வணக்கம்! மோனலிசா பற்றிய மர்மமான மற்றும் ஆச்சரியமான இதுவரை கேள்விபடாத தகவல்களை பற்றி காண்போம்.
மோனலிசாவின் பெயர் என்ன
ஓவியத்தின் பெயர் பொதுவாக லிசா கெரார்டினி என்று கருதப்படுகிறது. மோனாலிசா என்ற பெயரானது “மை லேடி லிசா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ஓவியத்தை லியோனார்டோ டா வின்சி முழுமையாக முடிக்கவில்லை – 1519 இல் அவர் இறந்தபோது, டாவின்சியால் முடிக்கப்படாத வேலைகளில் இதுவும் ஒன்றாகும்.
மோனலிசா ஓவியம் மிகசிறியது
மோனாலிசா புகழ் அளவில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றது , ஆனால் உருவத்தில் அல்ல இந்த ஆயில்-ஆன்-வூட் பேனல் ஓவியம் வெறும் 30 இன்சு அகலம் 21இன்சு உயரம் மற்றும் 18 பவுண்டுகள் எடை மட்டுமே கொண்டது.
புருவங்கள் இல்லாத்து ஏன்
மோனலிசா ஓவியத்தை நீங்கள் சற்று உற்று பார்த்தால் அதற்கு புருவங்கள் இல்லாத்து உங்களுக்கு தெரியவரும். இந்த விஷயத்தின் புருவங்கள் இல்லாதது அக்காலத்தின் உயர்தர ஃபேஷனின் பிரதிநிதி என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
மற்றவர்கள் இந்த புருவங்கள் என்பது மோனாலிசா ஒரு முடிக்கப்படாத தலைசிறந்த படைப்பு என்பதற்கான ஆதாரம் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் 2007 ஆம் ஆண்டில், நவீன தொழில் நுட்பங்களுடன் அதனை ஆராய்ந்த போது ,
டா வின்சி புருவங்கள் மற்றும் கண் இமைகளை வரைந்திருப்பது தெரியவந்தது. இரண்டுமே காலப்போக்கில் மங்கிவிட்டன இதற்கு காரணம் பல வருடங்களாக செய்யபட்ட ஓவியத்தின் மறுசீரமைப்பு வேலைகள்தான்.
மோனலிசா ஓவியத்தின் மீது காதல்
இந்த உருவப்படம் முதன்முதலில் 1815 ஆம் ஆண்டில் லூவ்ரில் பொது காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மோனாலிசா ஓவியம் பெரும்பாலும் ஆண்களை வினோதமான செய்களை செய்ய வைத்துள்ளது என்றே கூறலாம்.
இந்த மோலிசா ஓவியம் அதற்கென்று ஒரு தபால் பெட்டியையே கொண்டுள்ளது ஏனெனில் இந்த ஓவியத்திற்காக ஆண்கள் வருடா வருடம் தங்கள் காதல் கடிதங்களை அனுப்புவார்களாம்.
மோனலிசா ஓவியத்தின் மர்மம்
1852 ஆம் ஆண்டில், Luc Maspero என்ற கலைஞர், பாரிசில் இருக்கும் ஒருஹோட்டலின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
அவர் இறக்கும்போது கூறிய கடைசி வார்த்தைகள் “பல ஆண்டுகளாக நான்அந்த ஓவியத்தின் புன்னகையுடன் மிகவும் சிரமப்பட்டேன். நான் இறக்க விரும்புகிறேன்”.
இதேபோல் 1910 ஆம் ஆண்டில், ஒரு ரசிகர் இந்த ஓவியத்தை பார்த்தபோது தன்னைத் தானே சுட்டுக்கொள்ள முன் வந்தார்.
மோனலிசா ஓவியத்தின் மதிப்பு
இந்த ஒரு மோனலிசா ஓவியத்தை யாராலும் வாங்கவோ விற்கவோ முடியாது இன்றைய மதிப்பில் இந்த ஓவியம் கிட்டதட்ட 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகின் விலையுயர்ந்த ஓவியங்களில் இதுவும் ஒன்று.
மோனலிசா ஓவியத்தின் புன்னகை
நீங்கள் மோனலிசா ஓவியத்தை உற்று பார்த்தால் அது சில சமயங்களில் சிரிப்பதுபோல் தோன்றும் சில சமயம் உங்களை முறைப்பதுபோல் தோன்றும்.
இதறுகு காரணம் மோனாலிசாவின் புன்னகை மாறாவில்லை , ஆனால் உங்களின் மனநிலைதான் மாறுகிற எனலாம்து. இந்த ஒரு விடயம் நீண்ட காலமாக கலைஞர்களையும் வரலாற்றாசிரியர்களையும் குழப்பமடைய செய்தது.
இதற்கு 2000 ஆம் ஆண்டில், ஹார்வர்ட் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் மார்கரெட் லிவிங்ஸ்டோன் மோனாலிசாவின் புன்னகை ஏன் மாறுகிறது என்பதற்கு ஒரு அறிவியல் ரீதியான விளக்கத்தை கூறினார். இதற்கு உங்கள் கவனம் எங்கே இருக்கிறது மற்றும் உங்கள் மூளை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது பற்றியது.
மரத்தால் ஆன ஓவியம்
லியோனார்டோ டா வின்சி ‘மோனாலிசா’வை மரப் பலகையில் ஆயில் பெயிண்டிங் பயன்படுத்தி வரைந்தார் என்பது நம்மை வியக்கவைக்கலாம்.
இந்த ஓவியம் 500 ஆண்டுகளுக்கும் மேலானது மற்றும் உலகின் மிகப் பழமையான கலைப்படைப்புகளில் ஒன்றாகவும் உள்ளது.
அந்த பெண் யார்
‘மோனாலிசா’ ஓவியமானது டாவின்சியின் பெண் பிம்பம் என்று மக்கள் கூறுகின்றனர். இருப்பினும், ஓவியத்தைப் பற்றிய மிகவும் பிரபலமான கோட்பாடு என்னவென்றால் அது புளோரன்ஸைச் சேர்ந்த இத்தாலிய பெண்மணி லிசா ஜெரார்டினியின் உருவப்படம் என்று கூறுகிறது.
மோனலிசா எதை வெளிப்படுத்துகிறது
‘மோனாலிசா’வின் உருவப்படம் 83% மகிழ்ச்சியாகவும், 9% வெறுப்பாகவும், 6% பயமாகவும், 2% கோபமாகவும் இருப்பதாக முகத்தை அடையாளம் காணும் நவீன மென்பொருள் கூறிகிறது.
இந்த பதிவில் மோனலிசா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கேள்விபட்டிருப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி!