வணக்கம் இந்த பதிவில் உலகின் மிகப்பெரிய நிலபரப்பை கொண்ட ரஷ்யா பற்றி நீங்கள் அறியாம சில சுவாரஸ்யமான மற்றும் வியப்பான தகவலை கண்போம்.
ரஷ்யாவின் வரலாறு facts about russia
உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பை கொண்டிருக்கும் ரஷ்யா 1991-ஆம் வருடம் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவானது ரஷ்ய மொழியானது நாட்டின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக இருந்தாலும் நாடு முழுவதும் 27 வெவ்வேறு மொழிகளைப் பேசக்கூடிய மக்கள் தான் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த உலகில் இருக்கும் 10-ல் ஒரு பங்கு இடத்தை ரஷ்யா வைத்துள்ளது இந்த நாட்டைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத சில சுவாரசியமான தகவல்களை தான் இந்த தொகுப்பில் நாம் காண இருக்கின்றோம்
வோட்காவின் பிறப்பிடம்
இந்த உலகிற்கு முதன் முதலில் வோட்காவை அறிமுகபடுத்திய நாடு ரஷ்யா ஆகும். இந்த மதுபானம் 14-ஆம் நூற்றாண்டில் இருந்தே மக்களிடம் புலக்கத்தில் இருந்தது என்றும் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இது மற்ற நாடுகளுக்கு பரவியது என்றும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
பெண்கள் அதிகம்
ரஷ்யவால் 15 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் இதில் குறிப்பிடதகுந்த விசயம் என்னவென்றால் ரஷ்யாவில் வசிக்கும் ஆண்களைவிட பெண்கள் அதிகம் எனலாம் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 1 கோடி பெண்கள் அங்கு அதிகமாக உள்ளனர் ரஷ்யாவில் ஆண்களுக்கு பற்றக்குறை இருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இரண்டாம் உலகப்போரின்போது ரஷ்ய படைகளை சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் கொல்லபட்டதுதான்.
குடிகார மக்கள்
இந்த உலகில் அதிக மதுக்களை உட்கொள்ளும் தரவரிசையில் ரஷ்யாவிற்கு 4-வது இடம் எனலாம். ரஷ்யாவில் வசிக்கும் ஒரு சாதாரண குடிமகன் ஆண்டுக்கு 18-லிட்டர் ஆல்கஹால் எடுத்துக்கொள்கிறார் இது பரிந்துரைக்கபட்டதை விட 2-மடங்கு அதிகம். இதன் காரணமாகவே ஆண்டுக்கு கிட்டதட்ட40-ஆயிரம் ரஷ்யர்கள் மதுபானம் உட்கொள்வதாலே உயிரிழக்கின்றனர்.
ரஷ்யாவின் விண்வெளி சாதனை
இந்த உலகில் முதல் முறையாக 1957-ஆம் ஆண்டு உலகின் முதல் செயற்கைகோளை பூமியின் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தியது அதுமட்டுமல்லாமல் 1961-ஆம் ஆண்டு யூரி காகரின் என்ற நபரை முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தது. நிலவை முதல் முறையாக படமெடுத்ததும் ரஷ்யாதான்.
ரோஜாக்கள் அபசகுணம்
ரஷ்யாவில் இருக்கூடியஆண்கள் பெண்களுக்கு ஒருபோதும் ரோஜா பூக்களைக் கொடுப்பதில்லை. இது அந்த நாட்டில் துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது மற்றும் ரோஜாக்கள் இறுதி சடங்குகளுடன் தொடர்புடையது என அந்நாட்டு மக்கள் .