டயாட்லோவ்பாஸ் மர்மங்கள்(Dyatlov pass mystery)
நம் உலகில் இதுவரை விடைதெரியாத பல்வேறு மர்மங்கள் உள்ளன அதில் ஒன்றுதான் இந்த DYATLOV PASS என்று கூறலாம் அதாவது ஒரு 10 கல்லூரி மாணவர்கள் மலையேறுவதற்காக செல்கி்ன்றனர் அதில் 9 பேர் மர்மமான முறையில் இறக்கின்றனர் இந்த நிகழ்வு நடந்து 60 ஆண்டுகள் ஆகியும் இவர்கள் எப்படி இறந்தார் என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது . இந்த DYATLOV PASS நிகழ்வை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் காண்போம்.
DYATLOV PASS தொடக்கம்
இந்த dyatlov pass நிகழ்வு ரஷ்யாவில் 1959-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இகோ டயாட்லாவ் என்கிற 23 வயது இளைஞனும் அவருடன் மற்ற 9 நண்பர்களும் ஒட்டோர்டன் என்கிற மலையேறுவதற்காக செல்கின்றனர். இதில் அனைவரும் யூரல் இன்ஸ்டியூட் என்கிற ரஷ்யாவில் உள்ள பல்கலை கழகத்தின் மாணவர்கள் ஆவர் .
இவர்கள் அனைவரும் தனது கல்லூரியில் உள்ள நண்பர்களிடம் நாங்கள் அனைவரும் மலைப்பகுதியை அடைந்தவுடன் செய்தி அனுப்புகிறோம் என்று கூறுவிட்டு அங்கிருந்து நீண்ட தூரம் உள்ள இந்த ஒட்டோர்டன் மலைப்பகுதிக்கு செல்கின்றர்,அதில் ஒருவருக்கு உடல்நிலை மோசமானதால் அவர் பாதிவழியிலே தன்னுடைய பொருட்களை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு திரும்பி செல்கிறார் அவரின்பெயர் யூரி யுடின் மற்ற 9 பேரும் மீண்டும் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
மேலும் படிக்க;மர்மங்கள் நிறைந்த பெர்முடா முக்கோணம்
இந்த 9 பேரை வழிநடத்துபவர் அதாவது தலைவர்தான் டயாட்லாவ் என்பவர், இவர்கள் பிப்ரவரி மாதம் இந்த ஒட்டோர்டன் மலைப்பகுதியை அடைகின்றனர் ரஷ்யாவில் பாதிக்கும் மேற்பட்ட ஆர்டிக்குடன் இணைந்திருக்கும் அதுமட்டுமின்றி இவர்கள் பிப்ரவரி மாதம் சென்றதால் அப்போது பனிபுயல் வீசிக்கொண்டிருந்து அதனால் அவர்கள் சற்று திசைமாறி சென்றுள்ளனர்.
இவ்வாறு இவர்கள் திசை மாற்றி சென்று அங்கு டென்ட் அமைத்துள்ளனர் இவர்கள் அமைத்த இடத்திற்கு பெயர் சாவுமலை என்று அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது. இதன்பிறகுதான் மர்மமே உள்ளது.
இதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்த ஒரு செய்தியும் அவர்களிடம் இருந்து வராரததால் அவர்களின் கல்லூரியில் உள்ள மற்ற மாணவர்களும் மலையேறும் வீரர்களும் இந்த 9 பேரை தேடிசெல்கின்றனர் அவர்களை பல நாட்கள் தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருவழியாக பிப்ரவரியின் இறுதி நாட்களில் அவர்கள் தங்கியிருந்த டென்டை கண்டுபிடிக்கின்றனர். அப்பொழுதுதான் அங்கிருந்தவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகிறது இந்த இடத்திற்கு அவ்வளவு எளிதாக யாராலும் வந்துவிட முடியாது ஏன் இங்கு வந்தார்கள் எப்படி இந்த இடத்திற்கு வந்தார்கள் என்பதும் அங்கிருந்த அனைவரையும் குழப்பமடைய செய்தது.
இந்த டென்ட் மிகவும் செங்குத்தான பகுதியில் அமைக்கபட்டிருக்கிறது இந்த மிகவும் சேதமடைந்து அதில் 15 செமீ வரை பனிகட்டிகள் பெய்து அதனை மூடிவிட்டது, அதுமட்டுமின்றி இந்த டென்ட்டை ஏதோ ஒன்று அதனுடைய நகங்களால் கிழித்துள்ளது என்பதையும் அந்த உயிரினம் இந்த டெனெடின் பின்பக்கத்தையும் கிழித்துள்ளது என்பதையும் கண்டறிகின்றனர்.
