யார் இந்த தாலிபான்கள்
கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் முழுவதும் தன்னுடைய கைப்பிடியில் வைத்திருந்த ஒரு தீவிராத அமைப்புதான் இந்த தாலிபான்கள். இவர்கள் யார் இவர்களின் பின்னணி என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
தாலிபான்களின் கதை
இந்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் 1996-ஆம் ஆண்டிலிருந்து 2001 வரை தன்னுடைய கைப்படியில் வைத்திருந்தது. இந்த தாலிபான்கள் எனப்படுபவர் சுணி இஸ்லாமிய பிரிவை சேர்ந்த தேசியவாத அமைப்பாகும் இவர்கள் . இவர்கள் உலக நாடுகளால் தீவிரவாத அமைப்பாக கருதப்படுகிறார்கள்,இந்த தீவிரவாத அமைப்பின் தலைவின் முகமது மோவார் என்பவன்.
பின்வாங்கிய அமெரிக்கா
கிட்டதட்ட 20-ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை பாதுகாப்பாக தன்னுடைய கைப்பிடியில் வைத்திருந்த அமெரிக்கா தற்போது திடிரென பின்வாங்கியுள்ளது இதற்கு காரணமாக கூறப்படுவது அதிகபடியான செலவுகள் போருக்காக செலவிடப்படுவதால் அமெரிக்க படைகளை திரும்ப பெறுகிறோம் என அமெரிக்கா அறிவித்தது. அறிவித்த சில நாட்களிலேயே இந்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினர். இந்த நிலையில் ஆப்கன் அதிபர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை அங்குள்ள மக்கள் தற்போது முகவும் அச்சத்தில் உள்ளார்கள்.
தாலிபான்களின் விதிகள்
இந்த தாலிபான்கள் முதன் முதலில் ஊழலுக்கு எதிராக உருவாக்கபட்ட ஒரு அமைப்பு என குறிப்பிடப்படுகிறது, பிறகு இவர்கள் காலப்போக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட ஆரம்பித்தனர் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெண்கள் சாலையில் தனியாக செல்லக்கூடாது, துணிகளால் முகத்தை மூடியபடியே இருக்க வேண்டும். சாலைகளில் செல்லும் போது உடன் ஒரு ஆண் இருக்கவேண்டும், நடக்கும் பொழுது சத்தம் வராத அளவிற்கு நடக்க வேண்டும்,பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது அவருகளுக்கான கருத்து சுதந்திரம் கிடையாது என பெண்களுக்கு சுதந்திரமே இல்லாத ஒரு விதிகளை கொண்டிருந்தனர் இந்த தாலிபான்கள்.இப்படிபட்ட தாலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர் இது உலக அரங்கில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது அதுமட்டும்ல்லாமல் அங்குள்ள மக்களின் நிலை என்பது தற்போது கேள்விகுறியாக மாறியுள்ளது.