வணக்கம் இன்றைய பதிவில் தற்போதைய இளைய சமூகத்தினருக்கு இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை பாலியல் பற்றிய தெளிவான புரிதல் இல்லாததுதான். இதனால் பெரும்பாலானோர் ஆபாச படங்களுக்கு அடிமையக உள்ளனர். ஆபாசம் படம் பார்ப்பது சரியா தவறா அதனால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
porn addiction என்றால் என்ன?
ஆபாச போதை (porn addiction) என்பது ஒருவரின் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கும் அதுமட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கை முறை நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் . “ஆபாச போதை” ஆன மனநல கோளாறுகள் மற்றும் நோயறிதல் போன்ற தகவல்களை மேற்கொள்ளும் -V (DSM-5) நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிக்கையில் இது ஒரு நோயாகவோ அல்லது போதையாகவோ குறிப்பிடபடவில்லை. இருப்பினும், ஆபாசத்திற்கு அடிமையான ஒருவரின் வாழ்க்கையில் பல நேலங்களில் கடுமையான மற்றும் மோசமான நிகழ்வுக்கு வழிவகுக்கிறது.
ஆபாச படங்கள் பாரக்கும் சில தரவுகள்
- நம் நாடு இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 89% பேர் ஆபாச தளங்களுக்கு செல்கின்றனர்.இதில் குறிப்பிடதகுந்த விஷயம் என்னவென்றால் இந்திய பெண்களில் 30% பேர் ஆபாச தளங்கள் பயன்படுத்துகின்றனர்.
- இந்த உலகில் இருக்கும் 5-ல் ஒரு மொபைல் போனில் ஆபாச படம் பார்க்கபடுகிறது.
- ஆண்களில் 60% பேர் திருமணமான பிறகும் ஆபாச படம் பார்க்கிறார்கள்.
ஆபாச படம் பார்ப்பது உடலுக்கு நல்லதா
இந்த ஒரு தலைப்பானது முற்றிலும் விவாதத்திற்கு உட்பட்டது ஒரு சிலர் கூறுகின்றனர் ஆபாசம் படம் பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர். ஒரு சிலர் உணர்வு ரீதியான பிரச்சனைகளுக்கு அறிவுபீர்வமான ஆபாச படங்கள் சிறந்தது என்கின்றனர். என்னை பொருத்துவரை ஆபாச படம் பார்ப்பது தவறல்ல ஆனால் அதற்கு அடிமையாகமல் இருக்க வேண்டும் படங்கள் பார்ப்பதற்கு பதிலாக அது பற்றிய அறிவு பூர்வமான கருத்துகளை தேடி படிப்பது சிறந்தது.
ஆபாச போதை அறிகுறிகள்
- அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பது அனைத்து நேரங்களிலும் அதை பற்றியே சிந்திப்பது
- இந்த படங்கள் பார்ப்பது உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிடும்.
- அதிக நேரம் ஆபாச படத்தை பார்ப்பதில் செலவிடுவீர்கள் அதுபோல முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான ஆபாச படங்கள் பார்ப்பதை அதிகம் விரும்புவீர்கள்.
- அதிகமாக உணர்ச்சி வசபடுவீர்கள் அதிக மனுளைச்சலுக்கு ஆளாகுவீர்கள்.
- அதிக சுய இன்பம் செய்ய தூண்டபடுவீர்கள்.
- உங்களால் பெண்களிடம் சகஜமாக பேசமுடியாது
- பெண்களை கண்டால் முற்றிலும் தவறான எண்ணங்கள்தான் உங்களுக்கு தோன்றும்
- உங்கள் மனநிலையை மாற்ற ஆபாச படங்கள் பார்க்க தூண்டப்புவீர்கள்.
ஆபாச படங்கள் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
ஆபாச படங்கள் பார்ப்பதால் உங்கள் மூளையில் டோபோமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது இது உங்களை சந்தோஷமாக வைத்துகொள்ளும் இதனால் உங்களை அந்த செயலை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.
நீங்கள் ஆபாச படம் பார்க்கும்போது உங்கள் மூளை அதை உண்மை என நம்பும் அதாவது நீங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்க உள்ளீர்கள் என நினைத்துகொள்ளும் இதானல் உடலுறவின்போது ஏற்படும் உணர்வுகள் உங்களுக்கு இந்த படம் பார்ப்பதால் கிடைக்கும்.
இப்படி நடப்பதால் உங்களுக்கு விரைவில் விந்து வெளியேறுதல் மற்றும் உங்கள் காதலி மீது ஈர்ப்பு இல்லாமல் போக அதிக வாய்ப்புள்ளது.
உங்களுக்கு விறைப்புதன்மை என்பது குறைவதற்கு வாய்ப்புள்ளது.
அதிகபடியான சுய இன்பம் மன உளைச்சலுக்கு வழிவகுக்கும்.உங்கள் உணர்ச்சகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதிகபடியான கோபம் போன்றவை ஏற்படும். இது பாலியல் ரீதியான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது .
இதன் காரணமாக அதிக தனிமையை விரும்புவீர்கள் மற்றவர்களோடு தொடர்புகொள்ள மாட்டார்கள்.
Related: பாலியல் பற்றி அறியபடாத உண்மைகள்