சூரியன் பற்றிய வியப்பான தகவல்கள் 10 facts about sun in tamil

                       FACTS ABOUT SUN

facts about sun
sorce:pixabay

வணக்கம்! இன்றைய பதிவில் இந்த உலகிற்கே ஒளி மூலமாக விளங்கும்  சூரியனை பற்றிய சில வியப்பான தகவல்களை(facts about sun) காண்போம்.

சூரியன் என்றால் என்ன?-what is sun?

இந்த சூரியன் என்பது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் ஆன ஒரு கோள வடிவ உருண்டை எனலாம், நமது சூரியன்தான் நம் பூமிக்கும் மற்ற கோள்களுக்கும் நட்சத்திரம் ஆகும். அதாவது நட்சத்திரம் என்பது அதிபடியான நிறையையும் அதனுள் அணுக்கரு இணைவு மற்றும் அணுக்கரு பிளவு நடக்க வேண்டும். இந்த அனைத்து தகுதிகளும் சூரியனுக்கு இருப்பதால் சூரியனை நாம் நட்சத்திரம் என்கிறோம். நம் சூரியனை போன்றே இந்த பிரபஞ்சத்தில் நிறைய நட்சத்திரங்கள் உள்ளன.

சூரியனின் அளவு

இந்த சூரியன் எந்த அளவுக்கு பெரியதென்றால் கிட்டதட்ட நம் பூமியை போன்று 1,30,000 பூமிகளை சூரியனுக்குள் வைக்கலாம் அந்த அளவுக்கு பெரியது.

பூமியை விழுங்கும் சூரியன்

sun

ஆய்வாளர்களின் கூற்றுப்படி 130 மில்லியன் வருடங்களுக்கு பிறகு சூரியன் ஆனது நமது பூமியை விழுங்கும் என கூறுகிறார்கள். ஏனென்றால் அதிலுள்ள ஹைட்ரஜன்  அணுக்கள் எரிவதால் சூரியன் விரிவடைய தொடங்கும். இதன் காரணமாக புதன், வெள்ளி மற்றும் நம் பூமியை சூரியன் விழுங்கும்.

சூரியன் தன்னைதானே சுற்றும்

solar syatem

இந்த சூரியன் ஆனது மேற்கிலிருந்து கிழக்காக சுழன்று வருகிறது. இது பால்வெளிமண்டலத்தை சுற்றி முடிக்க 225-300 மில்லியன் ஆண்டுகள் வரை ஆகலாம்

சூரியனின் வெப்பநிலை

sun teprature

நமது சூரியனை ஒரு மஞ்சள் நிற நட்சத்திரம் எனலாம்  இதன் வெப்பநிலையானது கிட்டதட்ட 5000 டிகிரி செல்சியஸ் முதல் 5700 டிகிரி செல்சிஸ் வரை இருக்கும்.

சூரியனின் வயது 

 
facts about sun

சூரியனின் வயது தற்போது 5 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது ஒரு நட்சத்திரத்தின் நடுநிலைக்காலம் எனலாம் இன்னும் சில மில்லின் ஆண்டுகள் கழித்து சூரியன் ஆனது தன்னுடைய இறுதி காலத்தை அடையும் ஏனென்றால் அப்போது ஹைட்ரஜன் எரியதொடங்கும். 

சூரியனின் நிறம்

sun color

நாம் சூரியனின் நிறம் ஆரஞ்சு என நினைத்திருப்போம் ஆனால் அது உண்மையில்லை. ஏனென்றால் சூரிய கதிரானது நம் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள துகளால் சிதறடிக்கப்படுவதால் நம் கண்களுக்கு மஞ்சள் ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிறத்தில் காணப்டுகிறது. உண்மையில் சூரியனின் உண்மையான நிறம் வெளிர்மஞ்சள்ஆகும்.

சூரியன் வெடித்தால் என்ன ஆகும்

சூரியன் வெடித்தால் என்ன ஆகும் என யோசித்திருக்கீர்களா சூரியன் வெடித்தால் கூட நமக்கு 8-நிமிடங்களுக்கு பிறகே அந்த ஒரு வெடிப்பை நம்மால் பார்க்க முடியும் ஏனெனில் சூரியனிலிருந்து நம் பூமிக்கு ஒளியானது பயணிக்கூடிய நேரம் 8-நிமிடங்கள் ஆகும்.

சூரியன் பயணிக்கும் தூரம்

சூரியன் ஆனது ஒரு நொடிக்கு கிட்டதட்ட  200 கிலோ மீட்ர் தூரத்தை வின்வெளியில் கடந்து வருகிறது .

சூரியப்புயல்

இந்த சூரியபுயல் என்பது சூரியனில் ஏற்படக்கூடிய ஒரு மாற்றம் என கூறலாம், அதாவது ஒவ்வொரு 11 வருடத்திற்கும் சூரியன் ஆனது தன்னுடைய காந்த துருவங்களை மாற்றும் அதாவது வட துருவம் தென் துருவமாகவும் தென் துருவம் வட துருவமாகவும் மாறும் . இப்படி சூரியனில் அந்த புயலால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.