Disappearing messages in tamil

 

அனுப்பப்பட்ட குறுஞ் செய்திகள் (meg) 7 நாட்களில் தானாக மறைந்துவிடும் அதாவது டெலிட் ஆகிவிடும் அம்சத்தை வாட்ஸ் அப் இந்தியாவில் அறிமுகமாக்கியுள்ளது

தனிப்பட்ட செய்தி மற்றும் குரூப்புகளிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

இந்த அம்சத்தை பயனர் ஒரு தனிப்பட்ட சாட்டிற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். குரூப் செய்திகளுக்கு, அட்மின் மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்தமுடியும். ஒரு பயனருக்கு செய்தியை அனுப்பி, அவர் 7 நாட்கள் தங்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தவில்லை என்றால், அந்த செய்தி தானாகவே அழிந்துவிடும். எனினும், நோட்டிஃபிகேஷனில் அந்த செய்தி காண்பிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பெறப்படும் செய்திகளில் புகைப்படங்கள் தானாக டவுன்லோட் ஆகும். செய்திகள் தானாக மறைந்துவிடும் (disappearing messages)அம்சத்தை ஆன் செய்யும்போது, ஆட்டோ- டவுன்லோட் ஆனில் இருந்தால், செய்திகள் அழிந்தாலும், புகைப்படங்கள் போனில் டவுன்லோட் ஆகியிருக்கும். செய்திகள் மறைக்கப்படும் அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும் சாட்டிலிருந்து அந்த அம்சம் ஆன் செய்யப்படாத மற்றொரு சாட்டிற்கு ஒரு செய்தியை ஃபார்வேர்டு செய்தால் அந்த செய்தி அப்படியே இருக்கும்.