இன்றைய பதிவில் இந்த உலகில் நாம் நிறைய நோய்களை கண்டிருப்போம் அவ்வாறு கண்டறியபட்ட நீங்கள் கேல்வியே படாத10 வித்தியாசமான நோய்கள்(10 rare disorder) பற்றி காண்போம்.இவை WORLD HEALTH ORGANISATION குறிப்பிட்ட அறிக்கையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
1.ஹைப்பர்தைமீசியா
source : pixabay
ஹைப்பர்தூமீசியா(HYPERTHYMESIA) என்பது ஒரு அரிதான நோய் இந்த நோய் ஒரு சிலருக்கு மட்டுமே வரும் . இந்த நோய் ஒரு வித்தியாசமான நோய் . நாம் சாதரணமாக ஒரு இரண்டு நாளைக்கு மும்பு என்ன செய்தோம் , சாப்பிட்டோம் என்பதை மறந்துவிடுவோம் ஆனால் இந்த நோய் உள்ளவர்கள் தாம் சிறுவயதிலிருந்து என்ன செய்தார்கள் என்பதை மறக்காமல் நினைவில் வைத்திருப்பாரகள். நாம் சற்றும் எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் ஞாபக சக்தி இருக்குமாம் . அதாவது இவர்கள் இரண்டு நாளைக்கு முன்போ அல்லது ஒரு மாத்திற்கு முன்போ என்ன நடந்தது என்பதை தெளிவாக கூறுவார்கள்.
அதாவது இவர்களின் ஞாபகம் அசாதாரணமாக இருக்கும் . இவர்கள் தாங்கள் சிறுவயதில் என்ன நடந்தது எனபதையும் தெளிவாக கூறுவார்கள் . அப்படியென்றால் இவர்கள் தேர்வில் படித்ததை மறக்காமல் எழுதிவிடுவார்கள் என்று என்னினால் அதுதான் கிடையாது .இது அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு மட்டும் சாத்தியமாகும். இவர்களின் ஞாபக சக்தி என்ன சாப்பிட்டார்கள், என்ன கலர் ஆடை போட்டிருந்தார்கள் என்பதை தெளிவாக கூறுவார்கள். அவர்களால் ஒரு நாளின் வானிலையை கூட தெளிவாக கூற முடியும்.
2.சாவந்த் சின்ட்ரோம்
சாவந்த் சின்ட்ரோம் என்ற நோயானது ஒரு அசாதரமான நோயாகும். இந்த நோய் உள்ளவர்கள் கணிதம் , இசை , ஓவியம் , ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். அதாவது கணிதம் எவ்வளவு கடிதமாக இருந்தாலும் எளிதில் பதில் அளிக்கும் திறமையுடையவர் அதுபோன்று இசையுலும் திறமையாகவும் ஓவியத்திலும் சற்று அதிக திறமை கொண்டும் இருப்பர். இவர்களின் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். இந்நோய் உள்ளவர்கள் ஒரு புது இடத்திற்கோ வெளிநாட்டிற்கோ ஒருமுறை சென்று வந்தாலும் அதை மறக்காமல் திரும்ப செல்லும் அளவிற்கு ஞாபகம் உடையவர்கள்.
3.பயம் அறியாதன்மை
பயம் அறியாதன்மை என்ற நோயானது ஒரு (rare disorder) விசித்திரமான நோயாகும். இந்த நோய் உள்ளவர்களுக்கு பயம் என்பது இல்லாத ஒன்றுதான் என்று கூறலாம். அதாவது இந்த நோய் உள்வர்களுக்கு பயம் என்பது கிடையாது .நாம் எப்போதாவது எதற்காகவாவது பயந்திருப்போம் ஆனால் இந்த நோய் உள்ளவர்கள் எந்த ஒரு விசயத்திற்கும் பயப்படமாட்டார்கள். இந்த நோய் உள்ள அமெரிக்க பெண்மனியை ஆய்வாளர் இருட்டறையில் வைத்து சோதித்த போது அவருக்கு பயம் எதுவும் தோன்றவில்லை என்பதனை ஆய்வின் மூலம் கண்டறிந்தனர்.
