மாறிவரக்கூடிய தரித உணவு மற்று மனஅழுத்த வாழ்க்கை முறை.
அல்சர் அறிகுறிகள்:
1. அமில எதுக்கலிப்பு( Acid Reflection)
1. இரப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையே இசோபோக்கள் (ESophagus) ஸ்டாலின்டரர் வால்வு அமில அதிகரிப்பினால் பலவீனம் அடையும்போது வயிற்றில் உள்ள அமிலமானது உணவுக்குழாயின் மேல் நோக்கி வரும்.
2. ஏப்பம் அதிகமாக இருப்பது, சாப்பிட்ட உணவுப் பொருள் தொண்டை நோக்கி வருவது போன்றவை அல்சருக்கான முதல் ஆரம்ப அறிகுறி.
2.வயிற்று வலி (Stomach pain)

1. அல்சர் இருப்பவருக்கு மேல் மற்றும் நடு வயிற்று வலி ஏற்படும்.
2. சாப்பிட்ட உடனே வலி ஏற்பட்டால் இரைப்பையில் புண்கள் இருப்பதற்கான அறிகுறி. இது கேஸ்டிக் அல்சர் என்று அழைக்கப்படும்.
3. சாப்பிட்ட பின்பு 2,3மணி நேரம் கழித்து வலி குறைவது இவை முன் சிறுகுடலில் அல்சர் இருப்பதற்கான அறிகுறி.
4. வயிற்று வலி அதிகமாக இருப்பதும் அல்சரின் அறிகுறியே.
3. பசியின்மை ( NO Hungry)
1.அல்சர் இருப்பவருக்கு உணவு செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். இதனால் வயிற்றில் வாயுக்கள் அதிகரித்து வயிறுஉப்புதல், வயிறு மந்தநிலை போன்ற பிரச்சனைகள் காரணமாக பசி உணர்வு இருக்காது.
4. குமட்டல் மற்றும் வாந்தி

. 1. வயிற்றில் உள்ள அமிலத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் போது குமட்டலுடன் கூடிய வாந்தி ஏற்படும்.
2. காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் வாந்தி ஏற்படுவது சிறிது இரத்தத்துடன் கூடிய வாந்தி ஏற்படுவது போன்ற அறிகுறி அல்சருக்கான அறிகுறியே.
5. இரத்தசோகை(ANEMIA)
1. வயிற்றில் அதிக நாள் அல்சர் இருக்கும் போது வயிற்று சுவரில் உள்ள வில்லஸ் என்னும் குடல் உறிஞ்சிகளை சேதப்படுத்திவிடும்.
2. இதன் காரணமாக சாப்பிடும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சாமல் இரத்த உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் இரத்தசோகை ஏற்படும்.
6. நெஞ்செரிச்சல்
1. எரிச்சலுடன் கூடிய நெஞ்சு வலி இடது நெஞ்சின் அடிப்பகுதியில் குத்துதல் போன்ற உணர்வு மார்பு பகுதி பாரமாக இருப்பது போன்ற அறிகுறி இரப்பை மற்றும் உணவு குழாயில் அல்சர் இருப்பதற்கான அறிகுறி.
2. இதயம் பாதிப்பின் அறிகுறி போன்றே இருக்கும் ஆனால் அல்சர் இருக்கும்போதும் நெஞ்செரிச்சல் ஏற்படும்.
7. திடீர் எடை குறைதல் ( Sudden Weight Loss)

வாய்க்குழி மற்றும் உணவுக்குழாயில், அல்சர் இருக்கும் போது, உணவை விழுங்கும்போது அதிக வலி ஏற்படும் அதுமட்டுமல்லாமல் அல்சரினால் ஏற்படும் செரிமான பாதிப்புகளினால் உணவு சரியாக சாப்பிட முடியாது இதன் காரணமாக தேவையான சத்து கிடைக்காமல் உடல் எடை குறையும்.
8. அதிக உமிழ்நீர் சுரப்பது( Hyper Saliva)
வழக்கத்தைவிட அதிகமான உமிழ்நீர் சுரப்பது அல்சருக்கான அறிகுறியாகும். GERD என்னும் அமில எதுக்களிப்பு அதிகமாக இருக்கும் போது வாயில் உமிழ் நீர் சுரக்கும். இரவு தூங்கும் போதும் அதிகமான உமிழ்நீர் சுரக்கும் இது பெப்டிக்(Peptic) அல்சருக்காண அறிகுறி.
9. மலம் கருப்பாக வெளியேறுவது (Black Stool)

1. வயிற்றின் உட்சுவரில் அதிக நாள் அல்சர் இருக்கும் போதோ, அல்லது அல்சர் அதிகமாக இருக்கும் போதோ வயிற்றில் உள்ள புண்களில் இருந்து இரத்தம் கசிந்து உணவுடன் கலந்து வெளியேறும் போது கருப்பாக இருக்கும்.
2. மலத்திலும் ஆங்கிலோ இரத்தக்கசிவு இருப்பது அல்சருக்கான அறிகுறிகள்.
தொடரபுடயவை:உடல் எடை குறைக்க இத பண்ணுங்க