பீர் குடிப்பது நல்லாத? கெட்டதா? beer drinking side effects and benefits in tamil

              பீர் குடிப்பது நல்லதா கெட்டாத-beer drinking side effect

beer
 
 

வணக்கம் நண்பர்களே! மதுபானங்களில்  பீர் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இதை மதுபட்டியலில் சேர்ப்பதில்லை . ஆனால் பீரிலும் ஆல்கஹால் உள்ளது வட இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் பீர் அறுந்துகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்தது உண்மையில் பீர் அருந்துவது உடலுக்கு நல்லதா அல்லது கேடு விளைவிக்கூடியதா என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

பீரின் வரலாறு

 
 

இந்த உலக மக்களால்  3-வதாக அதிகமாக வாங்கபட்ட பொருள் இந்த பீர்தான். இந்த உலகில் ஆல்கஹால் கண்டுபிடிப்பதற்கு முன்பாக  பீரைதான் முதன் முதலில் கண்டுபிடித்தனர், இந்த பீர் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கபட்டது என்பது எங்கும் தெளிவாக  குறிப்பிடவில்லை.கிட்டதட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் வாழ்ந்த எகிப்தியர்கள் இதை உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மெசபட்டோமியா நாகரிகத்திலும் பீர் குடுவைகள் கண்டுபிடிக்கபட்டது என்பது சற்று குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. இந்த பீர் தயாரிப்பதற்கான அடிப்படை நுட்பங்கள் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து உலகமெங்கும் பரவியுள்ளது என நம்பப்படுகிறது.பண்டைய காலத்தில் பீர் காய்ச்சியத்திற்கான ஆதாரங்கள் முதன் முதலில்  ஈரானில் படிமங்களாக கண்டுபிடிக்கபட்டது

பீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா

beer belly

பெரும்பாலான மக்கள் இந்த பீரை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றால் பீர் அருந்தினால் உடல் எடை அதிகரிக்கும் தொப்பை வரும் என நம்புகிறார்கள்.உண்மையில் ஒரு டின் பீரில் மட்டும் கிட்டதட்ட 150 கலோரிகள் உள்ளன இது ஒரு வாழைபழத்திற்கு சமாமக மட்டுமே இருக்கும் அப்படியென்றால் தொப்பைக்கு காரணம் பீர் இல்லை ஆனால் நீங்கள் பீர் உட்கொள்ளும்போதும்  அல்லது ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும்போதும் அவை உங்களுக்கு அதிக பசியை தூண்டும் அப்போது நீங்கள் பொறித்த கறி, ப்ஆஸ்ட் புஃட்,உருளை கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வதால் அதன் காரணமாக தொப்பை வர வாய்ப்புள்ளது. பீர் அருந்தினால் தொப்பை ஏற்படுவதற்கான  வாய்ப்பு குறைவு ஆனால் சைடிஷ்களால் தொப்பை வரும் என்பதை மறவாதீர்கள்.

பீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

beer facfs
 
 

பீர் குடிப்பதால் ஒரு சில நன்மைகளும் நமக்கு ஏற்படும் அதில் சில வற்றை காண்போம்.

  • இந்த பீரில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின்-பி ,புரதம் கால்சியம் போன்றவை உள்ளன.
  • அளவாக பீர் அருந்தினால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு குறைவு என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இதயம் சம்மந்தபட்ட நோய்களையும் குணப்படுத்தும் என தெரிவுக்கிறார்கள்.
  • பீர் குடிப்பது  சிறுநீரக கற்களை  குறைக்க உதவும். சமீபத்திய ஆய்வின்படி, மிதமான அளவு பீர் குடிப்பதாகத் தெரிவிக்கும் ஆண்களும் பெண்களும் கல்  உருவாகும்  அபாயம் 41 சதவீதம் குறைந்துள்ளது என கூறுகின்றனர்.
  • அதிக அளவு சிலிக்கான்  இருப்பதால், வலுவான எலும்புகளை உருவாக்க பீர் உதவக்கூடும். எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களின் வளர்ச்சி மற்றும்  எலும்பு மெலிதல் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது.
  • ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் பீர் அருய்துவது  மன அழுத்தம் அல்லது கவலையை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், மன அழுத்தத்தை சமாளிக்க ஆல்கஹால் பக்கம்  திரும்புவது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். இந்த நேரத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க ஆல்கஹால் உதவக்கூடும் என்றாலும், நீண்ட காலத்திற்கு அது மனச்சோர்வு மற்றும் பதட்ட உணர்வுகள் ஏற்பட காரணமாகவும் அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

மேலே குறிப்பிட்டவை அனைத்தம் பீரை அளவாக அருந்துவதன் மூலம் ஏற்பட்ட நன்மைகளே தவிர அளவுக்கு மீறினால் இவை அனைத்தும் தலைகீழாய் மாறாவும் வாய்ப்புள்ளது.

பீர் குடிப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள்

 
பீர்
 
இந்த பியர் அருந்துவதன் மூலம் நமக்கு ஒரு சில தீமைகளும் ஏற்படுகின்றன அதில் ஒரு சிலவற்றை காண்போம் .
  • பீர் குடிப்பது உண்மையில் உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவுகளில் ஒரு சில மாற்றத்தை ஏற்படுத்தலாம். இது கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிளைகோஜனை குளுக்கோஸாக மாற்றி இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. பீரில்  உள்ள ஆல்கஹால் இதை செய்வதால் இதன் காரணமாக உங்களுக்கு பசியை உருவாக்கி அதிக உணவை உட்கொள்ள வைக்கும். இது எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும். பீர் குடிப்பதற்கு முன் சரியான உணவை உட்கொள்வதன் மூலம் இதை சரிசெய்யலாம்.
  • நீங்கள் ஒரு நாளைக்கு பல கிளாஸ் பீர் எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கு அதிக  இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தம் . எனவே, ஒரு நாளுக்கு  ஒரு முறை என்பது மட்டுமே சிறப்பாக அமையம்.
  • அனைத்து வகையான ஆல்கஹால் போலவே, அதிகப்படியான பீர் நுகர்வு உங்கள் நரம்புகள் மற்றும் மூளையின்  செயல்திறன்களை பாதிக்கிறது. இது விபத்துகளுக்கு வழிவகுக்கும். இரவில் அதிகபடியான பீர் குடித்த பிறகு மோசமான ஹேங்கொவரை எதிர்பார்க்கலாம்.

நன்றி!