ஜெயலலிதா வரலாறு
நாம் பல சாதனை பெண்களை பார்த்திருந்தாலும் நம் தமிழ்நாட்டில் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சாதனை பெண் ஜெயலலிதா ஆவார் அவரின் புகழ்மிக்க நடிப்பால் மக்கள் மனதில் கலந்தவர். இவர் அரசியலில் ராணியாக திகழ்ந்தவர் இவரின் அனல் பறக்கும் பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். ஒற்றை பெண்ணாக இருந்து ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்தவர். இவரை பற்றி இப்பதிவில் காண்போம்.
ஜெயலலிதா தாயார் வேதவல்லி தந்தை ஜெயராமன் இவர்களின் 2 வது குழந்தை தான் ஜெயலலிதா 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ம் நாள் கர்நாடகா மாநிலம் மைசூரில் பிறந்தார். இவர் 2வயது இருக்கும்போது தந்தையை இழந்துவிட்டார் ஜெயலலிதா . இவரின் தாய் மற்றும் தந்தை நடிகராக வெள்ளித்திரையில் இருந்தார்கள். பள்ளி படிப்பில் சிறந்து விளங்கினார் இவர் பரதநாட்டியத்திலும் இசையிலும் சிறந்து விளங்கினார். கர்நாடக சங்கீதத்தையும் கற்று கொண்டார். பள்ளியில் சிறந்து விளங்கினாலும் அதனை அவரால் தொடரமுடியவில்லை பாதியில் திரை உலகிற்கு வந்துவிட்டார். ஜெயலலிதா வாழ்வில் பல முடிவுகளை எடுத்தவர் அவர் அம்மா சந்தியா என்கிற வேதா ஆவார் இவரின் முடிவால் தான் திரைஉலகிற்கு வந்தார். பிறகு திரை உலகில் பெரும் நாயகியாக திகழ்ந்தார். எம் ஜி ஆர் உடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இவர் நடித்த மொத்த திரைப்படம் 115 இவரின் ஆங்கில திறன் சிறப்பாக இருந்தது.இவர் பல மொழிகளையும் கற்றவர். சிறந்த நடிப்பால் கலைச்செல்வி என்ற பட்டம் பெற்றார்.
ஆரம்பத்தில் ஜெயலலிதா நடிப்பு நாடகம் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தார் பிறகு தன் அம்மாவின் ஆசையால் திரையுலகிற்கு வந்தார் . இவரின் முதல் கன்னட படம் பெறும் பெறும் வெற்றியை பெற்றது பிறகு தமிழில் வெண்ணிறாடை என்ற படத்தின் மூலம் வெற்றியை கண்டு பிறகு எம் ஜி ஆர் உடன் நிடித்து திரை உலகில் கொடிகட்டி பறந்தார். தனது நடிப்பு திறமையாலும் சுறுசுறுப்பாலும் வெற்றியை கண்டார். பிறகு எழுத்து பத்திரிக்கை, நாடகம் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டினார். இவர் பல நேரங்களை ஆங்கில நாவலுடன் கழித்தார் எழுத்தும் பத்திரிக்கையுமாக இருந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்தார் எம் ஜி ஆர் .
அரசியலில் ஜெயலலிதா
1972 ல் அதிமுக ஆரம்பித்து 1974 ல் முதலமைச்சர் ஆனார் எம் ஜி ஆர் இவருடன் 1984 ல் ஜெயலலிதா இவருடன் இனைந்தார். முதலில் உறுப்பினராக இருந்தார். எம் ஜி ஆரின் சிறப்பான திட்டமான சத்துணவு திட்த்தின் பணியை ஜெயலலிதாவிடம் கொடுத்தார் . பிறகு கொள்கை பரப்பு செயலாலராக மாறினார். இவருடன் தோழியாக அப்போதுதான் சசிகலா இணைந்தார். இவர் தனது அதிகார எல்லையா அதிகரித்து கொண்டே இருந்தார். இவர் மீது பலர் கொண்ட கோபத்தால் பலர் செய்த சதியால் தனது கொள்கை பரப்பு செயலாளர் பதவி பறிபோனது. பிறகு 1984 ல் நடைபுற்ற தேர்தலில் இவரின் பிரச்சாரத்தாலே அதிமுக வெற்றி பெற்றது. மீண்டும் தனது பதவி கொள்கை பரப்பு செயலாளராக மாறினார் ஜெயலலிதா . பிறகு எம் ஜி ஆர் இறந்தார் அதிக வாக்கெடுப்பில் ஜானகி எம்ஜி ஆர் பதவிக்கு வந்தார்.அப்போது அதிமுக இரண்டாக பிரிந்தது ஒன்று ஜெயலலிதா பக்கம் மற்றும் ஜானகி அவ்கள் பக்கம் என இரண்டாக பிரிந்தது இதன் பிறகு ஜானகி அவர்கள் விலகிகொண்டார் பிறகு அதிமுக வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா ஆனார்.
1991 ல் தமிழக சட்டமன்ற தேர்தலுல் ஜெயலலிதா முதலில் முதலமைச்சராக மாறினார் பல திட்டகளை அமல்படுத்தினார் அவர் நிறைய சர்சைகளை சம்பாதித்தார் .ஜெயலலிதா சடமன்றத்தில் பலரால் தாக்கபட்டார். அவரின் புடவை இழுக்கபட்டது தலை கலைக்கப்படது இதனால் ஜெயலலிதா அவர்கள் இந்த சட்டமன்றத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறினார். இவர் மீது பல ஊழல் புகார்களை எதிர்கட்சி போட்டது பெண்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்தார். இவர் பல நன்மைகள் செய்தாலும் இவர் மீது ஊழல் வழக்கால் பல முறை ஜெயில் சென்று உள்ளார்.
பிறகு இவரின் மீது தொண்டர்கள் கொண்ட பற்றால் இவருக்கு அம்மா புரட்சுதலைவி என்றெல்லாம் அழைத்தனர் . ஐ நா சபையில் தொட்டில் குழந்தை திட்டத்தை பேசி கைதட்டு வாங்கிவர். இவரே தழிழ்நாட்டின் முதல் பெண் எதிர் கட்சி தலைவர் ஆவர். அதிமுக வில் ஜெயலலிதா தலமையில் சாதனைகள் பல படைத்துள்ளார்.
ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் பல சாதனைகளை செய்து பல முறை முதலமைச்சராக இருந்து பல சர்ச்சைகளை சமாளித்து சாதனை பெண்ணாக வாழ்ந்து காட்டி பல பெண்களுக்கு முன்னோடியாக இருப்பவர் ஜெயலலிதா ஆவார். இவர் பல நன்மை செய்து மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
Related: இந்தியா பற்றிய ஆச்சரியமான உண்மைகள்