குளிர்காலத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் குளிர்காலம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல சருமத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. அதேபோல் பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் குதிகால் வெடிப்பால் சிலருக்குக் காலில் ரத்தக் கசிவு கூட ஏற்படும். குதிகால் வெடிப்புக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இதன் மூலம் பிரச்சினை தீரும் என்று கூற முடியாது. மாறாக, இந்த இரண்டு இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், குதிகால் வெடிப்பில் இருந்து நீங்கள் நிரந்தரமான நிவாரணத்தை பெறலாம்.
பசு நெய்:
பசு நெய் அனைவரின் வீட்டிலும் கிடைக்கும் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பசு நெய்யை தொடர்ந்து பாதங்களில் தடவி வந்தால் உங்களின் பாதங்கள் மற்றும் குதிகால் தோலை மென்மையாக்க உதவும். அதேபோல் மஞ்சள் மற்றும் வேப்பம்பூவை நெய்யில் கலந்து குதிகாலில் தடவி வந்தால் குதிகால் வெடிப்பு பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குதிகால் வெடிப்பில் இருந்து நிவாரணம் பெற பசு நெய்யை எப்படி பயன்படுத்துவது?
1. பசு நெய்யை சூடாக்கி அதில் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப இலை விழுது சேர்க்கவும்.
2. அதில் சிறிது மஞ்சள் தூள் போட்டு கலக்கவும்.
3. பிறகு, இந்தக் கலவையை ஆற விடவும்.
4. மறுநாள் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
5. பின்னர் தயார் செய்து வைத்த பசு நெய் கொண்டு மசாஜ் செய்யவும்
இயற்கையான ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த பசு நெய் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. தொடர்ந்து பசு நெய் தடவி வந்தால், குதிகால் வெடிப்பு பிரச்சனை படிப்படியாக குறையும்.
குதிகால் வெடிப்புகளில் இருந்து நிவாரணம் பெற,
தேங்காய் எண்ணெயை இப்படிப் பயன்படுத்தலாம்:
1. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.
2. எண்ணெய் மற்றும் நெய் கலவை சூடானதும், அதில் 3-4 ஸ்பூன் பாரஃபின் மெழுகு சேர்க்கவும்.
3. பிறகு, உங்கள் பாதங்களை பியூமிஸ் ஸ்டோனால் தேய்த்து, தண்ணீரில் கழுவவும்.
4. கால்களை ஒரு துண்டு கொண்டு உலர வைக்கவும்.
5. இப்போது தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் கலவையை பாதங்களில் தடவவும்.
இந்தக் கலவையை பாதங்களில் 5-6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைத்து, காலையில் கழுவவும்.