நாம் அனைவருக்கும் பிரம்மாண்டம் அதிசயம் மர்மம் போன்ற வார்த்தைகளை கேட்டால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது எகிப்தில் இருக்கும் பிரமீடுகளும் அதிலிருக்கும் மம்மிகளும் எனலாம் . அப்படி சமீபத்தில் எகிப்தில் கண்டுபிடிக்கபட்ட ஒரு மம்மினாது 3500-ஆண்டுகள் பழமையானது இதன் சவப்பெட்டியை திறக்காமலையே அதனுள் இருக்கும் மம்மமியை ஆய்வுசெய்துள்ளனர். இதை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
ம்மமிகள்-3500 year old mummy
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட ஃபாரோ மன்னர்களை இறந்தபிறகு பதப்படுத்தி வைப்பதற்காக இந்த பிரமீடுகள் உருவாக்கபட்டன என நமெம்படுகிறது.
இப்படி இறந்த மன்னர்களின் உடல் பாகங்களை தனிதனியாக பிரித்தும் அவர்களின் உடல்மீது பல்வேறு திரவியங்கள் தடவபட்டும் அவர்களின் உடல்கள் முழுவதும் துணியால் சுற்றபட்டும் ஒரு மரப்பெட்டியில் மூடி வைக்கபட்டிருக்கும் . இப்படி செய்யும் முறையைதான் mummyfication என குறிப்பிடுகிறார்கள் .
இதில் குறிப்பிடதகுந்த விசயம் என்னவென்றால் இறந்தவர்களின் உடல்கள் அழுகிபோகாமல் இருக்க embalming என்ற முறையை 1000 வருடங்களுக்கு முன்பே எகிப்தியர்கள் பயன்படுத்தினார்கள் சற்றே நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய விசயமாகதான் உள்ளது.
மம்மிகள் பற்றிய ஆராய்ச்சி
இப்படி அறிவியலில் சிறந்த விளங்கிய பண்டையகால எகிப்தியர்களை நாம் அறிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்த பதப்படுத்தபட்ட மம்மிகள்தான்.இதனை நாம் தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து ஆய்வுகளை மேற்கொள்கிறோம் இப்படி பல ஆயாரம் வருடங்களுக்கு முன் இருக்கும் இந்த மம்மிகளை ஆராய்ச்சி செய்யும்பொழுது அதன் பெட்டிகளை பிரிக்கும்பொழுது அவை சிதலமடைகின்றன அதானல் ஆராய்ச்சிகள் செய்ய கடினமாகிறது.
நவீன தொழில்நுட்பம்
இப்படி பல்வேறு மம்மிகள் பூமியில் இருந்து எடுக்பட்டாலும் அவை இன்றளவும் திறக்கபடாமல் உள்ளது. ஏனெனில் அவை சிதலமடையக்கூடாது என்ற காரணத்திற்காக . இப்படி 1881-ஆம் ஆண்டு கண்டெடுக்கபட்ட Amenhotep என்னும் மன்னரின் உடல் பகுதியை தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து சாதனைபடைத்துள்ளனர்.
இப்படி எடுக்பட்ட மம்மியை 3d முறையில் scan செய்யபட்டு உள்ளே இருக்கும் மன்னரின் உடல் பற்றிய தகவல்கள் பெட்டியை திறக்காமலையே ஆய்வு செய்துள்ளனர்.பெட்டிக்கும் இருக்கும் மன்னரின் வயது 35 இருக்கலாம் என ஆய்வாளர்களால் கணிக்கபடுகிறது. அப்படி ம்மமி சுற்றபட்ட துணிக்குள் தங்கத்தால் ஆன கச்சை ஒன்றும் இருந்துள்ளது. இது 3d முறையில் scan செய்யப்பட்டதால் அவரின் முகமும் Artificial intelligence மூலம் உருவாக்கபட்டது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மன்னரின் இறப்பு எதனால் ஏற்பட்டிருக்கும் என தெளிவான ஆதாரங்கள் தற்போதுவரை கண்டறியப்படவில்லை. இந்த மன்னர் 1504 முதல் 1525 25 ஆண்டுகள் எகிப்தை ஆட்சி செய்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்த மன்னர் தனது சிறுவயதிலேயே மன்னராகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறிகிறார்கள். அதாவது இந்த மன்னர் தன்னுடைய 14-வயதிலேயே ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளார் என நம்பபடுகிறது.
இன்னும் தொழில்நுட்பம் வளர வளர இதை பற்றிய தெளிவான தகவல்களும் அவிழ்க்கபடாத முடிச்சுகளும் நமக்கு தெரியவரும்