10 facts about dinosaurs
நாம் வாழ்நாளில் பல உயிரினங்களை பார்த்திருக்கிறோம் ஆனால் டைனோசர்(DINOSAURS) போன்ற அறிய உயிரினத்தை நாம் யாருமே கண்களால் பார்த்ததில்லை . நாம் இதனை திரைப்படங்களில் மட்டுமே காண்கிறோம் . இந்த உலகில் பல உயிரினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன ஆனால் அதில் டைனோசர் மட்டும் அதிக அளவில் மக்களால் பேசப்படுகிறது ,இதுமட்டுமின்றி திரைபடங்கள் எடுக்கப்படுக்கின்றன ,அதனுடைய படிமங்கள் சேர்த்துவைக்கப்படுக்கின்றன. இதற்கு காரணம் இந்த டைனோசர்கள் தங்கள் அறிவிலும் ,உயரத்திலும், வடிவத்திலும் எல்லாத்திலும் சிறந்ததாக இருந்துள்ளன . இந்த காரணத்தினாலே மக்களின் பார்வைக்கு திகைப்பபூட்டக்கூடியதாக டைனோசர்கள் உள்ளது .இப்பொழுதும் கூட டைனோசர்கள் நம் கூடவேதான் வாழ்கிறது என்று சொல்லலாம்.அது எப்படி என்று கேட்டால் நம் கூட வாழும் பறவைகள் தான் தற்போதய நடமாடும் டைனோசர் ஆகும்.
மிகப்பெரிய பல்லி
நம் உலகமானது ஒரே நிலப்பரப்பாகவும் மற்றொன்று நீர் பரப்பாகவும் இருந்தது . அந்த காலக்கட்டத்திலே டைனோசர்கள் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன . அதாவது 23 கோடி நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து அழிந்த உயிரினம் இந்த டைனோசர்கள். இவைகள் மாமிசம் உண்ணும் டைனோசர் மற்றும் தாவரம் உண்ணும் டைனோசர் என இரண்டு வகையாக உள்ளன. இவையில் தாவர உண்ணிகளே அதிகம் . டைனோசர் என்ற பெயரிற்கு மிகப்பெரிய பல்லி என்று பெயர்.
இந்த டைனோசர் என்ற உயிரினம் இருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள முதன்முதலில் அமெரிக்காவின் மெக்ஸிகோவில் MEGALOSAURUS என்ற டைனோசரின் படிமம் கிடைத்தபோதுதான் டைனோசர் என்ற உயிரினம் வாழ்ந்ததை கண்டறிகின்றனர் . அதன் பிறகு அதனை ஆராய்ச்சி செய்கிறார்கள்.
பறவை டைனோசர்கள்
டைனோசர்கள் பல வடிவத்தில் உள்ளன அதாவது நம் கையில் அடங்குவது முதல் மலை அளவிற்கு பெரியதாகவும் உள்ளது. இவைகள் அதிக அளவு அறிவும் கொண்டது . அதாவது இவைகள் தங்களுக்குள்ளே பேசி கொள்ளும் அளவிற்கு திறன் படைத்தது .
அதாவது இவைகள் தங்களின் ஓசையை வைத்து பேசிக்கொள்ளும். மேலும் தங்களை தாங்களே பரிணாமம் அடைந்து தங்களை ஒரு பறவையாகவும் மாற்றிக் கொண்டன . அதாவது இவைகள் பரிணாமம் அடைந்து ஒரு காலக்கட்டத்தில் பறவையாகவும் மாறி இருந்தன. இவைகளே பரிணாமம் அடைந்து சிறிய பறவையாக மாறிவிட்டது .அதுவே தற்போது நம் கூட வாழும் பறவையாக இருக்கலாம் ஆம் நாம் தினம்தானம் டைனோசர்களை பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.
மாமிச உண்ணி
டைனோசர்களில் மாமிசம் சாப்பிடும் டைனோசர்கள் மிகப்பெரிய அளவில் உள்ளன . அதாவது TRYANNOSAURUS(T-REX) இது தன் உருவத்தில் பெரியதாக உள்ளது . இதற்கு இரண்டு கால்கள் மட்டுமே இருக்கும் மற்ற இரண்டு கைகளாக செயல்படும் இது வேட்டையாடி உண்ணும் மாமிச உண்ணி.
தாவர உண்ணி
ARGENTINOSOURUS இது ஒரு தாவர உண்ணியாகும் . இவைகள் ஓரு நாளைக்கு 1 டன் தாவரங்களைை சாப்பிடும். இவைகள் நான்கு கால்களுடன் நடக்கும். இவைகள் நீண்ட கழுத்துடன் உள்ளது . இவைகள் TRYANNOSAURUS விட அதிக அளவில் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்தன.
டைனோசர்களின் பொதுபண்பு
டைனோசர்கள் பொதுவாக நாம் எல்லாரும் நினைப்பது போல வேகமாக சிங்கம் போல கத்தும் என்று ஆனால் இவைகள் உண்மையில் பூனை போல கத்துமாம் . டைனோசர் நாம் படத்தில் பார்ப்பது போல வேகமாக ஓடாது அது மிகவும் மெதுவாகவே செல்லும். இவைகள் முட்டை இட்டே வாழும். இவைகள் பல நிறங்களை பார்க்கக்கூடிய தன்மை கொண்டது.அதாவது மனிதனின் கண்களுக்கு தெரிவதை விட பல நிறங்களை டைனோசர்களால் பார்க்க முடியும். இவைகள் தங்களையே தகவமைத்து கொள்ளும் திறன் படைத்தவை. அதாவது சூழ்நிலைக்கு ஏற்ற வாறு தனது உடலின் வெப்பத்தையும் குளிரையும் மாற்றக்கூடிய திறன் படைத்தது. 17 கோடி வருடங்கள் பூமியில் வாழ்ந்தவை இந்த டைனோசர்.
டைனோசர்களின் அழிவு
இந்த டைனோசர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் பூமியில் ஒரு பெரிய கல் (ASTEROID) விழுந்ததால் இந்த டைனோசர் உயிரினம் முழுவதும் அழிந்து போனது . அதாவது 14 கிலோமீட்டர் விட்டம் கொண்ட மிகப்பெரிய கல் பூமி மீது விழுந்து பூமியின் மொத்த பகுதியும் அழிந்து புகைமூட்டமாக இருந்தது.இதனால் ஒரு வருடத்திற்கு சூரியன் ஒளி பூமி மீது படவில்லை. ஒரு சில உயிரினங்கள் மட்டுமே தப்பின .அதில் இதனுடய கடைசி பரிணாமமே பறவை, ஓணான் போன்றவை ஆகும் .
RELATED : எகிப்து பற்றிய மர்மமான உண்மைகள்