சிவன்;
இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளில் ஒருவர். சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகும். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கப்படுகின்றார். இவர் தனது ஒரு பகுதியில் இருந்து அன்னை பராசக்தி உருவாக்கினார். பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை உருவாக்கினார். தனது உடுக்கையில் இருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார். பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்ம தேவரையும், அதன் பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விட்டுணுவையும் உருவாக்கினார். கடவுள்களின் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார். சிவனின் இடப்புறத்தில் இருந்து விஷ்ணுவும், வலப்புறத்தில் இருந்து பிரம்மரும் உருவானார்கள். என்று திருமாலின் அவதாரங்களின் ஒருவரான வேதவியாசர் கூறுகிறார். பிரம்மன் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளாக உருத்திரன் உதித்தார் என்று வாயுபுராணம் கூறுகின்றது.
சிவனின் வேறு பெயர்கள்;
ஈசன்,ஐ, அம்மையப்பன், மகாதேவன், முக்கட் செல்வன், லிங்கம், ஈஸ்வரன் இன்னும் பல பெயர்கள் சிவனுக்கு இருக்கின்றன.
சொற் பிறப்பும் பிற பெயர்களும்;
சிவன் என்றால், தமிழில் “சிறந்தவன் “என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்களகரமானது என்று பல பொருள் உண்டு., ஈர்ஞ்சடைசுந்தணன்,காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனைத்தும் சிவபெயர்கள் சங்கநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யோக நிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமும் சித்திகளில் வல்லவர் என்பதால் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபராகச் சித்தரிக்கப்படுவதால், பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகின்றார்.
ஆதிசக்தி;
சைவ மரபில், சிவம் சக்தி ஆகிய இரண்டும், ஒன்றில் ஒன்று இன்றியமையாத இரு அம்சங்கள். அவற்றை பரமசிவம் , ஆதிசக்தி என கூறுவார்கள். அந்த இரு பேராற்றல்களின் திருவிளையாடல்களாகவே புராணக்கதைகளை நோக்குகின்றனர். தக்கனின் தவத்தால் அவனுக்கு மகளாக பிறக்கும் ஆதிசக்தி, “சதிதேவி” என்று அறியப்படுகிறார். தக்கனின் அனுமதியின்றி சதி சிவனை மணந்ததால் வெகுண்ட தக்கன் அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் யாகம் செய்கின்றான். அங்கு அழைப்பின்றி வந்த சதிதேவியிடம், தக்கன் ஈசனை இழிவு பேசுவதால் ,சதி கேள்வித்தீயில் விழுந்து மறைய, ஆங்காரமற்ற ஈசனின் திருமுடியிலிருந்து வீரபத்திரர் தோன்றி, யாகத்தை அழிக்கிறார். சதியின் உடல் யாககிண்டத்தில் கிடைத்ததாகவும், அதை ஆற்றாமையுடன் ஈசன் தூக்கிச் சென்றபோது, அவற்றை திருமால் ஆழியால் சிதைக்க, அதை வீழ்ந்த இடங்களை சக்தி பீடங்களானதாகவும் கூறுகின்றன.பின் பர்வதராசன் மைனாவதியின் தவத்துக்கிரங்கி, சக்தி மீண்டும் பார்வதியாக அவதரித்தாள். கடும் தவமிருந்து ஈசனை கணவனாக அடையும் உமையவள். பல அசுரர்களை அழித்து, தேவர் துயர் தீர்த்தம், பிள்ளையார் மற்றும் முருகன் ஆகியோரை படைத்ததும், ஈசன் தேவியாக வீற்றிருக்கிறாள்.
கங்கை;
பகிரதனின் முன்னோர்கள் சாபம் பெற்று சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைக்க பார்வதியின் மூத்தவளான கங்கை, பூமியில் நதியாக பாய்ந்தால் மட்டுமே இயலும் என்பதை அறிந்த பகிரதன் கங்கையை நோக்கி தவம் இருந்தார்.பகிரதன் சிவபெருமானை நோக்கித் தவமியற்றியதால் கங்கையை சடைமுடியில் தாங்கிப் பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டதனால் சிவபெருமான் கங்காதரன் என்று பெயர்பெற்றார்.
சிவபெருமானின் புதழ்வர்கள்;
சிவபெருமானது ஐந்து குமாரர்கள் பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், அய்யனார் ஆவார். பாற்கடலை கடைந்தபோது, திருமால் மோகினி அவதாரம் எடுத்துச் சிவபெருமானுடன் கூடிப் பெற்ற அய்யனாரை இன்று ஐயப்பன் என்று அறியப்படுகிறார்.
Forms of Shiva;
சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனி சத்தர் என்றும்,அருவுருவம்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறார்.அருவுருவமாக லிங்கமும், மகேசுவரமூர்திகள் மற்றும் சிவ உருவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன. தடத்தநிலையில் ஈசன் கொள்ளும் 64 வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான 25 சிவமூர்த்திகளும் மகேஸ்வர மூர்த்திகளும் என்று அழைக்கப்படுகின்றன.
The famous Sivathalams;
சிவபெருமானே மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் கோவில்கள். குறிப்பாகக் கம்போடியா, நேபாளம், இலங்கை, இந்தியா என பல நாடுகளை கூறலாம்.பஞ்சபூதத்தலங்கள்,பஞ்சகேதார தலங்கள்,பஞ்ச தாண்டவ தலங்கள்,பஞ்ச குரோச தலங்கள்,ஆறு ஆதார தலங்கள்,சப்த விடங்க தலங்கள்,சப்த கரை சிவ தலங்கள், சப்த கைலாய தலங்கள்,அட்டவீரட்டானத் தலங்கள்,நவலிங்கபுரம்,நவ கைலாயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றார்.
சிவ அடையாளங்கள்;
நெற்றிக்கண் கொண்டிருந்தள், பிறை சூடியிலிருந்தல் முதலியவற்றை சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் தனித்துவ அடையாளங்களாக தேவார திருநூல்கள் ஆகும். கங்கை, சடைமுடி, நெற்றிக்கண், பிறைநிலா, தோடுடையசெவி, நாகப்பரணம், நீல கண்டம், பொன்மேனி, புலித்தோல், யானைத்தோல், மான்தோல், உத்திராட்சம், திரிசூலம், உடுக்கை, மான், நந்தி போன்றவைகள் சிவனுடைய அடையாளங்கள் ஆகும்.
சிவ ஆயுதங்கள்;
திரிசூலம்-திரி என்றால் மூன்று என பொருள்படும். மூன்று கூர்முனைகளை உடைய ஆயுதம் திரிசூலம் ஆகும். மலு-கோடரி போன்ற அமைப்பினை உடையது. பிநாகம்-சிவபெருமானுடைய வில். சிவ தனுசு- சிவபெருமானுடைய வில்.கட்வங்கம் – காபாலிக ஆயுதம்.சந்திரஹாசம் -வால். இவற்றில் மழு என்பது சிற்பங்களில் சிவபெருமானை அறியப்பயன்படுகின்ற ஆயுதம் ஆகும். சிவபெருமானுடைய வடிவங்களே இந்த மனுவினைத்தாங்கியபடியுள்ளனர்.