டெல்லியில் நடந்த 11 நபர் கொண்ட ஒரு குடும்பம் அனைவரும் ஒரே மாதிரியாக தூக்கில் தொங்கியபடி மர்மமாக இறந்துள்ளனர் . இந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்படி ஒரே மாதிரியாக இறக்க முடியும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த மர்மமான சம்பவத்தை பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம்.
இந்த சம்பவம் டெல்லியில் புகாரி என்ற ஊரில் 2018 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்தது. இந்த சம்பவம் காலை 7 மணி அளவில் அந்த குடும்ப உறுப்பினர்களின் நண்பர் ஒருவர் , இந்த கும்பம் வைத்திருந்த கடைக்கு பால் வாங்க வந்துள்ளார் ஆனால் கடை திறக்காததால் அந்த குடும்பத்திற்கு போன் செய்துள்ளார் போன் அடித்தும் யாரும் எடுக்கவி்ல்லை இதனால் வீட்டிற்கு சென்று பார்க்கையில் கதவு திறந்த நிலையில் அனைவரும் தூக்கு போட்டிருக்கும் நிலையில் அவர் பார்க்கிறார் பார்த்த அந்த நபர் மிகவும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து சத்தமிட்டபடியே ஒடுகிறார்.
குடிம்ப உறுப்பினர்களின் இறப்பானது வித்தியாசமாக உள்ளது அனைவரும் ஒரே மாதிரியாக கை கட்டபட்ட நிலமையில் வாய் பொத்தப்பட்ட நிலமையில் புதுதாக வாங்கப்பட்ட துப்பட்டாவில் புதிதாக வாங்கப்பட்ட ஸ்டூலில் தூக்கு போட்டுள்ளனர். இது எப்படி அனைவரும் ஒரே மாதிரியாக அனைவரும் இறக்க முடியும் என்று பலருக்கும் புதிராக இருந்துள்ளது. இது கொலையாக இருக்கலாம் என நீங்கள் எண்ணலாம் ஆனால் இது ஒரு தற்கொலை என்று காவல் துறையால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பத்தில் இறந்தவர்களில் பாதி பேர் படித்தவர்கள் ஆவர் இதில் 20 ,25,19 என சிறுவயதினர் முதல் வயதானவர் வரை இறந்துள்ளனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது பலரால் நம்பமுடியாதுதான் ஆனால் இவர்கள் தாங்கள் இறப்பதற்கு தேவையான ஸ்டூல் மற்ற்ம் துப்பட்டாவை தாங்களே வாங்கி வந்துள்ளனர். இவர்கள் இந்த பொருட்களை வாங்கிவந்த பதிவு கேமராவிலும் பாதிவாகி உள்ளது. இவர்கள் தாங்களே இவர்கள் இறப்பிற்கு காரணமாகினர்.
இவர்கள் வீட்டில் 7 டைரி கிடத்துள்ளது. இந்த டைரியில் இவர்களின் குடும்பத்தில் நடந்த அனைத்தையும் எழுதி வைத்துள்ளனர். இந்த குடும்பத் தலைவராக பாட்டியின் 3வது மகன் லலீத் இருந்துள்ளார் . இவரின் மனைவி டீனா ஆவார். இந்த லலீத் தன்னிடம் இறந்துபோன தன் அப்பா பேசுவதாக கூறியிள்ளார். அவர் தந்தை தன்னிடம் பேசி எதை எதை செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று கூறுவார் என கூற . அதை அனைத்தையும் டைரியில் எழுதி வைத்தனர். அந்த குடும்பத்தின் தாத்தா தன்னிடம் பேசுவதை தன்னிடம் குடும்பத்தில் சொல்லி அனைத்தையும் செய்ய வைக்கிறார். அந்த தாத்தா கூறியுள்ள அனைத்தும் நடந்ததாகவும் எழுதி வைத்துள்ளனர். லலீத் க்கு அந்த தாத்தா பேசுவதை கேட்டு அவர்களின் குடும்பத்துக்கு பல நன்மை கிடைத்ததாம்.
அந்த தாத்தா இவ்வாறு ஒரு சடங்கும் செய்ய சொல்லி உள்ளார் இந்த சடங்கு எதற்கு என்றால் அவர் இந்த உலகிற்கு தான் வரபோவதாகவும் அதற்கு நீங்கள் 7 நாள் கொண்ட ஒரு சடங்கு செய்ய வேண்டும் என்று கூறுகிறிருக்கிறார் அந்த 7 நாள் கொண்ட சடங்கில் கடைசி நாள் சடங்கு தான் ஆலமரச்சடங்கு இந்த சடங்கை இரவு 1 மணி அளவில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் தாத்தா இந்த உலகிற்கு வரப்போவதாக நினைத்து செய்திருக்கிறார். அந்த ஆலமர சடங்கு என்னவென்றால் 1மணி அளவில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆலமர விழுது போல அனைவரும் தூக்கில் தொங்க வேண்டும் என்று தாத்தா கூறியதை போல அனைவரும் தூக்கில் தொங்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் வீட்டை ஆய்வு செய்யும் போது அவர்கள் சாமி அறையில் சடங்கு செய்த ஆதாரமும் கிடைத்துள்ளது. அதுபோல் அவர்கள் போஸ்மாட்ட ரிப்போட்டில் இது கொலை அல்ல தற்கொலை என நிரூபிக்கப்பட்டது.
