Interesting facts about cat’s (பூனைகளைப் பற்றிய சுவாரசிய தகவல்)

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 8ம் தேதி சர்வதேச பூனைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மனித இனத்தின் பழங்கால செல்லப் பிராணிகளில் ஒன்று பூனை.

எகிப்து நாட்டில் ஆதிகாலத்தில் பூனைகளை வழிபடும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு எலிகள், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான விலங்காகப் பூனைகளை கிரேக்கர்களும் ரோமானியர்களும் வளர்க்கத் தொடங்கினர்.

ஆனால், மத்திய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் கெட்ட சகுனமாகக் கருதப்படும் மூடநம்பிக்கை பரவியது. இதனால் 1600கள் வரை ஆயிரக்கணக்கான பூனைகள் உலகெங்கிலும் கொல்லப்பட்டன.

இந்நிலையில், பூனை இனத்தைப் பாதுகாக்கும் இலக்குடன் சர்வதேச விலங்குகள் நல நிதியத்தால் கடந்த 2002-ம் ஆண்டு சர்வதேச பூனைகள் தினம் அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன.

பூனைகள் 100க்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்கூடியவை.

பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும்.

உலகளவில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணி பூனை

பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.

பூனைகள் இரவில் நன்றாக பார்க்கும் திறன் கொண்டவை.

பூனை மிகவும் சுத்தமான விலங்கு… தன் நேரத்தின் பெரும்பகுதியை உடலின் மேற்பகுதியை நக்கிச் சுத்தம்செய்வதில் செலவிடும்.

ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை போடும்.

பூனைகள் தனது காதுகளை தனித்தனியாக அசைக்கக்கூடியது 180 டிகிரி வரை அசைக்கும்.

மனிதர்களின் கைரேகையினைப் போலவே பூனைகள் மூக்கு ரேகை இருக்கும்.

மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் 6ல் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன்

கொண்டது.

பூனையின் உள்ளங்கால்கள் வழியாக வியர்வை வெளியேறும்.

32 மாடிகள் உயரத்திலிருந்து விழுந்தாலும் பூனைகள் உயிர் பிழைத்துவிடும்.

ஒரு பூனை அதன் நீளத்தினை விட 6 மடங்கு நீளத்தினைத் தாண்டக்கூடியது.

பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விட 14 மடங்குகள் அதிகம்.

பூனையின் எடை – 2.5லிருந்து 7 கிலோ வரை

சராசரி உயரம் – 23 – 25 செ.மீ

உடல் நீளம் – 46 செ.மீ

வால் – 30 செ.மீ

உடல் வெப்பநிலை – 38.1டிகிரி செல்சியஸ் – 39.2 டிகிரி செல்சியஸ்

பற்கள் – 30

வேகம் – மணிக்கு 48 கி.மீ

கர்ப்பக்காலம் – 2 மாதம்

உறங்கும் நேரம் – 12 – 18 மணி நேரம்

ஆயுட்காலம் – 12 – 20 வரை

சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன.

பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.

பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.

அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.

பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.

பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை.

மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.