கடந்த ஒரு சில நாட்களாக பரபரப்பா பேசப்படுவது தமிழ்நாடா….தமிழகமா… அப்படின்னு தான்.இவை அனைத்தும் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் எம் ரவி அவர்களாலே சட்டசபையில் இருந்து பொங்கல் அழைப்பிதழ் வரை தன் கோபத்தை நிலையூட்டி உள்ளார். தமிழ்நாடு, தமிழகம், அமைதி பூங்கா, திராவிடம் போன்ற வார்த்தைகளை சட்டசபையில் தவிர்த்ததோடு மட்டுமின்றி சட்டசபையில் இருந்து பாதியிலேயே அவர் வெளிநடப்பம் செய்துள்ளார். இது மட்டுமின்றி மேலும் அவர், ” தமிழ்நாட இனி தமிழ்நாடு என்று சொல்ல வேண்டாம், தமிழகம்னு சொல்லலாம்” என்று முன்மொழிந்தது அனைவரிடத்திலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.அப்படி தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று எப்படி பெயர் சூட்டப்பட்டது? ஏன் தமிழ்நாடு என்று சூட்டப்பட்டது? மேலும் தமிழ்நாட்டினை ஏன் தமிழ்நாடு என்று சொல்ல வேண்டும்….. ஏன் தமிழகம் என்று சொல்லக்கூடாது…. என்பதற்குப் பின்னால் நூற்றாண்டு கால வரலாறு அடங்கியுள்ளது.
1948 -ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்பட்ட நிலையில், அப்போதைய அனைத்து மாநிலங்களும் மொழிவாரியாக பிரிக்கப்பட்டது.இப்படி பிரிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை மதராஸ் ஸ்டேட் என்றே பெயரிடப்படுகிறது.இதனை எதிர்த்து 1955 ஆம் காலகட்டத்தில் தியாகி சங்கரலிங்கனார், 1952 இல் பொட்டி ஸ்ரீ ராமலூவின் ஆந்திர கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதனை நினைவூட்டி 12 கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து 76 நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை விருதுநகர் மாவட்டம் தேசபந்து மைதானத்தில் மேற்கொள்கிறார்.
“தமிழ்நாடு என்பது நமது நாடா அல்லது இந்தியா நமது நாடா? எப்படி இதையும் நமது நாடு அதையும் நமது நாடு என்று சொல்வது?” என முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டமன்றத்திலேயே கேள்வியெழுப்பினார்.´´
அப்பொழுதைய காங்கிரஸ் தலைவர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தினால் உடல் நிலையில் நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்த சங்கரலிங்கனார் 76 வது நாள் தன் உயிரை மாய்க்கிறார். அதன் பிறகு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற போராட்டங்கள் வலுப்பெறுகின்றது.
சுதந்திரத்திற்கு பிறகு மொழிவாரியாக அனைத்து மாநிலங்களும் பிரிக்கப்பட்ட நிலையில், அதுவரை மதராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த நிலையில் மலையாளி,கன்னடர்கள் மற்றும் தெலுங்கர்கள் பிரிக்கப்பட்ட சூழ்நிலையிலும் தமிழ்நாடு மதராஸ் ஸ்டேட் என்றே அழைக்கப்பட்டது.
“தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன லாபத்தை அடையப்போகிறீர்கள்?”
`பார்லிமென்ட்டை 'லோக்சபா' என்றும்... கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை
ராஜ்யசபா’ என்றும் மாற்றியதால்… நீங்கள் என்ன லாபம் அடைந்துவிட்டீர்கள் !´´
கடந்த ஒரு சில நாட்களாக பரபரப்பா பேசப்படுவது தமிழ்நாடா….தமிழகமா… அப்படின்னு தான்.இவை அனைத்தும் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் எம் ரவி அவர்களாலே சட்டசபையில் இருந்து பொங்கல் அழைப்பிதழ் வரை தன் கோபத்தை நிலையூட்டி உள்ளார். தமிழ்நாடு, தமிழகம், அமைதி பூங்கா, திராவிடம் போன்ற வார்த்தைகளை சட்டசபையில் தவிர்த்ததோடு மட்டுமின்றி சட்டசபையில் இருந்து பாதியிலேயே அவர் வெளிநடப்பம் செய்துள்ளார். இது மட்டுமின்றி மேலும் அவர், ” தமிழ்நாட இனி தமிழ்நாடு என்று சொல்ல வேண்டாம், தமிழகம்னு சொல்லலாம்” என்று முன்மொழிந்தது அனைவரிடத்திலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.அப்படி தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று எப்படி பெயர் சூட்டப்பட்டது? ஏன் தமிழ்நாடு என்று சூட்டப்பட்டது? மேலும் தமிழ்நாட்டினை ஏன் தமிழ்நாடு என்று சொல்ல வேண்டும்….. ஏன் தமிழகம் என்று சொல்லக்கூடாது…. என்பதற்குப் பின்னால் நூற்றாண்டு கால வரலாறு அடங்கியுள்ளது. 1948 -ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்பட்ட நிலையில், அப்போதைய அனைத்து மாநிலங்களும் மொழிவாரியாக பிரிக்கப்பட்டது.இப்படி பிரிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை மதராஸ் ஸ்டேட் என்றே பெயரிடப்படுகிறது.