாசி பயறில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள காப்பர்சத்து சருமத்திற்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை பொலிவாக்குகிறது, மேலும் சருமத்தை பருக்கள், காயங்களிலிருந்து பாதுகாக்கிறது. எனவே பாசி பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.

உடல் எடையைக் குறைக்க:

உலகில் பெரும்பாலானோர் கவலைபடும் விஷயம் தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பாசி பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு காரணம் பாசி பயறு நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருப்பது தான். எனவே உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பாசி பயறை சேர்த்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு:

கர்ப்பிணிகள் பொதுவாக ஃபோலேட்டுகள் நிறைந்த உணவினை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, குழந்தையானது குறைபாடுகள் இன்றி பிறக்கவும் வழிவகுக்கிறது. பாசி பயறில் ஃபோலேட்டுகள் வளமான அளவில் உள்ளன. 100 கிராம் பாசி பயறு தினமும் உட்கொள்ள வேண்டிய ஃபோலேட் அளவில் 40% பூர்த்திசெய்கிறது. எனவே பாசி பயறினை அடிக்கடி உண்டு கர்ப்பிணிகள் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.