மேலும் படிக்க; மர்மங்கள் நிறைந்த நாஸ்கா கோடுகள்
இந்த டென்ட் இருந்த அருகில் ஒரு டார்ச் லைட்டை(TORCH LIGHT) கண்டறிகின்றனர் அந்த டார்ச் லைட்டின் மீது பனிகட்டிகள் 10 செமீ மட்டுமே பெய்துள்ளது இதிலிருந்து டெனெட் கிழிக்கபட்ட பிறகுதான் இந்த டார்ச் லைட் இங்கு வந்திருக்க வேண்டும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த டென்ட் இருந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இரண்டு பிணங்களை அவர்கள் கண்டறிகின்றனர் அந்த இரண்டு பிணங்களும் இவர்களின் நண்பர்கள் என்பதை உறுதி செய்கின்றனர் அந்த இரண்டு சடலங்களின் உடலில் உடையின்றி காணப்பட்டது இதை கண்ட அனைவருக்கும் பயம் தொற்றிகொண்டது.
அந்த பிணங்கள் இருந்த இடத்திலுருந்து சிறுதொலைவிலில் மேலும் 3 பிணங்களை கண்டறிகின்றனர் டென்டை நோக்கி வரும் வழியில் இவர்கள் இறந்து கிடந்துள்ளனர் பக்கத்தில் உள்ள மரத்தில் ஒரு சில கிளைகளும் உடைக்கபட்டிருந்தது இவர்கள் ஏதோ செய்ய நினைத்து மரக்களிளையை உடைத்திருக்கலாம் என்று அங்குள்ளவர்கள் யூகித்தனர் அதுமட்டுமின்றி அந்த மூவரும் தங்களுடைய ஆடையை மாற்றி அதாவது ஒருவருடைய ஆடையை மற்றொருவர் அணிந்திருந்தார் என்பதையும் கண்டறிகின்றனர்.
கிடைக்கபட்ட இந்த 5 பிணங்களிலும் காயங்கள் என்பது குறைவாகவே இருந்தது இருப்பினும் இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது மர்மமாக இருந்தது.அதன்பிறகு மீதமுள்ள நான்கு சடலங்களை யாராலும் கண்டுபிடிக்கவில்லை .
இந்த கிடைக்கபட்ட 5 சடலங்களின் முதற்கட்ட ஆய்வில் வல்லுனர்கள் என்ன கூறினார்கள் என்றால் இவர்கள் அவ்வளவு உயரத்தில் மலை ஏறும்பொழுதுஅங்குள்ள அதிகபடியான பனியின் காரணமாக அங்கிருந்த மனிதர்களுக்கு மனநிலை பாதிக்கபட்டு ஒருவரை ஒருவர் தாக்கியிருக்கலாம் என்கிறார்கள் இந்த மனநோயை ஹைபர்தெர்மியா என்று கூறுகின்றனர் ,இதன் காரணமாகதான் இவர்கள் இறந்தார்கள் என்றும் நம்பபடுகிறது .
மீதமுள்ள 4 பேரின் சடலம் 2 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கபட்டது இந்த நால்வரில் 3 பிணங்களி்ன் நாக்கு அறுக்கபட்டும் கறுவிழிகள் பிடுங்கபட்டும் அதுமட்டுமின்றி ஒருவரின் நெஞ்சு எழும்பு கடுமையாக உடைக்கபட்டும் இருப்பதை கண்டறிகிறார்கள். மற்றொரு பினம் பனியில் புதைக்கபட்டிருப்பதையும் கண்டறிந்தனர்.
அப்படியென்றால் இவர்களும் ஹைபோதெர்மியாவால் பாதிக்கபட்டிருப்பார்கள் என்றால் அதுவும் கிடையாது. ஏனெலில் இந்த 4 பேரும் சுயநினைவில்தான் இருந்துள்ளனர் என்பதை ஆய்வாளர்கள் சுட்டுகாட்டுகின்றனர் மற்றொரு விஷயம் இந்த நெஞ்சு எழும்புகளை இந்த அளவுக்கு உடைக்கும் அளவிற்கு மனிதனுக்கு சக்தி இல்லை அப்படியென்றால் இந்த நான்கு பேரை யார் கொண்றிருப்பார்.
