வணக்கம்! நம் வாழ்வில் பல்வேறு மர்மங்களையும் ஆச்சரியங்களையும் கொண்ட ஒரு விசயம் என்னவென்றால் விண்வெளி எனலாம் அந்த விண்வெளியில் இருக்கூடிய ஒரு ஆச்சரியமான விசயம்தான் இந்த wormhole- இது எப்படி செயல்படுகிறது இதற்கும் black hole-ம் உள்ள வித்தியாசம் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.
what is wormhole
இதனை நமது மொழியில் அண்டவெளி புழுத்துளை என குறிப்பிடப்படுகிறது.இந்த வார்ம்ஹோல் என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அதிக நேரம் மற்றும் அதிகதூரத்தை கடக்காமல் மிக எளிய முறையில் பயணம் செய்யும் ஒரு முறைதான் இந்த வார்ம்ஹோல் என குறிப்பிடபடுகிறது. அதாவது இதனை பிரபஞ்சத்தின் ஒரு குறுக்குவழி என்றும் கூறலாம்.
அறிமுகம்
மற்ற கருந்துளை மற்றும் காலப்பயணம் போவே இந்த ஒரு விதியும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது. 1957-ஆம் ஆண்டு ஜான் வீலர் என்பவர்தான் இதற்கு wormhole-என்ற பெயரை சூட்டினார்.
1916-ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை வெளியிட்ட பிறகு கால்ட் சுவார்ஷீல்டு என்ற விஞ்ஞானி அந்த கோட்பாடை வைத்து கருந்துளை இருக்கிறது என உலகிற்கு நிரூபித்தார் அதன் பிறகு கருந்துளை ஒன்று இருந்தால் கண்டிப்பாக அதற்கு எதிர்பதமான வெள்ளைதுளை இருக்கும் என அறிஞர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். கருந்துளை என்பது தன்னை சுற்றயுள்ள பொருள்களை இழுத்துகொள்கிறதோ அதுபோல இந்த வெள்ளைதுளை கருந்துளையின்மூலம் ஈர்க்கபட்ட பொருள்களை உமுழ்து கொண்டே இருக்கும் இன்னும் எளிமையாக கூறவேண்டுமென்றால் கருந்துளை என்பது நுழைவாயிலாகவும் வெள்ளைதுளை வெளியேறும் பகுதியாக இருக்கும். இந்த வெள்ளைதுளை கொள்கைதான் பெருவெடிப்பின் மூலம் இந்த உலகம் உருவாகியிருக்கலாம் எனவும் ஒரு சான்றாக நம்பபடுகறது.
தொடர்புடையவை :கருந்துளை பற்றிய ஆச்சரியமான தகவல்கள்
1930-களில் இது பற்றிய ஆராய்ச்சியில் இந்த கருந்துளைக்கும் மற்றும் வெள்ளைதுளைக்கும் இடையில் இருக்கும் பகுதிதான் இந்த வார்ம்ஹோல் என குறிப்பிடுகின்றனர். இந்த வார்ம்கோல் மூலம் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியல் இருந்து மற்றொரு பகுதிக்கு மிக விரைவாக செல்லமுடியும் எனவும் இது ஒரு பாலம் போன்று செயல்படும் எனவும் நம்பபுகிறது. இதனை ஐன்ஸ்டீன் ரோஸன் பாலம் எனவும் குறிப்பிடுகிறார்கள்.
கண்டுபிடிப்பு
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை நமது பிரபஞ்சத்தில் ஒரு வெள்ளைதுளையை கூட நாம் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால்தான் இந்த வார்ம்ஹோல் ஆனது ஒரு கூற்றாகவே இன்றுவரை உள்ளது. இந்த வார்ம்கோல் ஒரு ஒழுங்கற்ற அமைப்பாக இருக்குமென்றும் அதன் நுழைவாயில் காணபட்டாலும் இறுதி வரை அது ஒழுங்கான அமைப்பாக இல்லாமல் பாதியிலேயே சிதலமடைந்துவிடும் என்றும் நம்பபடுகிறது. இதனால் இதன் அளவு என்பது மிகசிறியதாக இருக்குமென்றும் இதில் மனிதர்களால் பயனிக்கமுடியாது எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதனை பயன்படுத்தி நம்மால் விண்வெளிக்கு பயணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் நம்பபடுகிறது. எடுத்துகாட்டாக கூறவேண்டுமென்றால் இப்பொழுது இருக்கூடிய விண்கலன்களை பயன்படுத்தி செவ்வாய்க்கு சென்றால் 1 முதல் 2 ஆண்டுகள் ஆகும் ஆனால் இந்த வார்ம்ஹோலை பயன்படுத்தி உங்களால் வெறும் ஒரு நாளில் செல்ல முடியும் இதானல்தான் இதனை தேடும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
காலப்பயணம் சாத்தியமா
கூற்றுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த வார்ம்ஹோலில் காலப்பயணம் சாத்தியமாக்கபடும் எனலாம்.இந்த வார்ம்கோலில் ஈர்ப்புவிசையை அதிகபடுத்தி காலபயணம் செய்யமுடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்படி காலப்பயணம்செய்யும்பொழுது பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என்றும் நம்பபடுகிறது
எனவே எப்படியிருந்தாலும் இன்று கூற்றுகளாக இருக்கும் இவைகள் சில நாட்களில் கண்டுபிடிக்கபடலாம் எடுத்துகாட்டாக கருந்துளை இது முதலில் கூற்றாக இருந்து பிறகு இதனை ஆய்வ்வாளர்கள் கண்டறிந்தனர் எனவே இந்த பிரபஞ்சம் என்பது தன்னிடத்தில் இன்றளவும் ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் வைத்துகொண்டுதான் இருக்கிறது.