what causes belly fat
வணக்கம்! பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை ஆண்களுக்கு இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தன்னுடைய இளம்பருவத்தில் சும்மா கெத்தாக சிக்ஸ் பேக்ஸ் வைத்து கொண்டிருந்த இளைஞர்கள் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே சூடான எண்ணெயில் சுட்டெடுத்த பூரி போல ஆகி விடுகிறார்கள் இவர்களில் உள் மாற்றத்திற்கு என்ன காரணம் தொப்பை வர காரணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.
தொப்பைக்காண காரணம்
அனைத்து மக்களுக்கும் தொப்பையானது அதிகப்படியான கொழுப்பு அல்லது எடை அதிகரிப்பின் விளைவாக ஏற்படுவதில்லை. எடை அதிகரிப்பு முக்கிய காரணமாக கூறப்படுவது கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகள் மற்றும் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மொன்களின் வளர்ச்சியாககூட இருக்கலாம்.
தொப்பைகள் ஏற்பட நம் வாழ்வில் பின்பற்றக்கூடிய தவறான உணவு, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் மக்களின் தொப்பையை அதிகரிக்கின்றன. ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், செயல்பாட்டை அதிகரிப்பது மற்றும் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வது உங்களுக்கு உதவலாம்.
உணவுப்பழக்கம்
கேக் மற்றும் மிட்டாய் போன்ற சர்க்கரை உணவுகள் மற்றும் சோடா , பழச்சாறு போன்ற பானங்கள் கூட எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். இவை ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது இதனால் உங்களின் செயல்பாட்டு திறனையும் குறைக்கிறது.
குடிப்பழக்கம்
அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது கல்லீரல் நோய் தொப்பை போடுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மது அருந்துதல் மற்றும் உடல் பருமன் பற்றிய 2015 அறிக்கையின்படி, அதிகப்படியாக மது அருந்துவது ஆண்களின் வயிற்றைச் சுற்றி எடை அதிகரிப்பதை அதாவது தொப்பை போடுவதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
தொடர்புடையவை: முடி ஏன் கொட்டுகிறது hair fall explained in tamil
உடற்பயிற்சியின்மை
பெரும்பாலும் நம்மில் பலருக்கு இந்த பழக்கம் இல்லை என்றே சொல்லலாம் அதுதான் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி எனலாம் ஒரு நபர் கலோரிகளை எரிப்பதை விட அதிக கலோரிகளை உட்கொண்டால், உங்களின் எடை அதிகரிக்கும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்களின் வயிற்றின் அடிப்பகுதியில் இருக்கும் கொழுப்பு அதிகரிக்க தொடங்கும் இதான்லதான் தொப்பை திடீரென பெரிதாகிவிடுகிறது.
தொப்பை வருவது ஆபத்தா
உங்களின் உடல்எடை அதிகரிக்கும்போது உங்களுக்கு நோய்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.முக்கியமாக இருதயம் சம்மந்தபட்ட நோய்கள், இரத்த அழுத்தம், கேன்சர் மற்றும் ஆஸ்துமா போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும்.
நன்றி