80 20 rule in tamil
வணக்கம்! நம் வாழ்க்கையில் பலபேர் நம்மிடம் கூறும் ஒரு விசயம் என்னவென்றால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் அப்படி உழைத்தால் மட்டும்தான் வெற்றியடைய முடியும் என்று. இதனை முறியடிக்கும் வகையில் கூறபட்ட ஒரு விதிதான் இந்த பரேட்டோ விதி . வெறும் 20% உழைப்பை வைத்து உங்களால் 80% வெற்றியை அடைய முடியும் என்பதுதான் இதன் மையகருத்து இதனை பற்றி சற்று விரிவாக காண்போம்.
பரேட்டோ விதி
இந்த பரேட்டோ விதியானதி 1906 ஆம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த வில்ஃப்ரேடு பரேட்டோ என்பவரால் அறிமுகப்படுத்தபட்டது. இந்த நபர் ஒரு நாள் தன்னுடைய தோட்டத்தில் பட்டாணிகளை விதைக்கிறார் அப்படி விதைக்கபட்ட பட்டாணிகளில் 20% செடிகள்தான் 80% பட்டாணிகளை தருகிறது என்பதை அவர் கண்டறிகிறார். இதன் பிறகு இந்த ஒரு விதி அனைத்திற்கும் பொருந்துவரை அவர் கண்டறிந்தார் இப்படிதான் இந்த விதி உலகிற்கு அறிமுகபடுத்தபட்டது.
சில எடுத்துகாட்டுகள்
இந்த பரேட்டோ விதி நம் வாழ்வில் நிறைய இடங்களில் இருக்கிறது என்றே கூறலாம் அதில் ஒரு சில எடுத்துகாட்டுகளை காண்போம்.
இந்த உலகில் இருக்கூடிய 80% பணம் மற்றும் சொத்துக்கள் இந்த உலகில் இருக்கூடிய 20% மக்களிடம்தான் உள்ளது.
உங்கள் அலமாறியில் 100 சட்டைகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட 20% சட்டைகள் மற்றும் உடைகளை மிண்டும் மீண்டும் 80% சதவீதம் பயன்படுத்துவீர்கள்.
உங்களது கைப்பேசியில் ஆயிரகணக்கில் பாட்டுகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட 20% பாட்டுகளை 80% கேட்பீர்கள்.
உங்களுடைய 20% செலவுகள் உங்களின் வருமானத்தில் 80% பிடித்துக்கொள்ளும்.
இந்த உலகில் இருக்கூடிய 20% குற்றவாளிகள்தான் 80%குற்றங்களுக்கு காரணமானவர்கள்.
இந்த உலகில் இருக்கும் 20% நிறுவனங்களின் பொருள்கள்தான் 80% மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
என கூறிக்கொண்டே போகலாம். எப்படி இதனை உபயோகமாக பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
எங்கு பயன்படும்
இந்த பரேட்டோ விதி நம் வாழ்வில பல இடங்களில் நம்மால் பயன்படுத்தமுடியும் ஒரு சிலவற்றை கீழே காண்போம்.
தொழில்
நீங்கள் ஒரு தொழிலதிபர் அல்லது தொழில்தொடங்க நினைக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த ஒரு விதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த விதியை பயன்படுத்தி உங்களுக்கு தொழிலுக்கு 80% லாபத்தை தரக்கூடிய அந்த 20% வாடிக்கையாளர்களை கண்டறியுங்கள் இதன் மூலம் உங்கள் தொழில் வெற்றிகாணலாம். பெரும்பாலான நிறுவனங்களில் 20% வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனங்களுக்கு 80% லாபத்தை ஈட்டிதருகின்றனர்.
நேர மேலாண்மை
இந்த விதியை பயன்படுத்தி உங்களின் நேரத்தை மீதப்படுத்த முடியும் . எடுத்துகாட்டாக நீங்கள் ஒரு வேலையை 5 மணி நேரம் செய்கிறீர்கள் என்றால் அதில் 20% நேரத்தை பயன்படுத்தி 80% வேலையை செய்திருப்பீர்கள் . மீதமுள்ள நேரத்தை வேலைசெய்வதுபோல் ஒரு மாயைபோல் இருக்கும். எனவே அந்த 20% நேரம் எப்போது என்பதை கண்டுபிடித்து செலவிடுங்கள்.
தொடர்புடையவை: பொமோடோரோ டெக்னிக் என்றால் என்ன?
படிப்பு
நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் இதனை பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக உதவும். நீங்கள் படிக்கும் பாடங்களில் இருந்து 20% தலைப்புகள் உங்களுக்கு 80% மதிப்பெண்களை பெற்றுதரும். அதுபோல் 80% வினாக்கள் என்பது அனைத்து தேர்வுகளிலும் கேட்ககூடிய வினாக்களாக இருக்கும் இவற்றை படித்தால் மட்டுமே போதும் நீங்கள் 20% உழைப்பை பயன்படுத்தி உங்களால் 80% மதிப்பெண்களை பெற முடியும்.
கண்டிப்பாக இந்த ஒரு பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன் இந்த பதிவில் குறிப்பிடும் தகவல்கள் ரிச்சர்ட் கோச் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்ட தகவல்களாகும் முழுமையான தகவலை பெற கீழே புத்தகத்தை இணைத்துள்ளேன் அதனை பயன்படுத்தவும். நன்றி!