தைப்பூசம்

தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸாமாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.

2.முருக்கப்பெருமானுக்கு கொண்டாடப்படும் விழா

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.இது கேரளாவில் தைப்பூயம் என்று அழைக்கப்படுகிறது.

3.கடைப்பிடப்போர் இந்துக்கள்
4.முக்கியத்துவம் முருகனின் பிறந்தநாள்
5.தொன்மையான வழிபாடு

முருகன் வழிபாடு தமிழ்ச்சமூகத்தின் தொன்மையானவழிபாடு. சங்க இலக்கியத்திலேயெ முருகன் வழிபாடு பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. தொன்றுதொட்டு பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பூச நாளில் ‘வேலன் வெறியாட்டு‘ என்ற முருக வழிபாடு, ஆண், பெண் என்ற இருபாலரும் வேல் பிடித்து ஆடிய செய்திகளை சங்கத் தமிழ் தகவல்கள் கூறுகின்றன. அத்தகைய பழந்தமிழ்த் திருவிழாவான தைப்பூசத்தின் மகத்துவங்கள் குறித்த இங்கு தியானிப்போம்.

6.சிறப்புகள்
  • முருகன் தமிழ்க்கடவுள் ஆவார். முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
  • சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

7.சிறப்பம்சங்கள்
  • தை மாதம் 5ம் தேதி தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது.
  • சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் மூலம் முருகப்பெருமான் தோன்றினார்.

தைப்பூசம் எதற்காக கொண்டாடுகிறோம்?

அது ஸ்கந்தனின் கதை. புராணங்களின் கூற்றுப்படி, ஸ்கந்தனுக்கு தைப்பூசத்தன்று அவனது ஆயுதம் கிடைத்ததால், அவன் வெற்றிகரமாக இருந்தான். இறுதியில், அவனது நோக்கம் சரியல்ல என்ற உணர்தலை அவன் அடைந்தான். அவன் தன் நோக்கத்தில் தோல்வியடைந்ததால்… உலகின் மற்ற எந்த நிலப்பகுதியாக இருந்திருந்தாலும் அவன் தோல்வியடைந்த ஒருவனாகத்தான் கருதப்பட்டிருப்பான். ஆனால் இந்தக் கலாச்சாரத்தில், பொருள்ரீதியான விஷயங்களையோ, அவன் அடைந்த வெற்றிகளின் எண்ணிக்கையையோ அல்லது அவனது நோக்கம் முழுமை பெறாமல் போனதையோ கருதாமல், அவன் தன்னையுணர்ந்த பேருண்மையை, ஒரு மகத்தான வெற்றியாக நாம் கருதுகிறோம். தென்னிந்தியா முழுவதும் அவனது தந்தை சிவனைவிட, இவனை அதிகமாக வழிபடுகின்றனர்.

வெற்றியடைதல் குறித்த நமது கருத்து, கைப்பற்றுவது அல்ல. வெற்றி குறித்த நமது கருத்து என்னவென்றால், விரிவடைந்து நம்மை நாமே கரைத்துக்கொள்வது. இது பக்தி விளைந்த மண். பக்தியின் இலக்கு கரைந்துபோவது. கரைதலுக்கான ஒரு வழியாக நாம் வேறு ஏதோ ஒரு பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால் பக்தியின் அடிப்படையான நோக்கம் கரைந்துபோவது. ஒரு புனிதயாத்திரையைத் தொடங்குவதற்கு, தைப்பூசம் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இயன்றவரை ஒவ்வொரு வழியிலும் நம்மை நாமே குறைத்துக்கொள்வதற்கு புனித யாத்திரை, ஒரு செயல்முறையாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் பழனிமலை மீதும், மற்றும் பல இடங்களிலும் இருக்கும் முருகன் கோவிலுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் பாதயாத்திரை செல்லும் மக்களைக்கொண்ட, துடிப்பான புனிதயாத்திரைக் கலாச்சாரம் இன்னமும் தென்னிந்தியாவில் இருக்கிறது.

பக்தி என்பதெல்லாம் எதைக் குறித்தது?

