block chain

பிளாக் செயின் தொழில்நுட்பம் என்றால் என்ன? what is blockchain technology in tamil

blockchain

ஒரு பத்து வருடத்திற்கு முன்பு இண்டர்நெட்டில் உங்களால் பணப்பரிவர்த்தனை செய்யமுடியும் என்று யாராவது உங்களிடம் கூறினால் அதனை நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள். ஆனால் அந்த விசயம் தற்போது சாத்தியப்பட்டுள்ளது அதுபோலவே எதிர்காலத்தில் வங்கிகளே இல்லாமல் உங்களால் பணத்தை அனுப்பவும் உருவாக்கவும் முடியும் என்று கூறினால் உங்களால் நம்பமுடியுமா அதுதான் இந்த பிளாக் செயின் தொழில்நுட்பம் (blockchain technolgy) ஆகும் இது எப்படி இயங்குகிறது இதுதான் இணையத்தின் எதிர்காலமா என்பதை இந்த பதிவில் காணலாம்.

what is blockchain

blockchain

இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் என்று கூறியவுடன் பெரும்பாலானவர்கள் crypto currency-க்கு மட்டும்தான் பயன்படும் என நம்புகிறார்கள் ஆனால் இது அப்படியல்ல இந்த தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பயன்படுத்தபடுகிறது பயன்படவும்போகிறது என்பதிலும் சந்தேகமில்லை.

இந்த block chain தொழில்நுட்பம் என்பது 2008-ஆம் ஆண்டு சத்தோஷி நாக்கமோடோ(satoshi nakamoto) என்ற முகம் தெரியாத நபரால் அறிமுகபடுத்தபட்டது. இந்த தொழில்நுட்பமானது நம்முடைய தகவல்களை மிக பாதுகப்பாக அனுப்ப பயன்படுகிறது எனலாம். அதாவது நம்முடைய தகவல்கள் ஒரு பிளாக்குகள் ஆக் உருவாக்கபடும் ஒரு சங்கிலித்தொடர்போல ஒன்றுடன் ஒன்றுடன் இணைக்கபட்டிருக்கும் .இந்த block chain-ஐ உருவாக்க cryptography மற்றும் hashing போன்ற ஒரு சில முக்கியமான கோட்பாடுகளும் பின்பற்றுகின்றன அவற்றை பற்றியும் ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்,

blockchain introduction

இந்த Blockchain உருவாக்கபட முக்கிய காரணம் தகவல் பாதுகாப்பு என்பதுதான். ஆம் தற்போதைய இண்டர்நெட் காலத்தில் ஒருவருடைய data என்பது பாதுகாக்கபடுகிறதா என்பது ஒரு கேள்விக்குறியே. இப்படி டேட்டாக்கள் மற்றும் crypto currency-களை பாதுகாப்பாக அனுப்பவும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக அனுப்ப உருவாக்கபட்டதுதான் இந்த block chain தொழில்நுட்பம்.

crypto currency block chain செயல்படும் விதம்

block chain technology
source:pixabay

இப்போது நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்ப நினைக்கிறீர்கள் என்றால் முதலில் உங்கள் இருவருக்கும் ஒரு வங்குயில் கணக்கு இருக்க வேண்டும் அதில் பணம் இருக்க வேண்டும். நீங்கள் பணம் செலுத்தும்போது உங்கள் வங்கி ஒரு இடைத்தரகராக இருந்து உங்கள் இருவருக்கும் பணத்தை பெறவும் அனுப்பவும் உதவுகிறது.

இந்த சூழலில் உங்களின் தரவுகள் ஒரே இடத்தில் சேமிக்கபட்டிருக்கும் இதனால் நம்முடைய தகவல்களை hacker-களா் எளிதாக திருட முடியும். அதுமட்டுமல்லாமல் நம்முடைய தகவல்களை நமக்கு தெரியாத யாரோ ஒருவர்தான் பராமரிக்கிறார் அவர் நினைத்தால் நம்முடைய தரவுகளை அழிக்கவோ மாற்றவோ முடியும். இப்படி இருப்பதால் இதில் ஆபத்து என்பது சற்று அதிகம் என்றே கூறலாம். இதனை தடுப்பதற்காக உருவாக்கபட்டதுதான் இந்த பிளாக் செயின் தொழில் நுட்பம்.

crypto currency-கள் என்பது ஒருவரிடம் மட்டும் இல்லாமல் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் யார்வேண்டுமானாலும் உருவாக்கலாம். இவை அனைத்தும் ஒரு தகவல் வளையத்தில் நடக்கும்(network) இதைதான் distributed ledger என கூறுகிறார்கள். இந்த network ஆனது p2p(peer to peer) என அழைக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு கணினியும் ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கும். இப்படி நீங்கள் அனுப்பகூடிய தகவல் ஒரு block-மாற்றப்படும். இந்த block-ல் உங்களுடைய address மற்றும் நீங்கள் அனுப்பக்கூடிய பெறுநரின் address இருக்கும்.

hashing

blockchain technology

இதனை hashing என்று சொல்லப்படும் encryption அதாவாது நீங்கள் hi என்று அனுப்பினால் அது cqdwa என வேறுவிதமாக யாருக்கும் புரியாதபடி மாற்றப்பட்இருக்கும். இப்படி இவை மாற்றபடுவதால்தான் மிகவும் பாதுகாப்பாக கருதப்படுகிறது.

