வானவில் எப்படி தோன்றுகிறது-facts about rainbow
வானவில் எப்படி தோன்றுகிறது
நீங்கள் வானவில்லை பெரும்பாலும் உயரமனா நீர் வீழ்ச்சிகள் மற்றும் மழைக்காலங்களில்தான் கண்டிருப்பீர்கள் இதற்கான காரணம் மழை பெய்யும்பொழுது அதில் உள்ள நீர் துளிகள் மீது சூரிய ஒளி பட்டு சிதறடிக்கபடும் இதானால்தான் வானவில் தோன்றுகிறது.அதாவது சூரிய ஒளியில் சிகப்பு, மஞ்சள், நீலம் ஆகிய மூன்று நிறங்களும் கலந்து வெள்ளை நிற கதிராக பூமியை அடையும் அப்பொழுது மழை பெய்தால் ஒரு கோள வடிவ நீர்துளியின் மீது அந்த சூரிய ஒளி பட்டு சிதறலடையும் இதானல் வண்ணப்பிரிகை ஏற்பட்டு நம் கண்களுக்கு ஏழு வண்ணங்களில் வானவில் போன்று தோன்றும்.
வானவில்லுக்கு முடிவு உள்ளதா
வானவில்லின் வடிவம்
நாம் அனைவரும் வானவில்லின் வடிவம் அரைவட்டம் என நினைத்திருப்போம் ஆனால் உண்மையில் வானவில் தரையில் இருந்து பார்க்கும்பொழுது மட்டுமே அரைவட்டமாக காணப்படும் அதுவே நீங்கள் தரையிலிருந்து மேலே அதாவது விமானத்தில் இருந்து பார்த்தால் வானவில்லானது முழுவட்டத்தில் இருக்கும்.
இரட்டை வானவில்
நீங்கள் சில சமயங்களில் இரட்டை வானவில்லை பார்த்திருக்க வாய்ப்புள்ளது இதற்கு காரணம் மழைத்துளிகள் மீது ஒளியானது இரண்டு முறை படும்பொழுது இந்த இரட்டை வானவில் தோன்றும். இந்த இரண்டு வானவில்களும் இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
சூரிய குடும்பத்தில் வானவில்
நம் சூரிய குடும்பத்திலேயே வானவில் தோன்றும் ஒரே கிரகம் நம் பூமி மட்டும்தான் ஏனெனில் பூமியில் மட்டும் மழையானது திரவ நிலையில் உள்ளது அதுமட்டுமல்லாமல் சூரிய ஒளி செல்லகூடிய கிரகமாகவும் உள்ளதால் இங்கு மட்டும்தான் வானவில் தோன்றுகிறது.
வானவில் பற்றிய பண்டையகால நம்பிக்கைகள்
பண்டைய கால ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்கள் இந்த வானவில்லை சொர்கத்திற்கான வழி என நம்புகின்றனர்.கிரேக்க புராணத்தின்படி இந்த வானவில் ஆனது கடவுள்கள் ஒலிம்பஸ் நகரத்திற்கும் பூமிக்கும் இடையே பாலமாக இருந்தது என நம்புகின்றனர். அதாவது கடவுளையும் மனிதரையும் இனைக்கும் பாலம் என குறிப்பிடப்படுகிறது. இது புராணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீண்ட நேர வானவில்
ஒரு வானவில் என்பது சராசரியாக ஒரு மணிநேரம் அல்லது அதற்கு குறைவான நேரமே தோன்றும் ஆனால் தைவானில் 2017-ஆம் ஆண்டு தோன்றிய வானவில் கிட்டதட்ட 8 மணி நேரம் 58 நிமிடங்கள் இருந்தது. இது தான் இன்றுவரை உலகில் நீண்ட நேரம் தோன்றிய வானவில்லாக அமைந்துள்ளது.
நன்றி!
related:வானம் ஏன் நீல நிறத்தில் உள்ளது