TOP 5 UNSOLVED MYSTERIOUS DISCOVERIES
5.தங்க வளையம்
4. அலாஸ்கா ஆர்டிஃபக்டு
source: the hamilton spectator |
பனிப் பிரதேசங்களில் ஒன்றான அலாஸ்காவில் ஹாலரேடோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் அப்பொழுது வெண்கலத்தால் செய்யப்பட்ட பக்கில்ஸ் போன்ற பொருளை கண்டறிந்துள்ளார்கள், இவற்றை ஆராயும்பொழுது கிட்டதட்ட 1500 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறிந்துள்ளனர், ஆனால் இதில் குறிப்பிடதகுந்த விஷயம் எனெனவென்றால் அலாஸ்கா போன்ற பனி நிறைந்த பகுதிகளிலும் வெண்கலம் இருக்க வாய்ப்பே இல்லை . எப்படி இந்த உலோகம் 15-ம் நூற்றாண்டில் இந்த இடத்திற்கு வந்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
3. ஆவிகள் வளையம்
இங்கிலாந்து நாட்டிலுள்ள STONEHENGE போலவே மற்றொரு இடத்தை இஸ்ரேல் நாட்டில் கண்டறிந்துள்ளார்கள் நான்காயிரத்திற்கும் அதிகமான பாஸல் என்ற ஒருவகை பாறைகளை கொண்டு வட்ட வடிவிலான தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பானது இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய நீர் தேக்கமாக அறியப்படும் ஜெனாஸர் என்ற ஏரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பீடபூமியில் காணப்படுகிறது, இவற்றை வானில் இருந்து பார்க்கும்பொழுது மிகப்பெரிய 4 வட்டங்களை உட்புறமாக இனைத்தது போல் காட்சியளிக்கும் இதனை எதற்காக வடிவமைத்தார்கள் என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது .மேலும் இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இது சிறப்பான பங்களிப்பினை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு astronomical calendern அதாவது வானியல் நாட்காட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
2.மொகஞ்சதாரோ
தொல்லியல் ஆராய்ச்சிகள் என்பது முக்கியமாக இரண்டு வகையான தேடல்களை முன்னோக்கியே அமைந்திருக்கும் ஒன்று பழமையான நாகரிகங்களும் கட்டுமானங்களும் எப்படி அழிந்து போயின எதற்காக அவை அழிக்கப்பட்டன என்பதும் மற்றொன்று அங்கிருந்த மக்களின் நிலை என்னவானது அவர்கள் எங்கே போனார்கள் என்பதுதான், அந்த வகையில் உலகின் மிக முக்கியமான நாகரிகங்கள் ஒன்றாக அறியப்படும் நாகரிகம்தான் மொகஞ்சதாரோ , இந்த நாகரிகம் கிமு மூன்றாம் நூற்றாண்டில் வருவதாக கூறப்படுகிறது . இவை அழிந்து போனதாகக் கூறப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று 1800களின் பிற்பகுதியில் ஏற்பட்ட காலநிலை மாற்றமும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதே உண்மை இருந்தாலும் கண்டிப்பாக ஏதோ ஒரு பேரழிவு மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்று இன்றுவரை கூறி வந்தாலும் அது என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை .
1.மிதக்கும் கலைமான்கள்
source:wikimedia |
இதுவரை கண்டுபிடிக்கபட்ட வரலாற்று பொருள்களில் மிகவும் வித்தியாசமான மற்றும் பழமையான கலை வடிவமாக இது திகழ்கிறது, இதற்கான காரணம் இதன் தோற்றம் எனலாம் பார்ப்தற்கு மிகவும் வித்தியாசமாக இரண்டு கலைமான்கள் ஒன்றன்பின் ஒன்றாக இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த வடிவமைப்பானது அழிந்துபோன மாமுத் என்ற யாணையின் எலும்புகளால் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது இங்கிலாந்தில் அருங்காட்சியத்தில் இன்றும் பத்திரமாக பாதுகாக்கபட்டு வருகிறது. இப்படி ஒரு கலை வடிவத்தை எதற்காக உருவாக்கினார்கள் என்பதும் இதன் பயன்பாடு என்ன என்பதும் இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.