ஆச்சரியமூட்டும் அண்டார்டிகா
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் 1800-களில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பனிகண்டமான மற்றும் இருண்ட கண்டம் என்று வர்ணிக்கப்படும் அண்டார்டிகாதான் பூமியிலேயே மிக மிக குளிரான பகுதி மனித உயிர்கள் நிலைத்து வாழ தகுதியான எந்த ஒரு சூழ்நிலையையும் கொண்டிராத இந்தப் பிரதேசத்தில் ஆச்சரியங்களும் மர்மங்களும் ஏராளமாய் உண்டு அப்படிப்பட்ட சில முக்கியமான ஆச்சரியமூட்டும் 10 தகவல்களை பற்றி காண்போம்.
அண்டார்டிகாவின் காலநிலை
இந்த உலகிலேயே மிகவும் வித்தியாசமான காலநிலையை கொண்டது அண்டார்டிகா எனலாம் அண்டார்டிகாதான் இந்த உலகின் மிகவும் வறண்ட,குளிரான, அதிக காற்று வீசக்கூடிய பகுதியாகும். இங்கு கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட எருமலைகள் உள்ளன.இந்த உலகில் இருக்கூடிய நண்ணீரில் 90% இங்குதான் உள்ளது. அண்டார்டிகாவின் பெரும்பகுதி பனிகளால் சூழபட்டிருக்கும் ஆனால் அண்டார்டிகாவின் !% பகுதிகளில் முற்றிலும் பனிகட்டிகளே இல்லாத பகுதி.
அண்டார்டிகா ஒரு பாலைவனம்
சூரியன் மறையாத அண்டார்டிகா
அண்டார்டிகாவில் வெறும் இரண்டு பருவங்கள் மட்டுமே உள்ளன.கோடைகாலம் மற்றும் குளிர்காலம். அண்டார்டிகா கோடையில் ஆறு மாத பகல் வெளிச்சத்தையும் அதாவது சூரியன் மறையாது , குளிர்காலத்தில் ஆறு மாத இருளையும் கொண்டுள்ளது அதாவது 6 மாதம் சூரியன் கண்களுக்கே தெரியாது இதற்குகாரணம் இது பூமியின் துருவ பகுதியில் அமைந்துள்ளதால் சூரிய ஒளி இதனை அடைவது கடினம் மற்றும் பூமியின் சாய்கோணமும் இதற்கு ஒரு காரணமாக கூறலாம்.
அண்டார்டிகாவின் இரத்த ஆறு
பார்ப்பதற்கு இரத்தம் போல் காட்சியளிக்கும் இந்த இரத்த ஆறு உண்மையில் இரத்தமா என்றால் கிடையாது இது பனிகளுக்கு அடியில் காணப்படும் அதிகபடியான சோடியம்தான் தண்ணீரை சிகப்பாக மாற்றுகிறது,
அண்டார்டிகாவின் விமான நிலையம்
கிட்டதட்ட அண்டார்டிகாவில் மட்டும் 40 மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளது என்பது நமைமை வியப்பில் ஆழ்த்தும் அதுமட்டுமல்லாமல் அண்டார்டிகாவில் இரண்டு நகரங்களும் உள்ளன.
அண்டார்டிகாவின் முதல் குழந்தை
இவரின் பெயர்தான் எமிலோ மார்கஸ் பால்மா மோரெல்லா இவர்தான் அண்டார்டிகாவில் பிறந்த முதல் குழந்தை 1978-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் அண்டார்டிகாவை ஆய்வு செய்யும்பொழுது இவர் பிறந்தார். இதனால் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
அண்டார்டிக் அடியில் அட்லாண்டிஸ் நகரமா
பெரும்பாலான மக்கள் அண்டார்டிகாவுக்கு அடியில்தான் கடல் நகரமான அட்லாண்டிஸ் உள்ளது என நம்புகிறார்கள். இதற்கான காரணம் அண்டார்டிக்கவிற்கு அடியில் வித்தியாசமான எலும்புகூடுகள் மற்றும் பொருட்களை ஆய்வாளர்களை கண்டறிந்தனர்.
அண்டார்டிக்காவில் வாழ்ந்த டைனோசர்கள்
1980-களில் ஆய்வாளர்கள் அண்டார்டிக்காவை ஆராய்ச்சி செய்யும்பொழுது டைனோசர்களின் படிமங்களை கண்டறிந்தன.அவர்கள் கண்டுபிடித்த படிமங்கள் கிட்டதட்ட 71 இலட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தது என கண்டறிந்தனர் . பண்டைய காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய பறவைகள் மற்றும் கடலில் வாழ்ந்த டைனோசர்கள் போன்ற மோனோ சாரஸ், பிளஸியோ சாரஸ் என்ற இனங்களின் படிமங்களை கண்டறிந்தனர் . இந்த கண்டத்தில் மட்டும் கிட்டதட்ட 200 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமி தோன்றிய காலத்தில் அண்டார்டிகா தற்போது இல்லை மிகவும் பசுமை நிறைந்ததாக இருந்தது அதன்பிறகு கண்டத்தட்டு நகர்வு காரணமாக தென்துருவம் நோக்கி சென்றதால் முழுவதும் பனியால் சூழப்பட்டுள்ளது.