பிலடெல்பியா மர்ம ஆய்வு mystery behind philadelphia experiment in tamil

                      PHILADELPIA EXPERIMENT

SOURCE:PIXABAY

வணக்கம் நண்பர்களே நம் வாழ்க்கையில் நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வாகனங்களை பயன்படுத்துவோம், ஆனால்  இந்த வாகனமே இல்லாமல் பயனித்தால் எப்படி இருக்கும் என்று சிந்திதுள்ளீர்களா அதற்கு பெயர்தான் TELEPORTATION என கூறுகிறார்கள். இது சாத்தியமா என யோசித்து பல்வேறு சோதனைகள் நடத்தபட்டன அதில் ஒரு ஆய்வுதான் இந்த PHILADELPIA – ஆய்வு இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் அமெரிக்காவானது ஒரு கப்பலையும் அதில் இருந்த மனிதர்களையும் TELEPORTATION செய்துள்ளது என பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர் அப்படி உண்மையில் இந்த ஆய்வை அமெரிக்கா நடத்தியதா ஆய்வில் உட்படுத்தபட்ட மனிதர்கள் என்ன ஆனார்கள் என விளக்கமாக இந்த பதிவில் காண்போம்.

TELEPORTATION என்றால் என்ன?

philadelphia experiment tamil

teleportation- என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது அதாவது நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வாகனங்களை உபயோகபடுத்துகிறோம் இந்த வாகனங்களை பயன்படுத்தமால் நீங்கள் நினைத்த இடத்திற்கு ஒரு சில நொடிகளில் செல்ல முடியும் எடுத்துகாட்டாக நீங்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விரும்பினால் இந்த டெலிபோர்டேசன் முறையை பயன்படுத்தி உங்களால் ஒரு சில நொடிகளில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல முடியும் இதை தான் TELEPORTATION என கூறுகிறார்கள். அப்படியென்றால் TELEPORTATION சாத்தியமா என கேட்டால் ஆம் சாத்தியம்தான் 1993 -களில்  இயற்பியல் ஆய்வாளாரான சார்லஸ் பென்னட் என்ற ஆய்வாளரும் அவரின் குழிவினரும் இந்த டெலிபொர்டேசன் சாத்தியம்தான் எனவும் ஆனால் இந்த டெலிபோர்டேசன் செய்யும் பொருளோ அல்லது நபரோ அழிந்துவிடும் என கூறி அமெரிக்க இயற்பியல் ஆய்வு குழுமத்தில் நிரூபித்தனர் 2012-ஆம் ஆண்டு போட்டான் துகள்களை ENTANGLEMENT என்ற முறையை பயன்படுத்தி ஒரு ஃபோடான் துகளை 90 கி.மீ டெலிபோர்ட் செய்து சீனாவின் பல்கலைகழகம் சாதனை படைத்தது இந்த டெலிபோர்டேசனில் அடுத்தகட்ட ஆய்வில் தற்போது ஜப்பானும் இறங்கியுள்ளது இவர்களின் ஆய்வு மனிதன் அல்லது ஒரு பொருளில் அணுக்களை தனிதனியாக பிரித்து அதனை மீண்டும் ஒன்றுசேர்ப்பதே இது சாத்தியமாவது கடினம் என்றே அனைவராலும் செல்லபடுகிறது.

PHILADELPIA ஆய்வின் நோக்கம்

time travel
1990-களுக்கு பிறகே இந்த டெலிபோர்டேசன் உண்மை என அனைவராலும் ஏற்றுகொள்ளபட்டது ஆனால் இந்த பிலடெல்பியா நிகழ்வோ 1943- ஆம் ஆண்டு நிகழ்ந்தது எப்படி இது சாத்தியம் என நமக்கே ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்துகிறது வாருங்கள் தெளிவாக காணலாம் .
WAR

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது இரண்டு நாடுகள் ஒன்று ஹிட்லரின் ஜெர்மன் படை மற்றொன்று ஜப்பானின் அதிநாவீன இராணுவபடை இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவை விட தொழில்துட்பத்தில் இராணுவ படைகளில் பலம் பொருந்தியதாக இருந்தன இந்த நாடுகளை வீழ்த்த அமெரிக்க எடுத்த அனைத்து நடவடிக்கையும் தோல்வியை தழுவியது . அப்பொழுதுதான் அமெரிக்காவிற்கு இந்த விபரீத திட்டத்தை கையில் எடுக்கின்றனர் எதிரியின் கண்களில் இருந்து மறைந்து  அவர்களை தாக்குவது அதற்காகதான் இந்த பிலடெல்பியா ஆய்வு நடத்தபட்டதாகவும் கூறுப்படுகிறது.

