வணக்கம்! இன்றைய காலத்தில் மாணவர்கள் அனைவரும் சாம்பாதிக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது என்றே சொல்லலாம் . எப்படி இந்த இண்டர்நெட்டை பயன்படுத்தி படிக்கும்பொழுதே உங்களால் ஒரு நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
socila media’s
இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தி உங்களால் அதிகளவில் பணம் ஈட்ட முடியும் எடுத்துகாட்டாக நீங்கள் யூடியூபில் வீடியோ பதிவிடுதல் மூலம் உங்களுக்கு ஒரு வருமானம் வரும்.இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கத்தை தொடங்கி மற்ற நிறுவனங்கள் மற்றும் பக்கங்களோடு collaboration செய்வதன் மூலமாக கூட உங்களால் பணத்தை ஈட்ட முடியும். யூடுபில் மட்டுமல்ல மேஸ்புக்கில் நீங்கள் வீடியோ பதிவிட்டாலும் கூட உங்களுக்கு ஒரு வருமானம் வரும்.
blogging
உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவில் அதிக அறிவு உள்ளது அதை மற்றவர்களுக்கு பகிரவேண்டும் ஆனால் யூடுபில் வீடியோ பொடும் அளவிற்கு எனக்கு நேரமில்லை என்று நீங்கள் யோசித்தால் உங்களுக்கு இந்த பிளாக்கிங் பயனுள்ளதாக இருக்கும். இதில் உங்களுக்கு தெரிந்த கருத்துகளை ஒரு இணையதளாமாக உருவாக்கி அதில் பதிவிட வேண்டும் பின்னர் அந்த தளத்திற்கு வரும் வாடக்கையாளர்களுக்கு ஏற்ப உங்களுக்கு பணம் என்பது கிடைக்கப்பெறும்.
affiliate marketing
நீங்கள் இணைதளத்தில் காணும் பொருளை மற்றவருக்கு பரிந்துரை செய்வதன் மூலமாக கூட உங்களால் அதிக பணத்தை ஈட்டமுடியும்.எடுத்துகாட்டாக அமேசானில் நீங்கள் ஒரு மொபைலை உங்கள் நண்பருக்கு பரிந்துரை செய்கிறீர்கள் என்றால் அந்த மொபைலை உங்கள் நண்பர் வாங்கினால் உங்களுக்கு அமேசான் ஒரு தொகை வழங்கும் இது அந்தந்த பொருளின் விலைக்கேற்ப மாறுபடும்.இஇதன் மூலமாக கூட உங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.
online tutoring
இப்பொது நீங்கள் கல்லூரி மாணவராக இருப்பதால் இது உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு தெரிந்த மற்றும் நீங்கள் கற்றுகொண்ட செயலை மற்றவருக்கு கற்பிப்பதன் மூலமாக கூட உங்களால் அதிக வருமானத்தை பெற முடியும். உங்களுக்கு கோடிங்(தட்டச்சு நிரல்) வருகிறது என்றால் அதை udemy,skillshare போன்ற இணையதளங்களில் அதை ஒரு வீடியோ வகுப்பாக பதிவிட்டால் அதை யாரெல்லாம் வாங்குகிறார்களோ அப்போதெல்லாம் உங்களுக்கு வருமானம் வந்துகொண்ஏ இருக்கும்.
online books selling
மேலே குறிப்பிட்டதுபோல் உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் நல்ல திறன் இருந்தால் நீங்கள் அதனையே ஒரு புத்தகமாக எழுதி ஆன்லைனில் விற்கலாம் இதை யாரெல்லாம் வாங்குகிறார்களோ அப்போதெல்லாம் உங்களுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
freelancing
இதனை தொடங்குவதற்கு முன் உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் அதிக அறிவு மற்றும் பயிற்சி இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இதனை உங்களால் செய்ய முடியும் . எடுத்துகாட்டாக வீடியோ எடிடிங் இதனை நீங்கள் கற்றுகொண்டு fiverr,upwork போன்ற இணையதளங்களில் பதிவு செய்து வாடிக்கையாளர்களை பெற முடியும். இது ஆரம்பத்தில் சற்றை கடினம் எனலாம் ஒரு ம்றை நீங்கள் பெற்றுவிட்டால் அதன் பிறகு இதில் அதிக வருவாய் ஈட்டலாம்.
related:online money earning tips