pigheart transplant
வணக்கம்! மருத்துவதுறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல் என்றும் கூறும் அளவிற்கு அமெரிக்க மருத்துவர்கள் நேற்று ஒரு சாதனையை படைத்துள்ளனர். அது என்ன சாதனை அவர்கள் இதனை செய்ய எந்த முறைகளை கையாண்டனர் என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
பன்றியின் இதயம்
அப்படி என்ன சாதனையை அமெரிக்க மருத்துவர்கள் நிகழ்த்தினார்கள் என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் . இதுவரை இதய அறுவை மாற்று சிகிச்சை என்பது மனித இதயம் மற்றும் நவீன கருவிகளை கொண்டே செய்யபட்டன ஆனால் தற்போது மனித இதயத்திற்கு பதிலாக மரபணு மாற்றம் செய்யபட்ட ஒரு பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளர்.
அமெரிக்காவின் பல்டிமோர் பகுதியில் இருக்கும் மேரி லேண்ட் மெடிக்கல் சென்டர்(mary land medical centre) பல்கலைகழகத்தில் இருக்கும் மருத்துவர்கள்தான் இந்த சாதனைய நிகழ்த்தியுள்ளனர்.
யார் அந்த நபர்
அமெரிக்காவில் வசிக்கும் 57-வயதான டேவிட் பென்னட் என்பவர் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மேரி லேண்ட் மருத்துவ பல்கலைகழகத்தில் சேர்க்கபட்டார் . கடந்த ஒரு வார காலமாக படுத்த படுக்கையாக இருந்த டேவிட் பென்னட்டிற்கு நேற்று 7 மணி நேரத்திற்கு மேலாக இதய அறுவை மாற்று சிகிச்சை செய்யபட்டது இதில் குறிப்பிடதகுந்த விசயம் என்னவென்றால் அவருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு பன்றியின் இதயம் பொருத்தபட்டது. அறுவை மாற்று சிகிச்சை நடந்து முடிந்து 3 நாட்கள் ஆன பிறகு பென்னட் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இது மருத்துவதுறையில் மிகபெரிய சாதனையாக பார்க்கபடுகிறது.
தொடர்புடையவை:சீனாவின் செயற்கைசூரியன் உண்மையா
எதற்காக பன்றியின் இதயம்
உறுப்பு பற்றாக்குஉறையை தீர்க்க இந்த மாதிரியான அறுவை சிகிச்சை என்பது மிக பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த விலங்கு உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை முறையை xenotransplanation என்று அழைக்கின்றனர். நம் இதய வால்வுகள் போன்றே பன்றியின் இதய வால்வுகள் காணப்படுவதால் இதற்கு பன்றியின் இதயம் பொருத்தமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
57-வயதான பென்னட்டிற்கு உயிர்பிழைப்பதற்கான கடைசி வாய்ப்பாக இந்த ஒரு சிகிச்சை பார்க்கபட்டது இந்த ஒரு இதயம் தற்போது ஆரோக்கியத்துடன் வைத்திருந்தாலும் . மரபணு மாற்றம் செய்யபட்ட இந்த இதயத்துடன் இவர் எவ்வளவு நாள் ஆராக்கியமாக இருப்பார் என்பது ஒரு கேள்விக்குறியே.
இதுபோன்ற அறுவைசிகிச்சைகள் எதிர்காலங்களில் நிறைய நடத்தபடுமா இதைபற்றிய உங்களின் கருத்துகள் என்ன என்பதை பதிவிடுங்கள்.
referral resources:BBC