மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் சின்ன சின்ன விஷயங்களுக்கும் பதற்றமாகி மூலையில் அமர்ந்து கொண்டு அதை பற்றி சிந்திக்க தொடங்கி விடுகிறார்கள். சிலர் தங்கள் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் குழந்தைகளின் கல்வியை நினைத்து பதற்றமடைகிறார்கள். இப்படி எல்லாவற்றுக்கும் மன அழுத்தம் கொண்டால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது என்பதே உண்மை.

அதிகம் யோசிக்காதீர்கள்:

உங்கள் பதற்றத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் காரணத்தை கண்டுபிடிக்க யோசித்தால், கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் உங்கள் நினைவுக்கு வரும். வேலை செய்பவர்களுக்கு வேலையை நினைத்து பதற்றம். பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் படிப்பை நினைத்து கவலை. மேல் படிப்பு படிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனை. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சொல்லலாம். எனவே எந்த விஷயத்திற்கும் பதற்றம் அடையாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

மகிழ்ச்சியாக இருங்கள்:

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது சற்று கடினம் தான். ஆனால், அது முடியாத காரியம் ஒன்றும் இல்லை. உங்கள் சுற்றுப்புறத்தை அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருப்பது பல பிரச்சனைகளை சரிசெய்யும்.

சண்டையை தவிர்த்திடுங்கள்:

சண்டை போடும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. அதனால் சண்டை வருவதற்கான ஒவ்வொரு காரணத்தையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை சண்டை வந்துவிட்டால், அந்த நேரத்திலும் நிதானமாக சிந்தித்து செயல்பட முயற்சி செய்யுங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள்:

பலரும் காலையில் எழுந்த உடனே முதலில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் மன அழுத்தத்தை விரட்டுவது தான். ஹோவர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல ஆராய்ச்சிகளில், தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலையும் மனதையும் முற்றிலும் அமைதியாக வைத்திருக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது.

பிடித்ததை செய்யுங்கள்:

சில நேரங்களில் நாம் சில வேலைகளை செய்த பிறகு நன்றாக உணர்வோம். அத்தகைய சூழ்நிலையில், மனதை நன்கு உணர வைக்கும் வேலைகளை நீங்கள் அடிக்கடி செய்யுங்கள். விரும்பமிருந்தால் வைரல் வீடியோக்களை பாருங்கள். பிடித்த திரைப்படங்களை பார்த்து ரசியுங்கள். இதுப்போல் பிடித்த விஷயங்களை செய்வதன் மூலமும் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

அடுத்து என்ன நடக்கும்? என்பதைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு நிகழ்காலத்தில் நடப்பதை ரசித்து அனுபவித்து வாழ தொடங்குங்கள். இதுவே மன அழுத்தத்தை குறைக்கும் மிகச் சிறந்த வழி.

Don’t STRESS

Do Your BEST

Forget the REST

… … …