புத்தர் வடிவ பேரிக்காய்
நீங்கள் பல பேரிக்காய்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் புத்தர் வடிவ பேரிக்காய்களை பார்த்திருக்கீர்களா .ஆம் புத்தர் வடிவ பேரிக்காய் இருப்பது உண்மை தான் . அதாவது இந்த பேரிக்காய் புத்தரின் வடிவத்தை அப்படியே ஒத்திருக்கிறது.இந்த வடிவ பேரிக்காய் சீனாவில் வளர்கிறது. நாம் பல வடிவம் நிறங்களில் பேரிக்காய்களை பார்த்திருப்போம். ஆனால் புத்தர் வடிவில் இருப்பது ஒரு ஆச்சர்யமான ஒன்றுதான். இதனுடைய ஒரு பேரிக்காயின் விலை மட்டும் 700 ரூபாய் ஆகும். இது இயற்கையாக புத்தர் வடிவில் வளர்கிறதா என்று கேட்டால் கிடையாது இந்த பேரிக்காய்களை புத்தர் வடிவில் இருக்கும் ஒரு அச்சில் பிஞ்சாக இருக்கும்பொழுதே அதனை வளர்க்கிறார்கள் இதன் காரணமாகதான் இது புத்தர் வடிவில் காணப்படுகிறது.
செக்கா இச்சி ஆப்பிள்
SEMBIYA QUEEN STRAWBERRY
சதுர வடிவ தர்பூசணி
சதுர வடிவ தர்பூசணி என்றால் சதுரமாக இருக்கும் என்று கேட்டால் ஆம் இந்த தர்பூசணிகள் கட்டமாக அதாவது சதுரமாக இருக்கும் . இந்த வகை தர்பூசணிகள் ஜப்பானில் விளையும் .அதாவது தர்பூசணி என்றாலே வட்டமாக இருக்கும் ஆனால் இவை ஏன் இப்படி விளைகின்றது என்று கேட்டால் இவை வளரும் போது சதுரமான ஒரு மரப்பெட்டியில் வைத்து வளர்ப்பதால் இவை சதுரமாக வளர்கிறது . இதனுடைய விலை 42000 ரூபாய் ஆகும்.
RUBY ROMAN GRAPES
ரூபி ரோமன் திராட்சை மிகவும் அழகானது இந்த வகை திராட்சை ஜப்பானில் விளையும் . இந்த திராட்சையில் அதாவது ஒரு கொத்தில் 26 திராட்சைகள் இருக்கும் இதனுடைய ஒரு கொத்தின் விலை 4 லட்சம் ஆகும்.
டென்சுகே தர்பூசணி
இந்த வகை தர்பூசணி சாதரணமான தர்பூசணி போல் இல்லாமல் அதன் நிறத்தில் சற்று மாறுபட்டு கருப்பாக இருக்கும். இதன் சுவை சாதரணமான தர்பூசணியை விட அதிகமாக இருக்கும் . இது ஜப்பானில் விளையும் இது விளைவதற்கென்றே ஒரு தீவு ஜப்பானில் உள்ளது . இது மிகவும் குறைவாக விளைவதால் இந்த தர்பூசணி மிகவும் விலை உயர்ந்தது . இது 11 கிலோ வரை வளரும். இதனுடைய விலை 35000 ஆகும்.