அந்த டைரியில் கைகள் இறுக்கமாக கட்டப்பட்டிருக்கும் என்றும் வாய்கள் டேப்பால் பொத்தப்பட்டிக்க வேண்டும் என்றும் கண்கள் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது அதுபோலவே அவர்களின் கைகள் கண்கள் கட்டப்பட்டும் வாய் மூடப்பட்டும் உள்ளது. 11 பேரில் 9 பேர் கைகள் இறுக்கமாகவும் 2 பேர் கை கயிறு லேசாகவும் கட்டப்ட்டிரிந்தது. அந்த 2 பேர் லலீத் மற்றும் அவர் மனைவி டீனா ஆவார். இவர்கள் தான் மற்ற 9 பேருக்கும் கை கால் வாய் கட்டிவிட்டு பின் ஒருவொருக்கொருவர் கட்டி கொண்டு இறந்திருக்கலாம் அதுபோல் போஸ்மாட்ட ரிப்போட்டில் கடைசியாக இறந்தவர் லலீத் என்று கூறியுள்ளது . இதிலிருந்து இவர்களின் இறப்பிற்கு இவர்களே காரணமாயினர் என்று தெளிவாகிறது.
அதேபோல் போஸ்மாட்ட ரிப்போட்டில் இவர்கள் டைரியில் கூறியதுபோல தான் இறந்துள்ளர் என்றும் கூறுகிறது.
லலீத்க்கு எவ்வாறு தாத்தா தன்னிடம் பேசுவதுபோல் தோன்றியிருக்கிறது. இது உண்மையா என்றால் அது அவருக்கு தோன்றும் கற்பனையாக கூட இருக்கலாம். ஏனென்றால் இவர் வேலை செய்யும் இடத்தில் அடிபட்டதாகவும் பிறகு ஒரு அறையில் புகை சூழ்ந்த பகுதியில் மாட்டிக்கொண்டதால் அதனாலும் பாதிக்கப்பட்டதால் அவருக்கு வாய்பேசும் திறன் போனதாலும் அவர் அதிகம் மனஅழுத்ததிற்கு பாதிக்கப்பட்டார். அவர் வாய்பேசாமலே ஒரு வருட காலமாக இருந்துள்ளார் தாத்தா அவரிடம் பேசியதாக கூறி ஒரு பூஜை செய்தால் அவருக்கு பேச்சு வரும் என்றும் அந்த டைரியில் லலீத் எழுதுகிறார் அதையும் இந்த குடிம்பத்தில் உள்ளவர்கள் செய்கின்றனர்.
இப்படியே நாட்கள் கடக்கிறது பல நாட்களுக்கு பிறகு அந்த பூஜை செய்து கொண்டிருக்கும் வேலையில் அனைவரும் பூஜை படலை பாடும்போது லலீத்தும் அவர்களுடன் சேர்ந்து பாட்டு பாட ஆரம்பிக்கிறார் , இதை கண்ட குடும்ப உற்ப்பினர்கள் ஆச்சரியத்தில் உறைகின்றனர்
அதன் பிறகு தாத்தா கூறும் அதாவது தாத்த கூறுவதாக கூறி லலீத் கூறும் அனைத்து விசயங்களையும் குடிம்பத்தில் உள்ளவர்கள் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். அப்படி லலீத் கூறியதை செய்ததால் அவர்களின் குடும்பமும் நல்ல நிலைமைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படி இருக்க ஒரு நாள் தாத்தா மீண்டும் வருவதற்காக ஒரு பூஜை செய்யவேண்டும் என கூற அதுதான் இந்த பூஜைதான் ஆலமர பூஜை இதில் நீங்கள் அனைவரும் தூக்கு போட்டுகொள்ளுங்கள் பிறகு நான் உங்களை மீண்டும் உயிர்பிப்பேன் என லலீத் கூற அதை பற்றி சற்றும் சிந்திக்காமல் குடிம்பத்தல் உள்ள பெரியவர்களாக இருக்கட்டும் பெரிய பெரிய கல்விகளை பயின்ற இளமு வயதினர் கூட சிந்திக்காமல் இதை எப்படி செய்தார்கள் என ஆச்சரியமாகவே உள்ளது.
இவை அனைத்திற்கும் காரணம் லலீத் எனலாம் ஏனெனில் அவர்தான் தாத்தா அவரிடம் பேசியாதக கூறினார். ஏன் லலீத் இப்படி செய்தார் இவருக்கு உண்மையில் என்னாதன் ஆச்சி என்று கேள்வி உங்களுக்கு எலழாம் . இந்த லலீத் ஏற்கனவே கூறியதுபோல் ஒரு விபத்தில் அடிபட்டு தலையில் காயமடைந்தார் அதுமட்டுமல்லாமல் அவர் குரல் வராதபோது மிக மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். இவ்வாறு இவருக்கு மனஅழுத்தம் என்பதனால் இவர் தாத்தா பேச்சை கேட்டதாக கூறியபோது பெரியவர்கள் மட்டுமின்றி அந்த குடும்பதிலிருந்த படித்தவரும் அதை நம்புகின்றனர். அந்த குடும்பதிலிருந்த பலரும் வெளி உலகத்திலிருந்தே சற்று வேறுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இது கொலை அல்ல தற்கொலை என காவல்துறை வழக்கை முடித்தது, இதிலிருந்து நாம் அறிவது மன அழுத்தமுடையவர்கள் எந்த அளவுக்கு பித்துபிடித்தவர்கள்போல் நடந்துகொள்வார்கள் என்றும் கண்மூடித்தனமான மூட நம்பிக்கையும் அதை நம்பவேண்டாம் என அறிவுரை கூறக்கூடிய இடத்தில் இருந்து படித்த பிள்ளைகளும் பெற்றோர்கள் கூறினால் சரி என நினைத்ததுதான் இப்படி ஒரு விபரீதத்துக்கு காரணம். எனவே கண்மூடித்தனமான நம்பிக்கை விடுத்து அனைத்து விசயங்களையும் கூர்ந்து ஆய்வு செய்த பின்னர் முடிவெடுக்க கற்றுக்கொள்ளுங்கள்.