பக்தியின் இலக்கு கரைதல். நீங்கள் உடலைக் கரைப்பதற்காகத் திட்டமிடவில்லை. தற்போது நீங்கள் என்று கருதும் அனைத்தையும், விருப்புகள் மற்றும் விருப்பமின்மைகள், வெறுப்புகள் மற்றும் நேசங்கள், ஆச்சரியங்கள் மற்றும் அருவெறுப்புகள் என்று எல்லாவற்றையும் கரைப்பது. உங்களுடைய இயல்பு, தன்மை, குணம் என்று நீங்கள் கருதிக்கொண்டிருக்கும் அனைத்தையும் நீங்கள் கரைத்தால், மற்றும் வாழ்வின் இருப்பை நீங்கள் நினைக்கும் விதத்தில் பார்க்காமல், வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அப்படியே நீங்கள் பார்த்து, உணர்ந்து, அனுபவித்தால், அப்போது நீங்கள் அருளுக்குப் பாத்திரமாக இருப்பீர்கள். இந்த அருள் உங்களுக்கு வாய்த்துவிட்டால், நீங்கள் ஒரு சூப்பர் மனிதர், அதிபராக்கிரமசாலி என்று மற்றவர்கள் நினைக்குமளவுக்கு நீங்கள் வாழ்வீர்கள். ஆனால் இவையெல்லாம் சூப்பர் மனிதராக இருப்பது குறித்த விஷயமல்ல. மனிதராக இருப்பது சூப்பரானது என்று உணர்ந்துகொள்வதைக் குறித்தது.

இந்தக் கலாச்சாரத்தில், சூப்பர் மனிதர் என்பது இல்லை. கலாச்சாரத்தின் எல்லா அம்சங்களும், மனிதர்கள் கடவுளைப்போல ஆவதற்கு, உயர்வடைவதைக் குறித்தே இருக்கின்றன. நீங்கள் வழிபடுவது கிருஷ்ணன், ராமன், சிவன் அல்லது முருகன் என்று யாராக இருப்பினும், அவர்கள் அனைவரும் இந்த நிலத்தில் உயிர் வாழ்ந்து, வாழ்க்கையின் எல்லா வலிகள் மற்றும் போராட்டங்களையும் அனுபவித்தனர். ஆனால் இன்றைக்கு, நீங்கள் அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கடவுளைப்போல் இருக்கின்றனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்கள் சொர்க்கத்திலிருந்து இறங்கவில்லை. அந்த மாதிரி உயர்வடைய, நீங்கள் விரும்புவதற்கான ஒரு ஊக்கசக்தியாக அவர்கள் இருப்பது மிகவும் முக்கியமானது.

வாழ்க்கைக்கும், அதைக் கடந்து இருப்பதற்கும் எப்படித் தகுந்தவராக இருப்பது?

தேவி வித்தியாசமானவள் – நாம் அவளை உருவாக்கினோம், ஏனென்றால் கடவுளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை நாம் புரிந்துகொண்டோம் – அதனை வெறுமனே ஒரு உணர்ச்சிரீதியான கருவியாக மட்டும் இல்லாமல், பிரமிக்கத்தக்க ஒரு சக்தி உருவாக்கமாக வெளிப்படுத்தினோம். தேவி உங்களுக்கு அற்பமான அதிசயங்களைச் செய்யமாட்டாள். இன்றைக்கு நீங்கள் மரணமடைய வேண்டும் என்றாலும், நீங்கள் விருப்பத்துடன் செல்லும் விதத்தில், அவள் உங்களை உயிர்த்தன்மையுடன் தளும்பச் செய்வாள். அதற்காக நீங்கள் இறப்பதற்கு விரும்புகிறீர்கள் என்பதல்ல. நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது, உங்கள் உடலமைப்பை நீங்கள் நன்றாக வைத்திருப்பதால்தானே தவிர, நீங்கள் வாழவேண்டும் என்று விரும்புவதால் அல்ல. உங்களுக்கு வெற்றி தருவது உங்களது தகுநிலைதானே தவிர, உங்கள் ஆசையினால் அல்ல. தேவி உயிர்த்தன்மையுடன் உச்சபட்ச ஒத்திசைவுடன் இருக்கிறாள். உங்கள் விருப்பங்கள் என்ன என்பதில் அவள் அக்கறை காட்டுவதில்லை. இந்த வாழ்வுக்கும், அதைக் கடந்திருப்பதற்கும் உங்களை எப்படித் தகுதியான நபராக்குவது என்பதைத்தான் தேவி பார்க்கிறாள், அதுவே முக்கியமானது.