பல ஆன்மீக வாதிகள் இருந்தாலும் அதிக விமர்சனங்களுடன் இருப்பவர்தான் நித்யானந்தா. இவர் பல சர்ச்சைகளுக்கு உள்ளானவர். இவர் 1978 ல் பிறந்தார் இவர் எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராஜசேகரன். இவர் சிறுவயதில் மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் கோவில், ஆன்மீகத்தை பற்றி தேடிகொண்டிருந்தார். தனது 12வது வயதில் புத்த பூர்னிமா தினத்தில் அருணாச்சல மர அடிவாரத்தில் உடலை தாண்டி பேராணந்த நிலையை அடைந்ததாக தனது சுயசரிதையில் குறிப்பி்டுள்ளார். நித்யானந்தாவிற்கு ஆரம்ப கால குரு ரகுபதி யோகி மற்றும் மதாஜி ஆவார்கள் இவர்களின் வழிகாட்டுதலில் ஆன்மீகத்தில் பயணத்தை தொடர்ந்தார். அதன்பிறகு ஆன்மீகத்திற்கே தன்னை அர்பனிக்க தொடங்கினார். தனது 17 வது வயதிலேயே வீட்டை விட்டு வெளிவந்து ஆன்மீகம் நோக்கி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார். இந்த காலகட்டத்தில் தான் நித்யானந்த தியானங்கள் பற்றி கற்க தொடங்கினார். அப்போதுதான் கேதர்நாத்தில் மகாஅவதார் பாபாஜி தனக்கு அவதாரம் அளித்ததாக அந்த பாபாஜி தான் பரமஹம்ச நித்யானந்தா என்று பெயர் வைத்ததாகவும் கூறுகிறார்.
நித்யானந்தா என்பதற்கு நித்யமான அல்லது பரிபூரனமான ஆனந்தம் என்பது பொருள் ஆகும். பரமஹம்சர்,சாரதாதேவி ஆகியோரை தனது குருவாக ஏற்றுகொண்டு திருவண்ணாமலை வந்தார். மக்களுக்கு அருளாசி சொல்லத் தொடங்கினார் இவரது புகழ் தென்னிந்தியா முழுவதும் பரவியது. பிறகு ஆசரமம் ஒன்று அமைத்தார். 2003 ல் முதல் ஆசரமத்தை பெங்களூருல் அமைத்தார். அந்த ஆசரமம் 20 ஏக்கரில் அமைக்கப்பட்டது. தனக்கு தெரிந்த ஆன்மீக உண்மைகளை மக்களுக்கு பரப்ப தொடங்கினார். தன்னிடம் வரும் சீடர்களுக்கு சிறப்பு தியானப் பயிற்சி சொற்பொழிவு போன்றவறை அளிக்க தொடங்கினார்.இவரது நித்யானந்தா ஞானபீடம் சொற்பொழவு கொடுக்க பணம் வசூழிப்பதாகவும் கூறப்படுகிறது இந்த கட்டணம் இலட்ச கணக்கில் உயர்ந்ததாகவும் கூறுகிறார்கள். இதன்பிறகு ஞானபீடம் பெருக ஆரம்பித்தது இது 33நாடுகளில் 1200 கிளைகள் திறக்கப்பட்டது இந்த நித்யானந்தா ஞானபீடம் பெரும் சாம்ராஜ்யமாக பெருகியது.
