இதர விஷயங்களைப் போலவே, அதீத சிந்தனையும், உங்களுடைய உடல் நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
மனம் என்பது ஒரு விசித்திரமான ஒன்று. அதன் கொள்ளளவு என்ன என்பதற்கு முடிவு ஏதும் இல்லை. மூளையின் உத்தரவுகளுக்கு உடல் எதிர்வினையாற்றுகிறது. அதனால்தானோ என்னவோ, மன நலன் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது. அதீத சிந்தனை ஒரு பழக்கமாக , உங்கள் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுதக் கூடும். மன சோர்வை ஏற்படுத்துவதுடன், பீதியை உருவாக்குதல், மன அழுத்தம், சித்தபிரமையையும் ஏற்படுத்தக் கூடும். நிலைமை உங்கள் கட்டுக்குள் அடங்காமல் போவதாக உணர்ந்தால், உங்கள் மனதுக்குள் புத்துயிர் அளிக்க நீங்கள் முயற்சி செய்து பார்ப்பதற்கான சில விஷயங்கள்
மாற்றத்தின் ஆரம்பம்.
நீங்கள் அதிகமாகச் சிந்திக்கும் பழக்கத்தை எதிர்கொள்ள அல்லது சமாளிக்கத் தொடங்குவதற்கு முன், அது நிகழும் போது அதைப்பற்றி எச்சரிக்கையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் நீங்கள் சந்தேகப்படுவதையோ அல்லது மன அழுத்தத்தையோ அல்லது கவலையையோ உணர்ந்தால், பின்வாங்கி நிலைமையையும் நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் (உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வது)என்பதையும் பாருங்கள். அந்த விழிப்புணர்வின் தருணத்தில் நீங்கள் செய்ய விரும்பும்
புதிய தொழில் நுட்பங்களைக் கற்றல்
புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் நமது சிந்தனை கற்று கொள்வதில் ஆர்வம் இருக்கும் இதனால் அதிதீத சிந்தனையில் இருந்து விடுபடலாம்..
உடற்பயிற்சியில் ஈடுபடலாம்
உடற்பயிற்சி என்பது அதிதீத சிந்தனை போக்கும் மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது. எண்டோர்பின்ஸ் உள்ளிட்ட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன.
பாக்ஸிங் எனப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிதீத சிந்தனை ஏற்படுவது குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.
பொழுதுபோக்கு
ஏதாவது ஒரு பொழுதுபோக்கு செயலை தோ்ந்தெடுத்து அதை செய்து பாா்க்கலாம் இதனால் நமது கவனம் அதில் ஆர்வமாக செயல்படும்..!
நல்ல நண்பரை கண்டுபிடித்தல்
நம்மோடு சோ்ந்து வெளியில் வருவதற்கு மற்றும் நம்மோடு தனது நேரத்தை செலவழிப்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு நல்ல நண்பரைக் கண்டுபிடிப்பது நல்லது. அது நமது அதிதீத சிந்தனையை நிறுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும். அடுத்தவாின் சுமையை எளிதாக்க முயற்சித்தால், நாம் விரும்பும் திசையில் நமது வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடியும்.
ஏதாவது ஒரு காாியத்தைப் பற்றிய அல்லது யாராவது ஒருவரைப் பற்றிய நமது அதிதீத சிந்தனையில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் நமது நண்பா்களின் பணிகளில் அவா்களுக்கு உதவி செய்தாலும் நமது அதிதீத சிந்தனைகளில் இருந்து விடுபடலாம்.
நிகழ்காலத்தில் கவனம் செலுத்துதல்
இருக்கின்ற சூழலில் நலமோடு வாழ்வதற்கும், நிகழ்காலத்தில் வாழ வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு நாம் இசையையோ அல்லது பாடல்களையோ கேட்டு அதை அனுபவிக்கலாம். நமக்குப் பிடித்த சுவையான உணவுகளை உண்ணலாம். அவை நமது அதிதீத சிந்தனையில் இருந்து விடுபட உதவி செய்யும். மேலும் மெதுவாக வெளியில் நடந்து சென்று நமக்குப் பிடிக்கும் உணவுகளை உண்ணலாம். அதன் மூலம் அதிதீத சிந்தனைகளில் இருந்து விடுபடலாம்.
தியானத்தில் ஈடுபடுதல்
பெரும்பாலான மக்கள் அதிதீத சிந்தனையில் இருக்கும் போது, தியானத்தில் ஈடுபடுவதை விரும்புகின்றனா். ஏனெனில் தியானமானது அவா்களின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, முழுமையான இலக்கை நோக்கி சிந்திக்க உதவுகிறது. இரண்டாவதாக தியானமானது நமது பதற்றத்தைத் தனிக்க உதவுகிறது. அதோடு நமது வாழ்க்கைக் சூழல்களைப் பகுப்பாய்வு செய்து அதற்குத் தகுந்த பதில்களைத் தருவதற்கு உதவி செய்கிறது. எப்போதும் நமது மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவா்களின் கவனம் நமக்கு வரவேண்டும் என்பதற்காகப் பதற்றமடையக் கூடாது.
தன்னாா்வ பணிகளில் ஈடுபடுதல்
நமது ஓய்வு நேரங்களில், தான் தேவையில்லாத சிந்தனைகள் தலைக்கு ஏறும், இதனால் அருகில் இருக்கும் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து தன்னாா்வ பணிகளில் ஈடுபடலாம்.
உதாரணம்,
மரக்கன்று நட்டு தினமும் தண்ணீர் விட்டு அழகு பார்ப்பது,
மனிதரைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு மூளையில் 12 ஆயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன. இதில் எந்த எண்ணம் நம் வாழ்க்கைக்கு அவசியம், எது நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும் என்று பிரித்துணர்வதிலேயே நம் திறமை உள்ளது…!
மனிதரைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு மூளையில் 12 ஆயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன. இதில் எந்த எண்ணம் நம் வாழ்க்கைக்கு அவசியம், எது நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும் என்று பிரித்துணர்வதிலேயே நம் திறமை உள்ளது…!