Naatu Naatu Naatu Naatu Oscar Awards 2023: RRR திரைபப்டத்தில் இடம் பெற்ற நாட்டு நாடு பாடல் சிறந்த அசல் பாடலுக்கான 2023 அகாடமி விருதுகளை வென்றது சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்!
Oscar Awards 2023:
நாட்டு நாடு RRR சிறந்த அசல் பாடலுக்கான 2023 அகாடமி விருதுகளை வென்றது நாட்டு நாடு பாடல். இதுமிகப்பெரிய சாதனையாகும். 95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததற்குக் காரணம் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றதால், அப்பாடல் ஆஸ்கர் விருதையும் வெல்லும் என பலரும் கணிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் விருது பெற்று சாதனை படைத்துள்ளது.
இசையமைப்பாளர் கீரவாணி இசையில், சந்திரபோஸ் எழுதிய பாடல் இது. ’நாட்டு நாட்டு’ பாடலுக்கான நடனத்தை வடிவமைத்தவர் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் நடனத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இது வெறும் இசை, நடனம் மட்டுமல்ல. ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஒட்டுமொத்த கதைச் சுருக்கமே இந்த 10 நிமிட நாட்டு நாட்டு பாடல் என்று கூறலாம்.
கடந்த காலங்களில் மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் லகான் உள்ளிட்ட இந்திய படங்கள் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஆஸ்கார் இறுதிப்பட்டியலுக்கு தகுதி பெற்ற முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது RRR திரைப்படம்.
சிறந்த இயக்குநர் (ராஜமெளலி), சிறந்த நடிகர் (ஜூனியர் என்.டிஆர், ராம் சரண்), சிறந்த துணை நடிகர்(அஜய் தேவ்கன்), சிறந்த பாடல் ( நாட்டு நாட்டு), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த பட தொப்பாளர் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒலி அமைப்பு (ரகுநாத் கெமிசெட்டி, போலோ குமார் டோலாய், ராகுல் கர்பே), சிறந்த திரைக்கதை ( விஜயேந்திர பிரசாத், ராஜமெளலி, சாய் மாதவ்), சிறந்த துணை நடிகை ( ஆலியா பட்), சிறந்த ஒளிப்பதிவு ( செந்தில் குமார்), சிறந்த தயாரிப்பு (சபு சிரில்), சிறந்த ஆடை அமைப்பாளர் ( ராம ராஜமெளலி), சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பணையாளர் (நல்ல ஸ்ரீனு, சேனாபதி ), சிறந்த காட்சி அமைப்பு (ஸ்ரீனிவாஸ் மோகன்) ஆகிய பிரிவுகளின் கீழ் பக்கா பிளான் போட்டு மீண்டும் ஆஸ்கர் ரேஸில் இறங்கியுள்ளது ‘ஆர் ஆர் ஆர்’. மேலும் ரசிகர்களும் விருதுகளை குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.