philadelphia experiment
1943- ஆம் ஆண்டு பிராஜக்ட் ரெயின்போ என்ற பெயரில்தான் இந்த பிலடெல்பியா ஆய்வு முதன்முதலில் ஒரு கப்பலில் நடத்தபடுகிறது. USS ENRICH அமெரிக்காவின் போர்கப்பலில் இந்த ஆய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டன ,அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருந்தது எதிரிகளுக்கு தெரியாமல் அவர்களுடைய ரேடார்களுக்கு தெரியாமல் அவர்களை தாக்கிவிட்டு மீண்டும் மறைவது. இந்த ஆய்விற்காக தேர்ந்தெடுக்கபட்ட ஆய்வாளர்களும் தொழில் சார்ந்த வல்லுநர்களும் வேலை செய்து வந்துள்ளனர் .
war machine

பிறகு கப்பலில் அதிக திறன் கொண்ட  இன்ஜின்களும் அதிக காந்த புலத்தை ஏற்படுத்தகூடிய கருவிகளும் வைக்கபட்டு அந்த ஆய்வு இரண்டு முறை நடத்தபட்டதாகவும் கூறப்படுகிறது. இரண்டு முறை நடத்தபட்ட ஆய்வுகளிலும் மனிதர்கள் யாரும் இல்லை இறுதியாக மனிதர்களை வைத்து ஆய்வை மேற்கொள்ள தயாராகுகின்றனர் தற்போது கப்பலில் மனிதர்கள் உள்ளனர் சோதனை தொடங்கப்படுகிறது அனைத்து கருவிகளும் சரியாக வேலை செயுகின்றன கப்பலை சுற்றி காந்தபுலம் ஏற்படுவமையும் அவர்கள் உணர்கின்றனர் பிறகு எவரும் காணாத ஒரு அதிசய நிகழ்வு அவர்கள் கண் முன்னே நிகழ்கிறது அதுஎன்னவென்றால் அந்த கப்பால் அனைவரின் கண் முன் இருந்தும் மாயாமாக மறைகிறது அந்த கப்பல் அதுமட்டுமின்றி ரேடார் கருவியில் இருந்தும் கப்பல் மறைகிறது . அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர் ஆனால் அப்பொது அவர்களுக்கு தெரியாது உண்மையில்  அங்கு என்ன நடந்துதென்று.

philadelpia

சரியாக 20 நிமிடம் கழித்து அனைவரின் கண்முன்னும் மீண்டும் அதே கப்பலு தோன்றுகிறது அப்பொழுதான் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்தருந்தது அந்த கப்பலில் இருந்த மனிதர்கள் பைத்தியம் பிடித்தும் இறந்தும் காணப்பட்டனர் மற்றும் சிலரோ அணுக்கருக்களின் பிரிவு இணைவின் காரணமாக இரும்பு சிலைகளாக மாறிவிட்டார்கள் என்றும் ஒரு சிலர் அந்த கப்பலில் காணவில்லை என்றும் கூறப்படுகிறது அவர்கள் காலப்பயணம் செய்து எதிர்காலத்திற்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது . அந்த கப்பலில் இருந்த பெரும்பாலான மனிதர்களின் உடல் பாகங்கள் கப்பலின் பாகங்களோடு இணைக்கபட்டு இருப்பதையும் காண்கின்றனர் இதற்கு காரணுமும் அந்த அணுக்களின் மாற்றம்தான். அதன்பிறகு இந்த ஆய்வை அமெரிக்க அரசு மிகவும் இரகசியமாக வைத்துள்ளதாகவும் இந்த ஆய்வில் வேலை செய்த அனைத்து  நபர்கள் அவர்களின் குடும்பங்களுக்கு என்ன ஆனது என்பதும் ஒரு விடைதெரியாத ம்மமே . இது குறித்து அமெரிக்க அரசிடமும் இராணுவத்திடமும் கேட்கபட்ட கேள்விகளுக்கு அவர்கள் இதுவரை ஒரு தெளிவான விளக்கத்தை கொடுக்கவில்லை. இறுதியாக உண்மையில் இந்த ஆய்வு நடத்தபட்டதா என்று கேட்டால் அரசு தரப்பில் இல்லை என கூறுகிறார்கள் ஆனால் மக்களோ இது உண்மையாக நடந்துள்ளது என மக்கள் நம்புகின்றனர் . இந்த ஆய்வு நடத்தபட்டதா இல்லை வெறும் கட்டகதையா என்பது நமக்கு தெரியாது ஆனால் இந்த ஆய்வு எதிர்காலத்தில் நடக்கும் என்பது மட்டும் உறுதி அதற்கான ஆயத்த பணிகளில் வல்லரசு நாடுகள் இறங்கியுள்ளன என்பதே நிதர்சனமான உண்மை.

                                                         நன்றி!