இன்றைய நாளில் நம் சிறிதாக ஆரம்பிக்கும் பழக்கம் நாளடைவில் அது ஒரு விட முடியாத பழக்கமாக மாறும் இந்த பழக்கம் நம் உடலுக்கு பல நோய்களைத் தரலாம் நமக்கு மட்டும் இல்லாமல் நம்மை சுற்றி உள்ளோருக்கும் நோய் தாக்கம் ஏற்படலாம் ஆதலால் இந்த பழக்கத்தை எவ்வாறு விடுபடலாம் என்பதை இந்த பத்தியில் பார்க்கலாம்
மூக்கு/வாயை கிளறுதல்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழக்கத்தை செய்வார்கள் இந்த பழக்கமானது ஒரு சிலருக்கு எரிச்சல் ஊட்டும் மற்ற சிலருக்கு வேடிக்கையாகவும் இருக்கும் ஆனால் இந்த பழக்கம் சமூகத்தை பெரிதும் பாதிக்கும் மூக்கை குடைதல் பல்வேறு தொற்றுகளான ஜலதோஷம் மற்றும் ப்ளூ நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் சளி மூலம் உடலுக்குச் செல்ல வழி வகிக்கிறது பல இடங்களில் கை வைத்து விட்டு அதை கையை மூக்கில் வைத்து இறுதியாக மருத்துவமனையில் தங்களை சேர்த்து விடும்.
குருட்டுத்தனமான குடிப்பழக்கம்

இந்த குடிப்பழக்கம் மூலம் உலகம் முழுவதும் பல மரணங்கள் ஏற்படவும் மருத்துவமனையில் சேர்க்கவும் காரணமாக அமைகிறது குருட்டுத்தனமான குடிப்பழக்கம் கல்லீரல் பிரச்சனை எடை அதிகரித்தல் மயக்கம் மற்றும் சோர்வு போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன இத்தகைய பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் மது அருந்துவதை அளவாக வைத்துக் கொள்வது தான் தீர்வாகும.
இரவில் ஆந்தை போல் முழிப்பது

ஒரு மனிதன் இரவில் எட்டு மணி நேரம் நல்ல தூக்கம் இல்லாமல் போனால் நோய் எதிர்ப்பு சக்தி பிற உடல் செயல்முறைகள் மற்றும் உடலமைப்பு சேதம் அடைவதற்கு வழி இருக்கின்றன இதனால் நீங்கள் அதிக மனசோர்வு ஆகிர்கள். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனம் ஆகிறது நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் செல்கள் குறைவாகவே உற்பத்தி செய்கிறது.
மேக்கப்புடன் தூங்குவது

இப்ப உள்ள பெண்களுக்கு மேக்கப் உடன் தூங்குவது பழக்கமாக இருக்கிறது மேக்கப்புடன் தூங்குவது சருமத்தில் உள்ள துளைகளை அடைத்துக் கொள்வதற்கும் நெரிசலான தோல் மற்றும் புள்ளிகள் ஏற்படுவதற்கும் வலியுறுக்கிறது கண்மை மற்றும் பிற கண் அழகுப்பொருட்கள் எரிச்சலை ஏற்படுத்துவது ஒரு கண்பார்வை இழப்பை கூட ஏற்படுத்தலாம்.
நீண்ட நேரம் ஹெட்போன்கள் அணிவது

காதில் பொருத்தக்கூடிய பாட்டு கேட்கும் கருவிகள் நாள் முழுவதும் ஒரு சிலருக்கு உற்றுத்துணையாக இருக்கிறது பயணம் செய்யும்போது அல்லது வேலை செய்யும் பொழுது நேரத்தை கடத்துவதற்கு இசையை கேட்கிறார்கள் இடைவேளை இல்லாமல் மணிக்கணக்கில் ஹெட்போன்கள் காதில் பொருத்தப்பட்டிருந்தால் இந்த பழக்கத்தை பரிசீலனை செய்வது நல்லது இல்லையெனில் உங்கள் காது கேட்காமல் போய்விடும்.
தொடர்ந்து பொய் பேசுதல்

இந்த வகையான பழக்கம் பாத்தீங்கன்னா ஒரு சிறிதான பொய்யில் ஆரம்பித்து நாளிடவில் அது உங்களுக்கு பழக்கமாகவே மாறிவிடும் இதை உங்களால் விடவும் முடியாது ஆகையால் இந்த பொய் பழக்கத்தை குறைத்துக் கொள்வதை நல்லது இல்லையெனில் உண்மைகள் பற்றிய பயத்தை முகத்தில் வெளிப்படும் இது உங்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி மன அழுத்தத்தை கொடுக்கும்.
நகம் கடிப்பது

நமது கைகள் பல இடங்களில் பயணித்து வருகிறது அது மட்டும் இல்லாமல் பல செயல்களை செய்கிறது கிருமிகளால் நிரப்பப்பட்ட விரல்களை வாயில் வைக்கும் பொழுது ஜலதோஷம் அல்லது ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டு நீண்ட நாட்கள் படுக்கையில் கிடக்க நீர் எல்லாம் எனவே இப்போதே இந்த அசிங்கமான பழக்கத்தை நிறுத்தி விடவும்.
மருந்து மாத்திரைகளில் வாழ்தல்

இன்றைய நாளில் சிறிது உடம்பு சரியில்லாத போதும் மாத்திரை உட்கொள்வது தின்பண்டம் உட்கொள்வது போல் ஆகிவிட்டது இது மிக ஆபத்தான ஒரு செயலாகும் இந்த பழக்கத்தை நீங்கள் மறக்காவிட்டால் உங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் சிறிது உடல் நலக்குறைவு ஏற்படும் போது அதை தாங்கும் சக்தியை நம் இயற்கையாகவே வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக ஆரோக்கியமற்ற உறவை வைத்திருப்பது

சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பெற முடியாத ஒரு உறவில் நீண்ட காலம் வைத்திருப்பீர்கள் என்றால் அந்த நொடியிலேயே அதை முடிச்சு அவிழ்த்து விடுவது நல்லது ஆரோக்கியமற்ற உறவு மன அழுத்தம் ஏற்படுத்தி மேலும் ரத்த அழுத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து மற்றும் செரிமான அமைப்பை வலுவிழக்க செய்கிறது
தோலை கசக்குதல்

முகத்தில் சில பருக்கள் காணப்பட்டால் தொடர்ந்து அதை கசக்கி கொண்டிருப்பதனால் அது மேலும் அதிகரிக்கும் தவிர இது வடுக்கள் மற்றும் வீக்கம் ஏற்பட காரணமாகிவிடும் எனவே தோல் பிரச்சனைகள் மோசமாவதை தவிர்க்க முகத்தை தொட்டு அழுத்தி கொண்டிருப்பதை நிறுத்தவும்.