4.கல் மனிதன் நோய்
கல் மனிதன் என்ற நோயானது மிகவும் வியப்பூட்டக்கூடிய நோயாகும். இந்த நோய் உள்ளவர்களின் உடலில் எலும்பானது சாதரண மனிதரின் உடலில் இருக்கும் எலும்புகளை விட அதிகமாக இருக்கும் . அதாவது இவர்களின் உடலில் தசை நார்களெல்லாம் எலும்புகளாக மாறிவிடுமாம். இது இன்னொரு எலும்பு போல தோன்றுமாம் . இந்த நோய் உள்ளவர்களால் கைகளையோ , கால்களையோ அசைக்க முடியாது . சாப்பிடுவது கூட கடினம். இந்த நோய் ஒரு பரம்பரை நோயாகும்..
குளிர்ச்சின்மை என்பது ஒரு வியப்பூட்டக்கூடிய நோயாகும் . இந்த நோய் உள்ளவர்களுக்கு குளிரை உணரும் தன்மை என்பது கிடையாது . அதாவது நம்மால் குளிரில் 10 நிமிடம் கூட இருக்க முடியாது . ஆனால் இந்த நோய் உள்ளவர்களால் 1 மணி நேரம் கூட குளிரில் அசையாமல் உட்கார்ந்திருக்க முடியுமாம். அதாவது இவர்களால் குளிரை கொஞ்சம் கூட உணரமுடியாது. நெதர்லாண்டில் இதுபோன்ற நோய் உடைய ஒருவர் அதிக நேரம் பனியில் அமர்ந்து அனைவரையும் வியக்கச் செய்தார். இதனால் இவர்களால் குளிர் பிரதேசத்தில் எளிதாக வாழ முடியும்.
6.காட்டேரி நோய்
காட்டேரி நோய் இந்த நோய் கேட்கவே பயமாக இருக்கும் .இந்த நோய் உள்ளவர்கள் காட்டேரி போல் மாறிவிடுவார்கள் .அதாவது இவர்கள் காட்டேரிக்கு இருப்பது போல் இரண்டு பற்கள் உதட்டின் மேல் இருக்கும். இந்த நோய் உள்ளவர்களுக்கு முடி இல்லாமல் மொட்டையாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். இந்த நோய் உள்ளவர்களுக்கு வியர்வை என்பது வராது.
7.பாலிமெலியா
பாலிமெலியா நோய் இது ஒரு அசாதரமான நோயாகும் . நமக்கு சாதாரணமாக இரண்டு கால்கள் மற்றும் கைகள் இருக்ககும் ஆனால் இந்த நோய் உள்ளவர்களுக்கு அசாதரணமாக நான்கு கால்கள் , கைகள் இருக்கும். இதுபோன்று விரலில் கூட ஏற்படலாம் இது போன்று பாகிஸ்தானில் ஒரு குழந்தை 6 கால்களுடன் பிறந்தது
ஓணாய் நோய் என்பது புதிவித நோய் . இது ஒரு வியப்பூட்டக்கூடிய நோயாகும். இந்த நோய் பெயருக்கேற்றவாறே ஓணாயாக மாறிவிடுவார்கள் . அதாவது ஓணாய்க்கு எப்படி அதிக முடி உடலில் இருக்கும் அதுபோல இவர்களின் உடலில் முழுவதுமாக முடிகளாக இருக்கும். அதாவது சாதரணமாக மக்களுக்கு இருப்பது போல் அல்லாமல் சற்று அதிகமாக ஒரு ஓணாய்க்கு எப்படி முடி இருக்குமோ அதுபோல் இருக்கும்.
9.வெளிநாட்டு மொழி பேசும் வித நோய்
இந்த நோய் மிகவும் வித்தியாசமான வெளிநாட்டு மொழி பேசும் ஒரு வித நோய்அதாவது இந்த நோய் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு செல்லாமலே அந்த மொழியை பேசுவார்களாம். அதாவது அவர்கள் தெளிவாக பேசமாட்டார்கள் . அவர்கள் காதுகளால் கேட்ட வார்த்தையை பயன்படுத்தி மற்ற மொழிகளை பேசுவார்கள். அது தெளிவாகவும் இருக்காது . இது மூளைையில் பாதிப்பு ஏற்படுவதால் தோன்றுகிறது, இது நம் மூளையில் சேகரிக்கப்பட்ட ஒரு சில வார்த்தையை கொண்டு வேறொரு மொழியைை பேசுவார்கள்.