இதனை எதிர்த்து 1955 ஆம் காலகட்டத்தில் தியாகி சங்கரலிங்கனார், 1952 இல் பொட்டி ஸ்ரீ ராமலூவின் ஆந்திர கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதனை நினைவூட்டி 12 கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து 76 நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை விருதுநகர் மாவட்டம் தேசபந்து மைதானத்தில் மேற்கொள்கிறார். “தமிழ்நாடு என்பது நமது நாடா அல்லது இந்தியா நமது நாடா? எப்படி இதையும் நமது நாடு அதையும் நமது நாடு என்று சொல்வது?” என முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டமன்றத்திலேயே கேள்வியெழுப்பினார்.´´ அப்பொழுதைய காங்கிரஸ் தலைவர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தினால் உடல் நிலையில் நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்த சங்கரலிங்கனார் 76 வது நாள் தன் உயிரை மாய்க்கிறார். அதன் பிறகு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற போராட்டங்கள் வலுப்பெறுகின்றது. சுதந்திரத்திற்கு பிறகு மொழிவாரியாக அனைத்து மாநிலங்களும் பிரிக்கப்பட்ட நிலையில், அதுவரை மதராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த நிலையில் மலையாளி,கன்னடர்கள் மற்றும் தெலுங்கர்கள் பிரிக்கப்பட்ட சூழ்நிலையிலும் தமிழ்நாடு மதராஸ் ஸ்டேட் என்றே அழைக்கப்பட்டது. “தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன லாபத்தை அடையப்போகிறீர்கள்?” “பார்லிமென்ட்டை ‘லோக்சபா’ என்றும்… கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை `ராஜ்யசபா’ என்றும் மாற்றியதால்… நீங்கள் என்ன லாபம் அடைந்துவிட்டீர்கள் !´´
1963இல் பேரறிஞர் அண்ணா மேலவையில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றக் கோரிக்கை முன்வைத்த பொழுது, நாட்டிற்குள் நாடா பிரிவினையை உண்டாக்கும் என பல கேள்விகளால் அந்த கோரிக்கையினை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். ஆனால் தமிழ் பேசக்கூடிய தேசம் தமிழ் தேசம் அதாவது தமிழ்நாடு என்று அழைக்கப்பட வேண்டும் என்று விடாப்பிடியாக சட்டமன்றத்தில் தியாகி சங்கரலிங்கனரின் தியாகம் மற்றும் போராட்டத்தை முன்னிறுத்தி, 1968-ல் தமிழ்நாட்டிற்கு இனி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படும் வேண்டுமென்று ஒருமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், ஆரம்பகாலகட்டங்களில் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இந்த தீர்மானம் மத்தியிலும், மாநிலத்திலும் தோல்வியையே தழுவியது. அண்ணா மட்டுமின்றி காமராஜர்,கக்கன்,பெரியார்,சிவஞானம்,சின்னதுரை அப்போதைய சோசியலலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்.இந்த தீர்மானத்தை சட்டமன்றத்திற்கு இட்டுச் சென்ற வழிநடத்தியவர். இப்படியான பல போராட்டங்கள் மற்றும் உயிர் தியாகங்கள் நிறைந்தது தமிழ்நாடு என்று ஒற்றை சொல். அதனால் தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை மட்டுமின்றி அது நம் தலைவர்களின் தியாகங்கள் மற்றும் நம்முடைய அடையாளம் ஆகும். இதனை மறுத்து அல்லது மறைத்து கூறுவது தாய் மண்ணிற்கும் தமிழ் தேசத்திற்கும் செய்யும் துரோகமாகும்.1963இல் பேரறிஞர் அண்ணா மேலவையில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றக் கோரிக்கை முன்வைத்த பொழுது, நாட்டிற்குள் நாடா பிரிவினையை உண்டாக்கும் என பல கேள்விகளால் அந்த கோரிக்கையினை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். ஆனால் தமிழ் பேசக்கூடிய தேசம் தமிழ் தேசம் அதாவது தமிழ்நாடு என்று அழைக்கப்பட வேண்டும் என்று விடாப்பிடியாக சட்டமன்றத்தில் தியாகி சங்கரலிங்கனரின் தியாகம் மற்றும் போராட்டத்தை முன்னிறுத்தி, 1968-ல் தமிழ்நாட்டிற்கு இனி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படும் வேண்டுமென்று ஒருமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், ஆரம்பகாலகட்டங்களில் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இந்த தீர்மானம் மத்தியிலும், மாநிலத்திலும் தோல்வியையே தழுவியது. அண்ணா மட்டுமின்றி காமராஜர்,கக்கன்,பெரியார்,சிவஞானம்,சின்னதுரை அப்போதைய சோசியலலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்.இந்த தீர்மானத்தை சட்டமன்றத்திற்கு இட்டுச் சென்ற வழிநடத்தியவர். இப்படியான பல போராட்டங்கள் மற்றும் உயிர் தியாகங்கள் நிறைந்தது தமிழ்நாடு என்று ஒற்றை சொல். அதனால் தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை மட்டுமின்றி அது நம் தலைவர்களின் தியாகங்கள் மற்றும் நம்முடைய அடையாளம் ஆகும். இதனை மறுத்து அல்லது மறைத்து கூறுவது தாய் மண்ணிற்கும் தமிழ் தேசத்திற்கும் செய்யும் துரோகமாகும்.