அமெரிக்காவில் உள்ள தியானபீடம் பல லட்ச மக்கள் வந்து செல்லும் அளவிற்கு செல்வாக்கை பெற்றதாக கூறப்படுகிறது. பலரும் நித்யானந்தாவை கடவுள் போல கருதினர் அதற்குஏற்றார் போல இவர் தன்னை சிவன் அவதாரம் என்றும் கிருஷ்ணனின் அவதாரம் என்றும் கூறினார் இவரை பல நட்சத்திரங்களை இவர் பக்தராக இருந்ந்துள்ளனர் பிறகு ஊடங்களிலும் வர தொடங்கினார் ஒரு பிரபலமான தொலைகாட்சியிலும் சொற்பொழிவு மற்றும் வார இதழில் சொற்பொழிவை வெளியிடுவது போன்றவற்றை வெளியிட்டார் . ஆன்மீக வழியில் வெற்றிகரமாக வளம்வர தொடங்கினார். இவரின் மடம் தமிழ்நாட்டின் மற்ற மடங்களை விட மிஞ்ச தொடங்கியது. இவருடைய பல வெளிநாட்டு பக்தர்களால் அதிக அளவு பணத்தை சம்பாதித்தார் இவரின் சொத்துமதிப்பு 1000 கோடியை தாண்டியது.
இவரின் சொத்துமதிப்பை ஊடகங்கள் கவனித்தது குறைந்த காலத்திலேயே இந்தியாவின் பல ஆன்மீக தளங்களுக்கு சவால் விடும் அளவிற்கு அபார வளர்ச்சியை குறுகிய சில ஆண்டுகளிலே பெறும் வளர்ச்சி அடைந்தார்.
பிறகு 2010 ல் நித்யானந்தா ஒருவருடன் தனியறையில் இருப்பது போல் ஓரு போட்டோ மற்றும் வீடியோ வெளிவந்தது. இவரின் சீடர்கள் இதனை கண்டு ஆச்சர்யமடைந்தனர் இதனால் இவர் மீது இருக்கும் நம்பிக்கை குறைய தொடங்கியது. இதனை கண்ட பலரும் இவரது மடத்தை அடித்து நொருக்கினர். ஒரே நாளில் நாடு முழுவதும் இவருக்கு எதிர்ப்பு தொடங்கியது. இவரின் படங்கள் கிளிக்ககப்பட்டது பல எதிர்ப்புகள் தோன்றி நீதிமன்றத்தில் மக்கள் நம்பிக்கையை ஏமாற்றியவர் என்று வழக்கு தொடங்கப்படது. பிறகு இவர் அந்த வீடியோவில் நான் இல்லை என்று கூறினார்.
ஆனால் நீதிமன்றத்தில் இவர் தான் அந்த வீடியோவில் இருந்தவர் என்று நிரூபிக்கப்பட்டது. இதனை எடுத்தது அவரின் கார் ஓட்டுனர் என்றும் அதனை அவரே ஒற்றுகொண்டதாகவும் கூறினார். நித்யானந்தா சிவனின் அவதாரம் என்றும் பிரம்மச்சாரி என்றும் கூறியது பொய் என்று நிரூபிக்கதான் வீடியோ எடுத்ததாக அவரின் கார் ஓட்டுனர் கூறியுள்ளார். நித்யானந்தா ஆஸ்ரம பெண்களிடம் தவறாக நடப்பதையும் அவர் கூறியுள்ளார். பல பெண் சீடர்களை பாலியல் துன்புறுத்துவதாகவும் பல செய்திகள் வந்துள்ளது.
பிறகு நித்யானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது இதனால் அவர் காணாமல்போனார் அப்போது இவர் ஆசரமத்தை போலிஸ் ஆய்வு செய்தபோது கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். பிறகு ஆசரமத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. பிறகு இவர் எவ்வாறு தியானபயிற்சி அளித்து துன்புறுத்தினார் என்பதும் ஊடகங்களுக்கு தெரியவந்தது. பிறகு கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டார் நித்யானந்தா. இவர் மீது பல பாலியல் வழக்கு தொடரப்பட்டது. இவரின் பாஸ்போட் எல்லாவற்றையும் தடை செய்தது ஆனாலும் தீர்ப்பு வரும் வேலையில் தப்பி சென்றுவிட்டார் நித்யானந்தா.
இவ்வாறு ஆன்மீகம் என்று சொல்லிக்கொண்டு மக்களை பலரும் ஏமாற்றுகிறார்கள் எனவே மக்கள் ஆன்மீகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இங்கு பலபேர் மக்களின் நம்பிக்கையை வைத்துதான் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள்!!!