இப்படி நாம் அனுப்பும் தகவலை வேறொரு அடையாளமாக மாற்றுவதுதான் hashing என்று சொல்லப்படுகிறது. இப்படி hashing ஆக மாற்றபட்ட தகவல்தான் block-குகள் என அழைக்கபடுகின்றன.இந்த block-குகளை யாராலும் மாற்றவோ அழிக்கவோ முடியாது.

nonce

block chain technology

இப்படி உருவாக்கூடிய block-க்குள் நிறைய இருக்கும் இதனை ஒவ்வொன்றையும் அடையாளபடுத்த nonce (number only used once) இவை அந்த hashing முறையை பயன்படுத்திதான் உருவாக்கபடுகின்றன. இப்படிதான் தகவல்கள் block-குகளாக மாற்றபட்டு அனுப்படுகின்றன.

இப்படி ஒவ்வொருவரும் அனுப்பக்கூடிய தகவல்கள் ஒரு block-குகள் ஆக உருவாக்கபட்டு ஒன்றன்பின் ஒன்றாக ஒரு சங்கிலிபோல உருவாகும். இப்படி ஒன்றோடு ஒன்று இணைப்பில் உள்ள block-களில் முதலாவது பிளாக் அனுப்பிய data- வை track செய்ய அடுத்த பிளாக்கில் அதனுடைய address பதிக்கபட்டரிக்கும் இதுபோல் அது அடுத்த பிளாக்கிற்கு செல்லும்போது அதன் தற்போதைய address அடுத்ததாக உள்ள block-ற்கு செல்லும். இப்படி ஒவ்வொரு block address-ம் அடுத்த block-உன் இணைப்பில் இருக்கும் . இப்படி இவை ஒன்றோடு ஒன்று தொடரபில் இருப்பதால் அதனை hack செய்வது என்பது கடினம் . அப்படியே hack-செய்தாலும் அந்த network இணைந்திருக்கும் அனைவருக்கும் இது தெரிந்துவிடும் இதன் மூலம் எங்கு hack செய்யட்படிருக்கிறது என்பதை நம்மால் கண்டறிய முடியும்.

proof of work

இந்த பிளாக்குள் உருவாக்க பயன்படும் ஒரு முறைதான் இந்த proof of work என்பதாகும் . இதில் இருப்பவர்கள்தான் miners என குறிப்பிடுகிறார்கள். நாம் ஏற்கனவே கூறியதுபோல் ஒவ்வொரு block-ற்கும் ஒரு hash உருவாக்கபட்டிருக்கும் அதனை கண்டுபிடிக்க இந்த miners மிகவும் கடினமான புதிர்களை சரிசெய்யவேண்டும் . இதனை சரிசெய்ய mega computers மற்றும் super computers தேவைப்படும் இப்பட்டி இதனை அவர்கள் கண்டுபிடித்தால் அவர்களுக்கு பிட்காயின் அல்லது crypto currency வழங்கப்படும்.

எளிமையான விளக்கம்

இந்த block chain-ஐ எளிமையாக கூறவேண்டுமென்றால் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை நீங்கள் ஒரே இடத்தில் வைத்துள்ளீர்கள் அப்படி இருக்கும்போது அதனை திருடுவது என்பது மிக எளிதாப மாறிவிடும். அதற்கு பதிலாக அதனை நூறு பேரிடம் சரியாக பிரித்து கொடுத்துவிட்டீர்கள் என்றால் எந்த இடத்தில் யாரிடம் உள்ள பணம் திருடபட்டது என்பதை உங்களால் எளிதாக கண்டறிய முடியும்.

blockchain-பயன்பாடுகள்

இந்த block chain தொழில்நுட்பம் பல்வேறுதுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்

  • voting system இதன் மூலம் கல்ல ஓட்டுக்களை தடுக்க முடியும்.
  • land registration
  • insurance
  • medical
  • banking system இது தவிர இன்னும் பல இடங்களில் இது பயன்பட உள்ளது.

blockchain types

  • public
  • private
  • hybrid

public blockchain

இந்த public block chain -என்பது அனைவருக்கும் பொதுவாக செயல்படக்கூடியது இங்கு அனைவருக்கும் சம்பங்கு வழங்கப்படும்.

private blockchain

இதில் ஒரு குறிப்பிட்ட அரசோ அல்லது ஒரு நிறுவனமோ மற்றவர்களின் தரவுகளை நிர்ணயிக்க கண்காணிக்க முடியும்.

watch on youtube

Related: what is crypto currency