நம்மில் பலருக்கு வியர்வை என்பது மிகவும் எரிச்சலுட்ட கூடிய ஒன்று வியர்வையுடன் பாக்டீரியா கிருமி ஒட்டிக் கொண்டு கடுமையான துர்நாற்றத்தை வீசசெய்கிறது வியர்த்த பிறகு உங்கள் முகத்தை சுத்தம் செய்யாவிட்டால் உங்களுக்கு முகப்பருக்கள் வரக்கூடும்.
தலையில் நிறைய வியர்க்கும் போது தலை முடியை கழுவ வேண்டி இருக்கும் .ஆடைகள் ஈரமாகி துர்நாற்றம் வீசும் எனவே பலரும் வியர்க்கவில்லை என்றால் இந்த தொல்லைகள் எதுவும் கிடையாது என நினைப்பதுண்டு சிலர் வியர்காமல் இருக்க எப்பொழுத்ம் ஏ சியிலேயே இருப்பதுண்டு .
ஆனால் வியர்க்காவிட்டால் உங்கள் உடலுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்
வியர்வை இல்லவிட்டாவிட்டால் உங்கள்தோலில் வறட்சி ஏற்படும் எனவே தோலை ஈரப்பதமாக வைத்திருக்க வியர்வை உதவுகிறது . வியர்வை பாக்டிரியா எதிர்ப்பு திறனை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
வியர்வையானது உங்கள் தோளில் உள்ள உள்ள நுண்ணிய துளைகள் வழியாக வெளியேறும்போது துளைக்குள் இருக்கும் பாக்டிரியாக்களையும் சேர்த்து வெளியேற்றி துளைகளை சுத்தம் செய்ய உதவுகிறது எனவே நீங்கள் வியர்ப்பதை நிறுத்தினால் தோலின் மேற்பரப்பில் உள்ள பாக்டிரியாக்கள் அப்படியே இருக்கும்.
சமீபத்திய வியர்வை பற்றிய ஆய்வுகள் வழக்கமாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் வெளியேறும் வியர்வையில் கணிசமான அளவு சோடியமும் வெளியேறுவதாக தெரிவிக்கிறது எனவே வியர்க்காவிட்டால் சோடியம் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரில் சென்று தேங்கி சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது.
மேலும் வியர்வை வழியாக சோடியம் வெளியேறுவதால் ரத்தத்தின் அளவு அதிகமாகிறது இது இதய நோய்க்கான அபாயத்தையும் குறைக்கின்றது எனவே நீங்கள் வியர்ப்பதை நிறுத்தினால் உங்களுக்கு சிறுநீரக கற்கள் மற்றும் இதய நோய் வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது மேலும் நீங்கள் வியர்க்காவிட்டால்உங்கள் உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உடலுக்கு அதிக சிரமம் ஏற்படுகிறது.
எனவே நீங்கள் வியர்க்காமல் இருக்க விரும்பினால் அது உங்களுக்கு தலைசுற்றல் தசைப்பிடிப்புகள் மற்றும் அதிக உடல் வெப்பத்தினால் ஏற்படும் நரம்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வியர்வை உடலுக்குள் இருந்து ஃபெரமான்ஸ் என்ற ரசாயனத்தை வெளிக்கொண்டு வருகிறது மற்ற நபர்களின் நடத்தையைப் பாதிக்கும் கொண்ட இது உடலுக்கு வெளியே ஹார்மோன்களை போல செயல்படுகிறது அதாவது ஆண்களின் வியர்வையை சில பெண்கள் ரசிப்பதற்கும் அவர்களின் மேல் ஈர்க்கபடுவதற்கும் இந்த ஃபெரமோன் ரசாயனம்தான் காரணமாகிறது.
உங்கள் துனையின் வியர்வை படிந்த சட்டையை நுகரும்போது மன அழுத்தத்தை குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது எனவே நீங்கள் வியர்ப்பதை நிறுத்தினால் இந்த பலன்கள் யாவும் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
நீங்கள் பயமாகமாக உணரும் போது அந்த சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை தயார்படுத்த உங்கள் உடல் வியர்கிறது மேலும் காரமான அல்லது சூடான உணவை சாப்பிடும்போது உடலை குளிர்விக்க வியர்வை சுரக்கிறது.
குறிப்பாக சொல்லபோனால் உங்கள் உடல் உங்களுடன் தொடர்புகொள்ள வியர்வையை பயன்படுத்துகிறது எனலாம் நன்றி!