
வணக்கம் ! நாம் அனைவரும் இதை ஒரு நாளாவது யோசித்திருப்போம் அது என்னவென்றால் நம் பூமியை போன்று இந்த விண்வெளியில் இருக்கூடிய கிரகங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று ,அப்படி விண்வெளியில் இருக்கூடிய வித்தியாசமான கிரகங்களை 5 strange planets பற்றிதான் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம்.
TRES-2B
இந்த கிரகம்தான் இதுவரை கண்டுபிடிக்கபட்ட மிக கருமையான கிரகம் என கூறலாம் இந்த கிரகம் ஆனது 90% ஒளியை தனக்குள் ஈர்த்துகொள்ளுமாம். இப்படிபட்ட கருமை நிற வித்தியாசமான கிரகமானது 2011 நமது பூமியிலிருந்து 750 ஒளி ஆண்டுகளுக்கு அந்த பக்கமாக உள்ளது.
HD189733B
நம் பூமி போன்று நீல நிறத்தில் இருக்கும் இந்த கிரகமானது 64.5 ஒளி ஆண்டுகளுக்கு அந்த பக்கத்தில் உள்ளது இதில் குறிப்பிட தகுந்த விசயம் என்னவென்றால் இந்த கிரகத்தில் பொழியும் மழையானது முழுவதுமாக கண்ணாடியாக இருக்கும்.
55 CANCRI-E
55 Cancri E ஆனது, நம்மிடமிருந்து சுமார் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது பூமியை விட இரண்டு மடங்கு பெரியது, இந்த கிரகத்தின் நிறை பெரும்பாலும் கார்பன் என்று கருதப்படுகிறது. அழுத்தம் மற்றும் சராசரி அதிகபட்ச மேற்பரப்பு வெப்பநிலை 4417 °F (2400 °C) காரணமாக, இந்த வித்தியாசமான கிரகம் வைரங்களால் மூடப்பட்டதாக நம்பப்படுகிறது. அதாவது இந்த கிரகம் முழுவதும் வைரங்களால் ஆனது.
KEPLER 452-B
2015-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கபட்ட இந்த கெப்ளர் 452-B ஆனது நமது பூமியில் இருந்து கிட்டதட்ட 1500 ஒளி ஆண்டுகளுக்கு அந்தபக்கமாக உள்ளது. இந்த கிரகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நமது பூமியைபோல் இங்கும் வளிமண்டலமும் நீரும் இருப்பதை நாசா கண்டறிந்துள்ளது. எனவே இங்கும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன.
J1047B
இந்த பார்பதற்கு கிரகமானது நமது சனி கிரகம் போன்றே இருந்தாலும் அளவில் மிகப்பெரியது இது சனி கிரகத்தில் இருக்கும் வளையங்களை விட மிகப்பெரிய வளையங்களை கொண்டுள்ளது.
SOURCE:NASA