facts about water
வணக்கம்! நம்மில் பலபேரும் நினைக்கிறோம் தண்ணீரானது நமது பூமியில் தோன்றியது என்று ஆனால் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா நமது பூமிக்கு தண்ணீர் ஒரு மிகப்பெரிய பனி நிறைந்த பாறை பூமியின் மீது மோதியபோது வந்திருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது. இப்படி இந்த நீரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவலை இந்த பதிவில் காண்போம்.
தண்ணீரின் தேவை
பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தண்ணீரானது அடிப்படையான ஒன்றாகும். கடலுக்கு அடியில் வாழ்ந்தாலும் சரி, வறண்ட பாலைவனத்தில் வாழ்ந்தாலும் சரி இது எல்லா உயிரினங்களுக்கும் தேவையானது. நீராணது பூமியில் உயிர்கள் உயிர் வாழ்வதை சாத்தியமாக்குகிறது. இதன் காரணமாகதான் வானியற்பியல் வல்லுநர்கள் விண்வெளியில் தண்ணீரைத் தேடுவதே உயிரைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த ஆதாயம் என்று நினைக்கிறார்கள்.
எவ்வளவு நீர் உள்ளது
பூமியில் உள்ள 96.5 சதவீத நீர் நமது பெருங்கடல்களில் உள்ளது எனலாம், இது நமது கிரகத்தின் மேற்பரப்பில் 71 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது.
தூய்மையான நீர்
நமது பூமியில் இருக்கும் தண்ணீரில் வெறும் 3.5 சதவிகிதம் மட்டுமே மிகவும் தூய்மையான நீர் எனலாம். ஏரிகள், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் பூமியின் நன்னீர் இருப்பதை நீங்கள் காணலாம், ஆனால் நிலத்தடி நீர் மற்றும் பனிப்பாறைகளை மறந்துவிடாதீர்கள். பூமியின் 68 சதவீதத்திற்கும் அதிகமான நன்னீர் நிலத்தடிநீர் மற்றும் பனிப்பாறைகளில் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 சதவீதம் நிலத்தடி நீரில் உள்ளது.
உப்பு நீர்
சராசரி ஒரு கேலன் கடல் நீரில் , சுமார் 1 கப் உப்பு உள்ளது. ஆனால் இது ஒவ்வொரு கடலுக்கும் மாறுபடுகிறது. உதாரணமாக, அட்லாண்டிக் பெருங்கடல் ஆனது பசிபிக் பெருங்கடலை விட அதிக உப்புத்தன்மை கொண்டது. கடலில் உள்ள உப்புகளில் பெரும்பாலானவை நாம் உணவில் போடும் அதே வகையான உப்புதான்: சோடியம் குளோரைடு. உலகின் மிக உப்பு நிறைந்த நீர் அண்டார்டிகாவில் டான் ஜுவான் பாண்ட் என்ற சிறிய ஏரியில் காணப்படுகிறது
உடலின் தண்ணீர்
புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலில் 78 சதவீதம் தண்ணீர் உள்ளது. பெரியவர்கள் உடலில் 55-60 சதவீதம் தண்ணீர் இருக்கிறது . நம் உடல் செய்யும் எல்லாவற்றிலும் தண்ணீர் பங்கு வகிக்கிறது எனலாம். இது நமது அனைத்து செல்களுக்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு வரும் இரத்தத்தின் ஒரு பகுதியாகும். கழிவுகளை அகற்ற பயன்படுகிறது மற்றும் இது நமது உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது.
நீர் மூலக்கூறுகள்
நீங்கள் அருந்தும் ஒரு டம்ளரில் இருக்கும் நீரின் மூலக்கூறுகளின் அளவும் கடலில் இருக்கும் மூலக்கூறுகளின் அளவும் ஒரே மாதிரியாகதான் இருக்கும்.
சூடான நீர்
நீங்கள் நினைத்திருப்பீர்கள் சூடான நீரானது குளிர்ச்சயடை நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் என்று ஆனால் உண்மையில் சாதாரண தண்ணீரை விட சூடான நீர்தான் மிகவும் விரைவாக உறைந்த நிலைக்கு சென்றுவிடும்.
துபாயின் நீர் மறுசுழற்சி
இந்த உலகில் துபாயில் கடல்நீரை மறுசுழற்சி செய்து குடிநீராக மாற்றும் திட்டம் உள்ளது. ஏனெனில் துபாயில் நதிகளே கிடையாது. அதுமட்டுமல்ல இந்த உலகில் வாழக்கூடிய 85% மக்கள் வற் மற்றும் பாலைவன பகுதிகளில்தான் வசிக்கிறார்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தண்ணீரின் செலவு
இந்த உலகில் துணி மற்றும் ஜவுளிகளை உருவாக்குதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 36,000 லிட்டர் தண்ணீரானது பயன்படுத்தபடுகிறது. இது ஒரு நகரத்தில் ஒரு நாளைக்கு செலவிடும் நீரின் அளவுக்கு சமம்.
விண்வெளியில் தண்ணீர்
நமது பூமியில் மட்டும்தான் நீர் உள்ளது என்று நீங்கள் நினைத்தால் அது உண்மையல்ல. நம் பூமியைதாண்டி நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திலும் நீரானது பனிகட்டியாக உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாமல் விண்வெளியில் தண்ணீரனாது விண்வெளியில் மிதப்பதாகவும் கூறப்படுகிறது
source:nasa