இதற்கான விடை யாரிடமும் இல்லை என்றுதான் கூறவேண்டும் ஆனால் ஒரு சிலர் பல்வேறு கருத்துகளை முன்வைக்கி்ன்றனர். அதில் நிறைய முரண்பாடுகளும் உள்ளன . அந்த கருத்துகளை வரிசையாக காண்போம்
மேலும் படிக்க ; இலுமினாட்டிகள் இருப்பது உண்மையா
பனிப்புயல்
இந்த கருத்துகளில் முதலாவதாக கூறுவது மிகப்பெரிய பனிப்புயல் காரணமாகத்தான் இப்படி நடந்திருக்கும் என்று ஆனால் டென்ட் மீது விழுந்த பனியின் அளவு 15 செமீ மட்டுமே என்பதால் ஒரு மிகப்பெரிய பனிப்புயல் வீச வாய்பில்லை என்பது நிருபனமானது. பனிபயலால் எப்படி ஒருவரின் உடலில் கட்மையான காயங்களை ஏற்படுத்தமுடியும்.
பனிகரடிகள் மற்றும் விலங்குகள்
அப்படியென்றால் ஏதேனும் ஒரு விலங்கு இவர்களை தாக்கியிருக்கலாம் என்று யோசித்தால் அங்கு எந்த விலங்கும் வசிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது அப்படியே ஏதோ ஒரு விலங்கு இவர்களை கொண்றிருந்தால் அந்த உயிரினத்தின் கால்தடம் இருந்திருக்கும் ஆனால் இந்த பிணங்கள் கண்டுபிடிக்கபட்ட இடத்திலும் டென்ட் இருந்த இடத்திலும் அந்த 9 நபர்களின் கால்தடங்களை தவிர வேறு எந்தவொரு உயிரனத்தின் கால்தடமும் கிடைக்கவில்லை . எனவே இந்த கூற்றுக்கும் சரியான ஆதாரம் இல்லை
பழங்குடியின மழைவாழ் மக்கள்
இந்த பழங்குடியின மழைவாழ் மக்கள் இவர்கள் இருந்த மலைப்பகுதியில் இருந்தார்களா என்று கேட்டால் ஆம் இருந்தார்கள் அவர்களை மான்ஸி இன மக்கள் என்று கூறுவர் ஆனால் இவர்கள் இயற்கையாகவே சாதுவானவர்கள் என்று கூறப்படுகிறது.அப்படியே இவர்கள் கொண்றிருந்தால் இவர்களின் கால் தடமும் கிடைக்கவில்லை ஒரு மனிதனின் நெஞ்சு எழும்பை உடைக்கும் அளவிற்கு இவர்களிடம் வலிமையும் இல்லை எனவே இதற்கும் சரியான ஆதாரங்கள் இல்லை
ஏலியன்தான் கொலைசெய்ததா
இந்த கூற்று பெரும்பாலான மக்களால் நம்பபடுகிறது அது என்னவென்றால் இந்த 9 நபர்களும் ஏலியனுகளால் கொல்லபட்டிருக்கலாம் என்பதுதான் இந்த 9 நபர்கள் மலையேறிய அதே நேரத்தில் மற்றொரு குழு இதற்கு பக்கத்தில் உள்ள மலையில் மலையேறுகின்றனர் அப்பொழுது அவர்கள் இவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஒரு விசித்திரமான ஒளியை காண்கின்றனர் இதை அவர்கள் ஏலியனுகளாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
இதுபோன்று பல்வேறு கருத்துகள் இந்த DYATLOV PASS நிகழ்வில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது, இந்த 9 நபர்களும் இறந்துவிட்டார்கள் என்றால் இ்ந்த நிகழ்வு எப்படி வெளிவந்தது என்ற கேள்வி உங்களிடம் இருக்கலாம் இதற்கான விடை அந்த 9 நபர்களில் இருவர் கேமரா வைத்துள்ளனர் அதுமட்டுமின்றி அவர்கள் இறந்த இடத்தில் எடுக்கபட்ட வீடியோக்கள் அவர்களிடம் இருந்த டைரியில் குறிப்பிட்ட விஷயங்களை வைத்து குறிப்படுகிறோம்.
உண்மையில் இந்த 9 நபர்களை யார்தான் கொண்றிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
READMORE:பெர்முடா முக்கோணத்தின் மர்மங்கள்
நன்றி!