தங்களுக்கென சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது பலருக்கும் கனவாக இருக்கும். அப்படி சொந்த வீடு கட்டுபவர்கள் புதிதாக நிலம் வாங்கும்பொழுது, அந்த நிலத்தை சரியான முறையில் அளந்து, அந்த நில அளவுக்கு உட்பட்ட இடங்களில் தங்களுக்கான வீடு அல்லது பிற கட்டிடங்களை கட்டுவதில் மிக கவனத்துடன் செயல்படுவார்கள். தற்காலங்களில் பலருக்கு நிலத்தின் அளவீடு முறைகள் குறித்து சரிவர தெரிந்து கொள்வதில்லை.ஒரு நிலத்தின் பரப்பளவு, நீளம் ஆகியவற்றிற்கு ஏற்றார் போல அந்த நிலத்தின் அளவீடு அளவீடுகள் இருக்கும். சில சமயங்களில் நீல் வட்ட, முக்கோண வடிவங்களில் அளவீடு செய்யும் வகையில் சிலரின் நிலங்கள் மனைகள் இருக்கும். பொதுவாக சதுரமான அமைப்பில் உள்ள ஒரு நில மனையை சென்ட், சதுர அடிகள் போன்ற அளவீடுகளில் அளக்கிறார்கள். அந்த வகையில் நாம் இங்கு ஒரு சென்ட் இடத்திற்கு எத்தனை சதுர அடிகள் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி:
ஒரு சென்ட் என்பது 435.61 சதுர அடி ஆகும்.
இதையே ஆங்கிலத்தில் கூறவேண்டும் என்றால் 1 Cent = 435.61 square feet
1 சென்ட் = 435.61 சதுர அடி
2 சென்ட் = 871.2 சதுர அடி
3 சென்ட் = 1306.84 சதுர அடி
4 சென்ட் = 1742.46 சதுர அடி
5 சென்ட் = 2178.07 சதுர அடி
நில அளவை வாய்ப்பாடு என்பது நிலத்தை அளப்பதற்குரிய கணக்காகவும். பொதுவாக ஒரு நிலம் என்பது எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக சில நிலங்கள் சரியாக சதுர வடிவில் இருக்கும். சில நிலங்கள் செவ்வக வடிவிலும், இன்னும் சில நிலங்கள் முக்கோண வடிவில் கூட இருக்கும். வேறு சில நிலங்களில் ஒரு பக்கத்தின் நீளம் அதிகமாகவும் மற்றொரு பக்கத்தின் நீளம் குரைவாகவும் இருக்கும். இப்படி ஒரு நிலம் எந்த வடிவில் இருந்தாலும் அதை அளப்பதற்கு பயன்படுத்தும் கணக்கு தான் நில அளவை வாய்ப்பாடு. இந்த பதிவில் நாம் ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி என்பதை தெளிவாக கூறியுள்ளோம். இது போலவே ஏக்கர், ஹெக்டேர், ஸ்கொயர் ஃபீட் போன்ற ஆங்கில முறை நில அலகு மற்றும் அளவீடுகள் குறித்தும், காணி, குழி, பர்லாங், கஜம் போன்ற இந்திய முறை நில அலகு மற்றும் அளவீடுகள் .