10 FACTS ABOUT EMOJI

வணக்கம் இன்றைய பதிவில் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய எமோஜிகள் பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான தகவல்களை காண்போம்.
எமோஜி என்றால் என்ன?

இந்த எமோஜிக்கள் ஆனது 1997-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டை சேர்ந்த NTT DOCOMO என்ற நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது இவற்றை உருவாக்கியவர் ஷிகிடேகா குறிடா என்ற ஜப்பானியர் ஆவார். இந்த எமோஜிக்கள் என்பது முக்கியமாக கொண்டுவர காரணம் நமது செல்பேசியில் உரையாடல் நடக்கும்பொழுது வெறும் எழுத்துகளாகவே இருக்கும் அவர்களின் உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள இயலாது இதானல் உரையாடல் சரிநாக இருக்காது . இதனால் உரையாடலின்போது நம் உணர்ச்சுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கபட்டதுதான் இந்த எமோஜிக்கள்.1997-ல் இது உருவாக்கபட்டிருந்தாலும் 2012-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இந்த எமோஜிக்களுக்கு புத்துயிர் குடுத்து அவர்களின் ஆப்பிள் மொபைல் போன்களின் கீ போர்டில் இந்த எமோஜிக்களை வைத்தார்கள்.அதன்பிறகுதான் இந்த எமோஜிக்கள் உலகம் முழுவதும் பிரபலமடைந்தன.
உங்களிடம் எத்தனை எமோஜிக்கள் உள்ளது?

உங்களது மொபைல் போனில் எத்தனை எமோஜிக்கள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா கிட்டதட்ட 3000-க்கும் மேற்பட்ட எமோஜிக்கள் உள்ளன . வருடாவருடம் புது புது எமோஜிக்களும் இதில் சேர்கப்படுகின்றன இதில் குறிப்படதகுந்த விடயம் என்னவென்றால் நீங்கள் கூட ஒரு எமோஜியை உருவாக்கி அதனை UNICODE என்ற நிறுவனத்துக்கு அனுப்பினால் அவர்கள் நீங்கள் உருவாக்கியதையும் வரிசையில் சேர்த்துவிடுவார்கள்.
ஒரு நொடிக்கு கோடிகளில் செல்லும் எமோஜி

இந்த உலகில் ஒரு நொடிக்கு மட்டும் கிட்டதட்ட 3 கோடி எமோஜிக்கள் உரையாடலில் பயன்படுத்தபடுகின்றன. இதை படிக்கும் இதே நேரத்தில் கோடி எமோஜிக்கள் பயன்படுத்தபட்டிருக்கும்.
அதிகம் பயன்படுத்தபட்ட எமோஜி

மேலே படத்தில் காணும் இந்த ஒரு எமோஜிதான் உலக மக்களால் அதிகம் பயன்படுத்தபட்டுள்ளது. பார்ப்பதற்கு கண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்கும் இதுதான் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏன் எமோஜிக்கள் உருண்டையாக உள்ளது

நாம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான எமோஜிக்கள் உருண்டை வடிவத்திலேயே இருக்கும் அதற்கு முடியோ மீசையோ இருக்காது. இதற்கான காரணம் இது ஆண் பெண் என வேற்றுமையை ஏற்படுத்தாமல் இருபாலருக்கும் இடையே இருக்கூடிய ஒற்றுமைகளையும் அவர்கள் உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே இருக்கும் என அதை உருவாக்கியவர் கூறியுள்ளார்.
ஏன் எமோஜிக்கு மஞ்சள் நிறம்

எமோஜிகள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில்தான் காணப்படும் இது ஏன் என்று யோசித்துள்ளீர்களா இதற்கான காரணம் மஞ்சள் நிறம் அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கிறது மற்ற நிறங்களை விட இந்த நிறத்தில் முக பாவனைகள் அழகாக பொருந்துவதால் இந்த நிறத்தைதான் பெரும்பாலான எமோஜிக்கள் கொண்டுள்ளன.
எமோஜி தினம்

நீங்கள் தந்தையர் தினம் கேள்விபட்டிருப்பீர்கள் குழந்தைகள் தினம் கேள்விபட்டிருப்பீர்கள் ஆனால் எமோஜி தினம் என்ற ஒரு தினத்தை கேள்விபட்டுள்ளீர்களா ஆம் அதுவும் இந்த உலகில் கொண்டாடபடுகிறது 2014-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி இந்த எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது அன்று முதல் இன்றுவரை இந்த எம்மோஜிகளை பெருமைபடுத்தும் விதமாக கொண்டாடபட்டு வருகிறது.
எமோஜி மீனிங்

இந்த எமோஜி என்ற வார்த்தையானது ஜப்பானிய மொழியில் இருந்தது வந்தது எனலாம் இந்த எமோஜி என்ற வார்த்தைக்கான அர்த்தம் பட கதாபாத்திரங்கள் அதாவது PICTURE CHARACTER எனலாம். இந்த எமொஜிக்கு பொருத்தமான பெயரைத்தான் வைத்துள்ளார்கள்.
பண்டைய கால எமோஜிக்கள்

இந்த ஒரு எமோஜிக்கள் என்பது இன்றைய காலத்தில் உருவானவையல்ல இந்த எமோஜிக்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய காலமக்களும் இதனை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு சிறந்த எடுத்து காட்டு எகிப்திய கல்வெட்டுகள். பண்டைய கால எகிப்திய மக்கள் எழுத்துகளுக்கு பதிலாக படங்களையே கல்வெட்டுகளில் பொறிப்பார்கள் அவர்களின் உணர்ச்சிகளை படங்களின் வாயிலாகவே அடுத்தவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்கள் எனவே இந்த ஒரு எமோஜி கலாச்சாரம் என்பது பண்டைய காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்துள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.